என் மலர்
நாகப்பட்டினம்
- வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னர், வண்ணமலர்களால் சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் அலங்காரம் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது.
இதேப்போல், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில், குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஆயிரம் அறிவியல் திருவிழா என்ற தலைப்பில் 30 கிராமங்களில் நடைபெற உள்ளது.
- இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை வானவில் மன்றம் அறிவியல் கழகம் மற்றும் இல்லம்தேடி கல்வி ஆகியவை இணைந்து கோடை விடுமுறை பயனுள்ளதாக மாற்றும் நோக்கத்திலும், அறிவியலில் மாணவரின் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும், ஆயிரம் அறிவியல் திருவிழா என்ற தலைப்பில் 30 கிராமங்களில் நடைபெற உள்ளது.
இதில் முதல் கட்டமாக வேதாரண்யம் அடுத்த தென்னடார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கி அறிவியல் திருவிழாவை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் அரசமணி, ஊராட்சி தலைவர் தேவி செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் திருமாவளவன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் வட்டார மேற்பார்வையாளர் அசோக்குமார், ஆசிரியர் பயிற்றுநர் ஆறுமுகம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்புவேல், வானவில் மன்ற கருத்தாளர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மே தினவிழா, நிறுவனர் பிறந்தநாள் விழா, பணி நிறைவு செய்த ஆசிரியருக்கு பாராட்டு விழா.
- தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மே தினவிழா, நிறுவனர் பிறந்தநாள் விழா, பணி நிறைவு செய்த ஆசிரியருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நீர்முளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
விழாவிற்கு வட்டார தலைவர் பாலகுமார் தலைமை தாங்கினார்.
முன்னதாக வட்டார செயலாளர் நெடுமாறன் வரவேற்றார்.
மாநில கூடுதல் தலைவர் திருமுருகன், மாவட்ட செயலாளர் அமிர்தலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகோபாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆரம்ப ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செ யலாளர் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணை ப்பாளர் தாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மாநில தலைவர் லட்சுமிபதி வாழ்த்துரை வழங்கினார்.
முடிவில் வட்டார பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
விழாவில் தமிழக ஆரம்ப ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கத்தரிப்புலம் ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.
- கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் வீரமணி தலைமை தாங்கினார், துணை தலைவர் சுதா, மாவட்ட கவுன்சிலர் சோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக ஊராட்சி செயலாளர் வீரபாண்டியன் வரவேற்றார்.
பற்றாளர் தேவகுமார் கூட்டத்தை நடத்தினார்.
கூட்டத்தில் கத்தரிப்புலம் ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
- கல்லூரி உட்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.
- சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இதர பணிகள் மேற்கொள்ளப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் செல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடை பெற்றது. விழாவில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கலந்து கொண்டார்.
அப்போது கல்லூரியின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக கல்லூரி முதல்வர் கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து ஏற்கெனவே சட்டம ன்றத்தில் பேசியதாகவும், ஆய்வகம், நூலகம், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுமென உயர்கல்வித் துறை அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ தெரிவித்தார்.
சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் இதர பணிகள் மேற்கொள்ள ப்படும் என்று அவர் கூறினார்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
- திருக்குவளை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு நேற்றிரவு தனியார் பஸ் சென்றது.
இன்று காலை நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ஆலங்குடி சீராவட்டம் பாலம் அருகே சென்றது. அப்போது அந்த பகுதியில் மழை ெபய்துள்ளது.
இந்நிலையில் சீராவட்டம் பாலம் இறக்கத்தில் பஸ் சென்ற போது அதன் வேகத்தை கட்டுப்படுத்த டிரைவர் பிரேக் பிடித்துள்ளார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழந்தது.
இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பஸ்சில் இருந்த பயணிகளை மீட்டு ெவளியேற்றினர்.
இதில் பஸ்சில் பயணித்த 8 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் ஓட்டுநர்க ளுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து திருக்குவளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் கிரேன் மற்றும் மீட்பு ஊர்தியின் உதவியோடு கவிழ்ந்த பஸ்சை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் நாகை-திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- சேஷமூலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
- இலவச பட்டா வழங்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் சேஷமூலை ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
அதில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கலந்து கொண்டார்.
அப்போது, சேஷமூலை ஊ.ஒ.தொடக்கப் பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும். இலவச பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொது மக்கள் முன்வைத்தனர்.
அவற்றை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென எம்.எல்.ஏ கூறினார்.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சரக வருவாய் ஆய்வாளர், உதவி பொறியாளர் மற்றும் தென்பிடாகை, சேஷமூலை கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.
- அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- வண்ணமலர்கள் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் நேற்று சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம், மஞ்சள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து வண்ணமலர்கள் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
- விற்பனைக்காக பாக்கெட் சாராயம் இருந்தது தெரிய வந்தது.
நாகப்பட்டினம்:
நாகூர் -கங்களாஞ்சேரி சாலையில் நாகூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது சின்ன கண்ணமங்கலம் பஸ் நிலையம் அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அதில் விற்பனைக்காக பாக்கெட் சாராயம் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் சின்ன கண்ணமங்கலம் வடக்குதெருவை சேர்ந்த நீதிதேவன் மகன் தாய்குமார் (வயது 31) என்பது தெரிய வந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாகூர் போலீசார் தாய்குமாரை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
- காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ராட்டையை சுற்றியும் தேசபக்தி பாடல்களை பாடி உபவாசம் மேற்கொண்டனர்.
- அகஸ்தியன்பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் உப்பு அள்ளினர்.
வேதாரண்யம்:
இந்திய சுதந்திரத்திற்கு முக்கிய பங்கு வகித்த உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் 93-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவினர் கடந்த 14-ந் தேதி திருச்சி ராஜன் மாளிகையில் இருந்து புறப்பட்டு தஞ்சை, கும்பகோணம், நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரணியம் வந்தடைந்தனர்.
நேற்று வேதாரண்யம் வடக்கு வீதியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன், சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வேதாரத்தினத்தின் பேரன் கயிலைமணி வேதாரத்தினம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ராட்டையை சுற்றியும் தேசபக்தி பாடல்களை பாடி உபவாசம் மேற்கொண்டனர்.
காலை 6 மணி அளவில் வேதாரண்யம் உப்புசத்திய கிரக நினைவு கட்டிடத்தில் இருந்து ஊர்வலமாக 3 கி.மீ நடைபயணம் மேற்கொண்டு அகஸ்தியன்பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் உப்பு அள்ளினர். நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் போஸ், மாவட்ட வர்த்தக அணி பொதுசெயலர் அப்துல் உசேன், இளைஞர் காங்கிரஸ் ஆப்கான், வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கமன் கோவிந்தராஜ், மகளிர் அணி
சத்யகலா, செல்வராணி, நகரத் தலைவர் மெய்யா ரபீக், துணைத்தலைவர் வெங்கட்ராஜ், துணைச்செயலாளர் செல்வகுமார், ஐ.என்.டி.யூசி சங்க தங்கமணி, பாதயாத்திரை குழு சக்தி செல்வம் உள்ளிட்ட காங்கிரசார் கலந்து கொண்டனர்.
- பள்ளிக்கு தேவையான பொருட்களை கிராம மக்கள் சார்பில் வழங்கபடுவது வழக்கம்.
- தலைமையாசிரியர் சாந்தியிடம் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
திருக்கண்ணங்குடி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர் மற்றும் கிராம மக்கள் சார்பில் 1 லட்சம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இப்பள்ளிக்கு தேவையான பொருள்களை கிராம மக்கள் சார்பாக வழங்கபடுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டுக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இப்பள்ளிக்கு தேவையான பொருள்கள் அனைத்தையும் மாணவர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள் சார்பில் வாங்கப்பட்டு இன்று பள்ளிக்கு வழங்கப்பட்டது,
பள்ளியில் இருந்து மேளதாளங்கள் முழங்க சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வரப்பட்டது, இதில் பள்ளிக்கு தேவையான இருக்கைகள், எல்.இ.டி. டிவி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் ஆர்வோ வாட்டர் மெசின், பீரோ, குடம், பாய்கள், மின் விசிறிகள், இருக்கைகள், சாக்பீஸ், உள்ளிட்ட 1லட்சம் மதிப்பீலான பொருள்களை தலைமையாசிரியர் சாந்தியிடம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
- பக்தர்கள் கையில் பூந்தட்டுகளை ஏந்தியவாறு சென்றனர்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் உள்ள நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. நாகை நாலுகால் மண்டபத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கையில் பூந்தட்டுகளை ஏந்தியவாறு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி நடைபெறுகிறது.






