என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும்.
    • கேஸ் சிலிண்டர் பில்லுக்கான முழு தொகையை வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நுழைவாயிலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மே மாதம் விடுமுறை வழங்கும் கோரி காத்திருப்புப் போராட்டத்தை துவங்கி நடத்தி வருகின்றனர்.

    மாவட்டத் தலைவர் பழனியம்மாள் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும், கேஸ் சிலிண்டர் பில்லுக்கான முழு தொகையை வழங்கிட வேண்டும், 10 வருடம் பணிபுரிந்த பணியாளர்க ளுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி வைத்து போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் 500க்கும் மேற்ப ட்டோர் ஈடுபட்டு ள்ளனர். தொடர்ந்து போராட்டம் நடை பெற்று வருகிறது.

    • வருகிற மே மாதம் 1-ம் தேதி திருக்கல்யாணமும், 3-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
    • சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கலில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை யொட்டி நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம்,நவக்கிரக ஹோமம், தனபூஜை நடைபெற்றது.

    மாலையில் வாஸ்து சாந்தி, அங்கரார்ப்பணம், ரிஷபந்த னம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை பஞ்சமூர்த்தி வீதி உலாவும் அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமகா சன்னிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள், கோவில் செயல் அலுவலர் முருகன்,தக்கார் தனலெட்சுமி ஆலய திருப்பணி குழுவினர், திருமருகல் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே மாதம் 1-ம் தேதி திருக்கல்யாணமும், 3 -ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

    • மின்னல் தாக்கி 5 ஆடுகள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தன.
    • லதா, தான் ஆசையாய் பராமரித்து வந்து ஆடுகள் இறந்து விட்டதே என்ற அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி பகுதியை சேர்ந்தவர் வீரையன். இவரது மனைவி லதா (வயது 40).

    இவர்கள் சொந்தமாக 10 ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று இரவு ஆடுகளை வீட்டின் பின்புறம் கட்டி வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி 5 ஆடுகள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தன.

    இதனை பார்த்த லதா, தான் ஆசையாய் பராமரித்து வந்து ஆடுகள் இறந்து விட்டதே என்ற அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வாய்மேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தீமிதி திருவிழா கடந்த 16-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய செல்லமுத்து மாரியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே தேவூரில் பிரசித்தி பெற்ற செல்லமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 16 -ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது மாரியம்மன், மணிமண்டபத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அதன் பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய செல்ல முத்து மாரியம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • ரூ.20 ஆயிரம் மட்டுமே வாடகை பேசியதால் கூடுதலாக கட்டணம் தர முடியாது.
    • 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சென்னை கொளத்தூரை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தனது உறவினர்கள் 10 பேருடன் ஏலக்குறிச்சி அடைக்கல மாதா கோவில், பூண்டி மாதா கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்று விட்டு இறுதியாக உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வந்தார். அப்பொழுது சுற்றுலா வேனிற்கு பாண்டிச்சேரி பர்மிட் இல்லை என ஓட்டுனர் அசோக்குமார் கூறி அதற்கு ரூ.2000 கூடுதலாக கட்டணம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வாடகை பேசியதாலும் கூடுதலாக கட்டணம் தர முடியாது என ஹரிஹரன் தரப்பினர் கூறியுள்ளனர் .

    இது குறித்து ஓட்டுனர் தனது வேன் உரிமையாளரிடம் கூறியுள்ளார். அதை அடுத்து வேளாங்கண்ணி கார் ஓட்டுனர்கள் சங்கத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஹரிஹரன் தங்கியுள்ள விடுதிக்கு சென்று ரூ.2000 கூடுதலாக கொடுக்க வேண்டும் என வாக்குவா–தத்தில் ஈடுபட்டனர். இதில் ஹரிஹரன் தரப்பினர் கார் ஓட்டுனர்களை தாக்கியதாக கூறப்படுகிறது . சுமார் 20 பேர் கொண்ட கார் ஓட்டுநர்கள் வந்து ஹரிஹரன் தரப்பினரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

    இதில் இரண்டு தரப்பிலும் தாக்கிக் கொண்டதில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட இரண்டு தரப்பிலும் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.

    இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திட்டச்சேரி பஸ் நிலையத்தில் பிரச்சார வாகனத்தை வரவேற்கும் நிகழ்ச்சி நடைெபற்றது.
    • திருக்கண்ணபுரம், கோட்டூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பில் நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் என்ற பிரச்சார வாகனத்தை நாகையில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். பிரச்சார வாகனம் நேற்று முன்தினம் திட்டச்சேரி வந்தடைந்தது. திட்டச்சேரி பஸ் நிலையத்தில் பிரச்சார வாகனத்தை வரவேற்கும் நிகழ்ச்சிநடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார்.வட்டார கல்வி அலுவலர்கள் ரவி,ஜெயந்தி,வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு)சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திட்டச்சேரி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வேம்பு வரவேற்றார். இதில் தமிழக அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள்,நலத்திட்ட உதவிகள் மற்றும் இட ஒதுக்கீடு பயன்பாடுகள் ஆகியவற்றை விளக்கி மாற்று ஊடக மைய யாழிசை கலைக்குழுவினரால் பிரச்சாரம் செய்யப்பட்டது.

    இதில் ஆசிரியர்கள் நடராஜன், பிரபாகரன், பொற்கொடி, அகல்யா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.தொடர்ந்து வாகனத்தில் திருமருகல், திருச்செங்காட்டங்குடி,திருக்கண்ணபுரம், கோட்டூர்,வடகரை உள்ளிட்ட பகுதிகளிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

    • சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது.
    • தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அகரவெளி சுப்பிரமணியன் என்பவரது வீட்டு கொல்லையிலுள்ள வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எறிய துவங்கியது.

    இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக நீரை கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர் இருப்பினும் தீ மளமளவென பரவி சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது.

    தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேளாங்கண்ணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் நீரை பீச்சு அடித்து தீயை அணைக்க முற்பட்டனர்.

    தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய நிலையில் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மின் கம்பியில் அந்த பகுதியில் உள்ள தென்னை மரத்தில் உரசியதில் ஏற்பட்ட தீ வைக்கோல் போரில் பற்றியதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து மின் கசிவு ஏற்பட்ட இடத்தில் திருக்குவளைத் துணை மின் நிலைய பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருக்குவளை அருகே மின் கசிவு காரணமாக வைக்கோல் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் போராட்டக்காரர்களை தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேலை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் அருகே வாஞ்சூர் ரவுண்டானாவில் இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தலை தடுக்கும் வகையில் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அங்குள்ள 4 சாலைகளில் 2 சாலைகள் ஒருவழி பாதையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் சாலை வளைவில் திரும்ப முடியாமல் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.

    இந்நிலையில், கும்பகோணத்தில் இருந்து நாகை வந்த 2 அரசு பஸ்கள் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்ததால் அவ்வழியாக செல்ல முடியாமல் நீண்ட நேரம் பயணிகளுடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை தடுப்புகளை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் போராட்டக்காரர்களை தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    அதனை தொடர்ந்து, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேலை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

    • குவாரி அமைக்கப்பட்டு பொக்லைன் எந்திரங்களை கொண்டு மண் எடுக்கப்பட்டு வருகிறது.
    • அரசு அனுமதித்த 2 மீட்டர் ஆழம் வரைதான் மண் எடுக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே மத்தியக்குடியில் விவசாய நிலங்களுக்கு மையத்தில் குவாரி அமைக்கப்பட்டு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு மண் எடுக்கப்பட்டு வருகிறது.

    இங்கு எடுக்கப்படும் மண் குத்தாலம்,திட்டச்சேரி வழியாக பனங்குடி பகுதியில் நடைபெற்று வரும் 4 வழிச்சாலை அமைப்பதற்காக கொட்டப்பட்டு வருகிறது.

    ஆனால் இந்த குவாரியில் அரசு அனுமதித்ததை விட கூடுதலாக மண் எடுப்பதாகவும், இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து நாகை புள்ளியியல் துறை உதவி புவியியலாளர் சேகர், தா சில்தார் ராஜசேகர் மற்றும் அலுவலர்கள் மத்தியக்கு டியில் உள்ள குவாரிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது உதவி புவியியலாளர் சேகர் கூறியதாவது:-

    மத்தியக்குடியில் உள்ள குவாரி மாநில சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது.

    இங்கு எடுக்கப்படும் மண் 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

    அரசு அனுமதித்த 2 மீட்டர் ஆழம் வரைதான் மண் எடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே மண் எடுத்து கரையில் வைக்கப்பட்டுள்ளது.

    அதிலிருந்து பார்க்கும்போது ஆழமாக தெரிகிறது.

    எனவே அதை உடனடியாக அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அரசு விதிகளுக்கு உட்பட்டுதான் மண் எடுக்கப்பட்டுள்ளது.

    விதிமுறை மீறல்கள் எதுவும் இல்லை என்றார்.

    • புஷ்ப பல்லக்கில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த செல்லமுத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ள ஆலயத்தின் சித்திரை திருவிழா கடந்த 16-ம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது தினந்தோறும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்று வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புஷ்ப பல்லக்கில் செல்லமுத்து மாரியம்மன் வீதியுலா நடைபெற்றது.

    சுமார் 1 டன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் செல்லமுத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • குளத்தில் மீன் பிடித்த போது வலையில் முதலை சிக்கியது.
    • அதனை பிறகு குளத்திலேயே விட்டு விட்டு சென்று விட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காட்டில் சுமார் 5 ஏக்கரில் புதுக்குளம் அமைந்துள்ளது.

    இந்த குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலை இருப்பதாக தகவல் பரவியது.

    இதையொட்டி கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேதாரண்யம் தீயணைப்பு துறையினர் புதுக்குளம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இந்த குளத்தில் திருட்டுத்தனமாக ஒரு சிலர் மீன் பிடித்த போது வலையில் முதலை சிக்கியதாகவும், அதனை பிறகு குளத்திலேயே விட்டு விட்டு சென்றதாகவும் தகவல் கிடைத்தது.

    இதையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர், இந்த குளத்தில் முதலை இருப்பதால் பொதுமக்கள் குளத்தில் இறங்க வேண்டாம் என குளத்தின் அருகே எச்சரிக்கை பலகை வைத்தனர்.

    தொடர்ந்து, இந்த குளத்தை கண்கா ணித்து வருவதாகவும் வனத்துறை அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.

    • குரவப்புலம் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதல் 2 இடங்களை பிடித்தனர்.
    • தேர்வில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    தேசிய வருவாய் வாரியான திறனாய்வு தேர்வில் வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் சீதாலெட்சுமி உயர்நி லைப்பள்ளி மாணவர்கள் விஸ்வபாலா 123/180 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதலிடமும், ஆகாஷ் 119/180 மதிப்பெண்கள் எடுத்து 2-ம் இடமும் பிடித்தனர்.

    மேலும், சஞ்சய், ஈஸ்வரன், மணியரசன், காவியா, கீர்த்தனா உள்ளிட்ட மாணவ- மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    மேலும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வில் சீதாலட்சுமி, பத்மஸ்ரீ, பவித்ரா, அர்ஜித், அற்புதம், ஜெயசுதன் ஆகிய மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்வில் வெற்றிபெற்ற மாணவ மாணவ- மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

    விழாவில் பள்ளி செயலாளர் கிரிதரன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் பப்பிதாபானு, சீதாலெட்சுமி உதவி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கருணாநிதி மற்றும் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×