search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேதாரண்யத்தில், ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
    X

    வேதாரண்யத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    வேதாரண்யத்தில், ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி

    • 120-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
    • பாடநூல், ஆசிரியர் கையேடு, மாணவர் பயிற்சி நூல் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககத்தின் சார்பில் வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி 3 நாட்கள் நடைபெற்றது.

    ஆயக்காரன்புலம் இரா.நடேசனார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், வேதாரண்யம் வட்டார ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் 120-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பயிற்சி பெற்றனர்.

    பாடநூல், ஆசிரியர் கையேடு, மாணவர் பயிற்சி நூல் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், துணைக்கருவிகள், எளிய சோதனைகள், சிறு மற்றும் குறு தேர்வுகள், பருவத்தேர்வு முதலானாவைகளில் செலுத்த வேண்டிய கவனம் குறித்து உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

    பயிற்சியை வட்டார கல்வி அலுவலர் ராஜாமணிக்கம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக்குமார், வட்டார ஆசிரியர் பயிற்சி நிலைய முதல்வர் பழனிசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். முதன்மை கருத்தாளர் அண்டர்காடு வசந்தா தலைமையிலான 30 கருத்தாளர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள் ஆறுமுகம், அருள்மணி, தமிழ்ச்செல்வம் ஆகியோர் கதை சொல்லல், விவாதித்தல், சொற்பொழிவு என பயிற்சி அளித்தனர்.

    பயிற்சியை நாகை மாவட்ட உதவி திட்ட அலுவலர் சாந்தி பார்வையிட்டு அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கினார்.

    Next Story
    ×