என் மலர்
நாகப்பட்டினம்
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கியை கைப்பற்றி ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
- ராஜேஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் துறைமுகத்தின் உள்ளே இந்திய கடற்படை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 27) போலீசாக பணியாற்றி வந்தார். இவர் நேற்றிரவு வழக்கம் போல் கடற்படை அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் ராஜேஷ் திடீரென தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியால் தன்னை தானே கழுத்தில் சுடதொடங்கினார் சத்தம் கேட்டு கடற்படை அலுவலகத்தில் இருந்த சக போலீசார், ஊழியர்கள் ஓடி சென்று பார்த்தனர். அங்கு துப்பாக்கியால் சுட்டபடி ராஜேஷ் தற்கொலை செய்து பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து நாகை நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கியை கைப்பற்றி ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் ராஜேஷ் பணிச்சுமை காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமா?என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தற்கொலைக்கு பயன் படுத்திய துப்பாக்கி 30 குண்டுகள் கொள்ளளவு கொண்ட இன்சாஸ் வகையை சேர்ந்தது. அதனை வைத்து கழுத்தில் சுட்டத்தில் ஒரு குண்டு துளைத்து ராஜேஷ் பலியானது தெரிய வந்தது. தொடர்ந்து ராஜேஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தண்டாளம் வடிகால் வாய்க்கால் 3 ஆயிரம் மீட்டர் வரை உள்ளது.
- இந்த வாய்க்காலின் படுக்கை தளம் 3 மீட்டர் ஆகும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி தென்பிடாகை வடிகால் வாய்க்கால் மற்றும் தண்டாளம் வடிகால் வாய்க்கால் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நீர்வளத்துறை காவிரி வடிநில உட்கோட்டம் நன்னிலம் கட்டுப்பாட்டில் உள்ள பாசன பிரிவு எண் 1 திருமருகல் பராமரிப்பில் இருந்து வரும் திருமலைராஜன் ஆறு, முடிகொண்டன் ஆறு,நரிமணியாறு,ஆறுகள் மற்றும் ஆறுகளில் கலக்கும் வடிகால்கள் பாசன பிரிவு எண்-1 திருமருகல் பராமரிப்பில் இருந்து வருகிறது. தென்பிடாகை வடிகால் வாய்க்கால் 3000 மீட்டர் வரை மற்றும் தண்டாளம் வடிகால் வாய்க்கால் 3000 மீட்டர் வரை உள்ளது. கிராமத்தில் இவ்வடிகால் வாய்க்காலின் மூலம் தென்பி டாகை,தண்டா ளம் கிராமத்தில் 471 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன பெறுகின்றது.
இவ்வாய்கா லின் படுக்கை தளம் 3 மீட்டர் ஆகும். தற்போது வடிகால் வாய்க்காலில் வண்டல் படிந்து காட்டாமணக்கு செடிகள் மண்டி,நீர் போக்கினை வெகுவாக தடுத்து விடுவதால் வெள்ள காலங்களில் வாய்க்காலில் வெள்ள நீர் வடியாமல் தேங்குவதால் கரைகள் பாதிக்கப்பட்டு கரை உடைப்பு மற்றும் கரைப்பொழிவுகள் ஏற்பட்டு, பெரும் சேதத்தை விளைவிக்கிறது.
எனவே தென்பிடாகை வடிகால் வாய்க்கால் மற்றும் தண்டாளம் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படு கிறது. இந்த பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், உதவி செயற்பொறியாளர் செங்கல்வராயன்,திருமருகல் உதவி பொறியாளர்கள் சரவணன்,செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- கரியாபட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் பேரணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதேபோல், வேதார ண்யம் பஸ் நிலையம், ஆயக்காரன்புலம், குரவப்புலம் தாணிக்கோட்டகம், கோடியக்கரை, கோடிய க்காடு மூலக்கரை, கரியாபட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- ஊராட்சி செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.
- முடிவில் பள்ளி ஆசிரியர் சுமதி நன்றி கூறினார்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஹாஜா நிஜாமுதீன் தலைமை வகித்தார்.
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இறையன்பு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்தியபாமா,ஊராட்சி செயலர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் மாலா வரவேற்றார்.
பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் ஆசிரியர் சுமதி நன்றி கூறினார்.
- அழிஞ்சமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளி 100 ஆண்டுகளை கடந்தும் சிறப்பாக கல்வி சேவை ஆற்றி வருகிறது.
- ஒரு தாம்பூலத்தில் வைத்து அதனை சீர்வரிசையாக சிறுவர்களிடம் வழங்கினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகை அருகே அழிஞ்சமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சீர் வரிசைகளுடன் வீடு வீடாக சென்று மாணவர் சேர்த்து நடத்தினர். தொடர்ந்து சிறுவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, ஆரத்தி எடுத்து தங்களது அரசு பள்ளியில் உள்ள சிறப்பம்சங்களை எடுத்துக் கூறினர்.
மேலும் நோட்டு, பேனா, பென்சில், சிலேடு, சாக்பீஸ், பெல்ட், டிபன் பாக்ஸ், குடிநீர் பாட்டில் உள்ளிட்ட பள்ளி படிப்பிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரு தாம்பூலத்தில் வைத்து அதனை சீர்வரிசையாக சிறுவர்களிடம் வழங்கினர். இது அந்த பகுதியில் உள்ள பெற்றோரையும், பொது மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் சித்ரா கூறும்போது:-
அழிஞ்சமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளி 100 ஆண்டுகள் நிறைவடைந்தும் சிறப்பாக கல்வி சேவை ஆற்றி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் காற்றோட்டமான தனித்தனி வகுப்பறைகள் உள்ளன. ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடன் செயல்பட்டு வருகிறது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிவறை வசதி, சத்துள்ள மதிய உணவு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்குகிறோம். மேலும் ஆண்டுதோறும் 100 சதவீத தேர்ச்சி பெரும் பள்ளியாக உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்ரீஹரிகோட்டாவில் நடந்த கொரோனா விழிப்புணர்வு போட்டியில் மாநில அளவில் எங்களுடைய பள்ளி மாணவி 2-ம் இடம் பிடித்துள்ளார். அனைத்து வகையான அடிப்படை வசதிகளும் அரசு பள்ளியில் இருக்கும் பொழுது நாம் ஏன் தனியார் பள்ளிகளை நாடி செல்ல வேண்டும் என்றார். மேலும் அரசு பள்ளியின் சிறப்பம்சங்கள் குறித்து பதாகைகளை ஏந்தியபடி ஆசிரியர்களும், மாணவர்களும் ஊர்வலமாக சென்றனர். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜ திலகம், இல்லம் தேடி கல்வி அலுவலர்கள் நிவேதா, வைஷ்ணவி, மதிமொழி, ஆனந்தராஜ், அன்புசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 120-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
- பாடநூல், ஆசிரியர் கையேடு, மாணவர் பயிற்சி நூல் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககத்தின் சார்பில் வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி 3 நாட்கள் நடைபெற்றது.
ஆயக்காரன்புலம் இரா.நடேசனார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், வேதாரண்யம் வட்டார ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் 120-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பயிற்சி பெற்றனர்.
பாடநூல், ஆசிரியர் கையேடு, மாணவர் பயிற்சி நூல் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், துணைக்கருவிகள், எளிய சோதனைகள், சிறு மற்றும் குறு தேர்வுகள், பருவத்தேர்வு முதலானாவைகளில் செலுத்த வேண்டிய கவனம் குறித்து உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
பயிற்சியை வட்டார கல்வி அலுவலர் ராஜாமணிக்கம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக்குமார், வட்டார ஆசிரியர் பயிற்சி நிலைய முதல்வர் பழனிசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். முதன்மை கருத்தாளர் அண்டர்காடு வசந்தா தலைமையிலான 30 கருத்தாளர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள் ஆறுமுகம், அருள்மணி, தமிழ்ச்செல்வம் ஆகியோர் கதை சொல்லல், விவாதித்தல், சொற்பொழிவு என பயிற்சி அளித்தனர்.
பயிற்சியை நாகை மாவட்ட உதவி திட்ட அலுவலர் சாந்தி பார்வையிட்டு அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கினார்.
- ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்து வருகின்றனர்.
- கஜா புயலால் மாமரங்கள் முற்றிலும் சாய்ந்து பேரிழப்பை ஏற்படுத்தியது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக கடற்கரையோர கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்து வருகின்றனர். புதுப்பள்ளி, தெற்குபொய்கை நல்லூர், பூவைத்தேடி காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு புஷ்பவனம், நாலுவேதபதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரதான தொழிலாக மா சாகுபடி செய்து வருகின்றனர்
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயல் கொடூர தாக்குதலால் லட்சக்கணக்கான மா மரங்கள் சாய்ந்து மரங்கள் முரிந்தும் பேரிழப்பை ஏற்படுத்தியதுகஜா புயலால் சாய்ந்த மரங்கள் 5 பிறகு மீண்டும் துளிர்விட்டும்,புதிய மரங்கள் நடப்பட்டு காய்க்க தொடங்கி உள்ள இப்பகுதிகளில் குறிப்பாக பங்கனப்பள்ளி,ஒட்டு மாங்காய் ,ருமேனியா செந்தூரா, நீளம், காலபாடு உள்ளிட்ட பல்வேறு வகையான மாங்காய் காய்த்து விற்பனைக்கு தயாராக உள்ள நிலையில் இங்கு காய்க்கும் மாங்கனிகளை அதிக சுவை இருப்பதால் இம் மாங்காய்களை கேரளா கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் குளிர்பான நிறுவனங்கள் வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு தனியார் நிறுவனங்கள் மாம்பழத்தை கொள்முதல் செய்யாததால் கடந்த ஆண்டு 35 ரூபாய் விலை போன ருமேனியா கிலோ 7 ரூபாய்க்கும் 50 ரூபாய் விற்ற பங்கனப்பள்ளி 20 ரூபாய்க்கும் 40, 50 ரூபாய் விலை போன ஒட்டு மாங்காய் 12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதால் மா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாங்கனிகள் மரத்திலிருந்து வீணாவதாக குற்றம் சாட்டிய விவசாயிகள் இப்பகுதியில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைத்து மாங்காய்களை அரசே கொள்முதல் செய்து உரிய விலையை தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கண்காட்சியில் பிளாஸ்டிக் மாற்று பொருட்கள் இடம் பெற்றன.
- நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நாகப்பட்டினம்:
நாகை அருகே குத்தாலம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புவி தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு கண்காட்சியை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ் ஒளி துவங்கி வைத்தார். கண்காட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் மாற்று பொருள்கள் இடம் பெற்றன.
தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் புவி தினம் பற்றியும் மனிதர்களின் செயலால் பூமிக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்தும் அதை எதிர்கொள்வது குறித்தும் எடுத்துரைத்தார். மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக தலைமை ஆசிரியை செல்லம்மாள் வரவேற்புரை நிகழ்த்தினார். தேசிய பசுமை படை ஆசிரியர் காட்சன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர் சண்முகநாதன் ஆசிரியை தமிழ்ச்செல்வி பெற்றோர் கல்வி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சப்பை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதைபோல் வடக்காலத்துர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புவி தின விழா அனுசரிக்கப்பட்டது. தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் தலைமை ஆசிரியை பத்மாவதி தேசிய பசுமைப்படை ஆசிரியை ருபான்சியா ஆசிரியர் செந்தில் வேலன் ஆசிரியை சுமதி ராணி பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் மஞ்ச–ப்பையும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
- சிறுத்தலைகாடு மீனவ கிராமத்தில் இருந்து நாகைக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது.
- புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டதால் பட்டாசு வெடித்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா சிறுத்தலைகாடு மீனவ கிராமத்தில் இருந்து நாகைக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது. இதற்கான தொடக்க விழழ நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கருப்பம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் தலைமை வகித்தார்.
தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம்முருகையன் பஸ் சேவையை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக வேதாரண்யம் கிளை மேலாளர் எழில், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் கருணாநிதி, வார்டு கவுன்சிலர் ஐஸ்வர்யா, மாவட்ட பிரதிநிதி பாபு, சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் முருகேசன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.
புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ்சுக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ் சிறுத்தலை காட்டில் இருந்து காலை 8 மணி, 10:30 மணி, மாலை 3 மணி என மூன்று முறை கருப்பம்புலம், நெய்விளக்கு நால்ரோடு, வேதாரண்யம் வழியாக நாகைக்கு தினசரி மூன்று முறை இயக்கப்படும் என கிளை மேலாளர் தெரிவித்தார்.
- நாகூரில் போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்த மின்மாற்றியை அகற்ற வேண்டும்
- நாகூர் பகுதியில் இருந்த இரு மின்மாற்றிகள் ஒரே மின்மாற்றியாக மாற்றி அமைக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகூர் தர்கா அலங்கார வாசலில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறாக இருந்த மின்மாற்றியை அகற்றி அப்பகுதியை சீர்செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுடன் அங்கு ஆய்வு செய்த நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், விரைவில் மின்மாற்றி அகற்றப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
ஆனால் பல்வேறு நிர்வாகச் சிக்கல்களின் காரணமாக அப்பணி நடைபெறவில்லை.
இதற்கிடையில், சட்டமன்ற கூட்டத் தொடரின் போது, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஷா நவாஸ் எம்.எல்.ஏ இது தொடர்பாக கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர், தஞ்சாவூரில் இருந்து கூடுதல் திறன் மிக்க புதிய மின்மாற்றியை அனுப்பிவைக்க உத்தரவிட்டார்.
நாகூர் பகுதியில் இருந்த இரு மின்மாற்றிகள் ஒரே மின்மாற்றியாக மாற்றி அமைக்கப்பட்டது.
மேலும், தர்கா அலங்கார வாசலில் ருந்த மின்மாற்றியும் அகற்றப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
- அகத்திய மாமுனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- மூடிக்கிடந்த திருக்கதவை அப்பரும், சம்பந்தரும் தேவாரப்ப திகங்கள் பாடி திறந்ததாகவும் வரலாறு இக்கோவிலுக்கு உண்டு.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகத்திய மாமுனி வருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
புராண காலத்தில் 4 வேதங்களும் பூஜை செய்தும், மூடிக்கிடந்த திருக்கதவை அப்பரும், சம்பந்தரும் தேவாரப்ப திகங்கள் பாடி திறந்ததாகவும் வரலாறு இக்கோவிலுக்கு உண்டு.
இந்த கோவிலில் சிவபெருமானும் பார்வதியும் திருமண கோலத்தில் அகத்தி யருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் யாழ்ப்பாண வரணி ஆதீனம், செவ்வந்திநாத பண்டார சன்னதி, கயிலைமணி வேதரத்தினம், கேடிலியப்பன் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி அறிவழகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் யாழ்ப்பாண வரணி ஆதினம், செவ்வந்தி நாதபண்டார சன்னதி ஸ்தத்தார், கயிலைமணி வேதாரத்தினம், கேடிலியப்பன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சோழிய வேலாளர் சங்கத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
- அம்மனுக்கு மஞ்சள், பால் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே தேவூரில் பழமைவாய்ந்த ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சித்திரைப் பெருவிழா பூச்சொரிதலுடல் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் நடைபெற்றது. 30அடி உயரமுள்ள செடில் மரத்தில், வேண்டுதல் நிறைவேற 600க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை செடிலில் வைத்து, தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.
முன்னதாக அம்மனுக்கு மஞ்சள் பொடி, பால், தயிர், திரவிய 14 வகையான திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் வீதியுலா வந்து பக்தர்கள் அருள் பாலித்தார்.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






