என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேவூர் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
- அம்மனுக்கு மஞ்சள், பால் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே தேவூரில் பழமைவாய்ந்த ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சித்திரைப் பெருவிழா பூச்சொரிதலுடல் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் நடைபெற்றது. 30அடி உயரமுள்ள செடில் மரத்தில், வேண்டுதல் நிறைவேற 600க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை செடிலில் வைத்து, தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.
முன்னதாக அம்மனுக்கு மஞ்சள் பொடி, பால், தயிர், திரவிய 14 வகையான திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் வீதியுலா வந்து பக்தர்கள் அருள் பாலித்தார்.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story