என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடற்கரையில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
நாகூர் கடற்கரையில் எச்சரிக்கை பலகை திறப்பு
- கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி பலியாகும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.
- இதை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகூர் சில்லடி கடற்கரைக்கு வரும் வெளியூர் பயணிகள், கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி பலியாகும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.
இதை தடுக்கும் வகையில், கடலில் குளிப்பவர்களுக்கான எச்சரிக்கை பலகை நாகூர் முஸ்லிம் ஜமாத் சார்பில் சில்லடி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில் குமார், நாகூர் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஏ.எஸ்.ஏ.காதர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி செயற் பொறியாளர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






