என் மலர்
நாகப்பட்டினம்
- கடந்த 1995-ம் ஆண்டு தேர்வாகி ராணுவத்தில் பணியாற்றியவர்.
- மாலை அணிவித்து, தேசிய கொடி கொடுத்து தேசிய கீதம்பாடி சல்யூட் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கணேசன்.
இவரது மனைவி அமிர்தவல்லி. உப்பு உற்பத்தி மற்றும் விவசாய பணிகள் செய்து வருகின்றனர்.
இவர்களது மகன் முருகேசன்.
இவர் கடந்த 1995-ம் ஆண்டு இந்திய ராணுவத்திற்கு தேர்வாகி ராணுவத்தில் பணியாற்றியவர். கார்கில் போரிலும் சிறப்பாக பணியாற்றியவர்.
தற்போது முருகேசன் பணி ஓய்வு பெற்று சொந்த ஊருக்கு திரும்பினார்.
அவருக்கு வேதாரண்யத்தில் முன்னாள் ராணுவ நல சங்க தலைவர் தமிழரசன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பொருளாளர் நாகராஜன் முன்னிலையில் முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் மாலை அணிவித்து, தேசிய கொடி கொடுத்து தேசிய கீதம்பாடி சல்யூட் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
பின்னர் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, கவுன்சிலர் ராஜு, மாநில வர்த்தக சங்க துணை தலைவர் தென்னரசு, நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் வீரசுந்தரம் உள்பட முக்கிய பிரமுகர்கள், கிராமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆசிரியர் கருணாநிதி வரவேற்றார். முடிவில் ராணுவ வீரர் முருகேசன் மனைவி அம்பிகா நன்றி கூறினார்.
- வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
- தமிழ் வழி கல்வியில் பயின்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கடினல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நிவேதிதா பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
இந்த மாணவியின் தந்தை வேம்பையன், தாய் திலகா ஆகியோர் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆவர்.
மாணவியின் தந்தை வேம்பையன் தான் பணியாற்றும்கடின ல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி யிலேயே தனது மகளை சேர்த்து தமிழ் வழி கல்வியில் படிக்க வைத்து மாவட்ட அளவில் முதலிடம் பெற செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
முதலிடம் பிடித்த மாண வியை தலைமையாசிரியர் சிவகுருநாதன் சால்வை அணிவித்து பாராட்டி புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
மேலும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் வைரவல்லி, ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகர், ஜி.எச்.சி.எல். உப்பு தொழிற்சாலை மேலாளர் சுந்தர்ராஜன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் ஆகியோர் மாணவியை பாராட்டினர்.
- சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- விநாயகர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
பின்பு விநாயகர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனையும் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.
இதுபோல் வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள கற்பகவி நாயகர், கட்சுவான் முனிஸ்வ ரர்சுவாமி கோவில் விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- உதவி மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
- மாணவர்கள் பதிவு செய்ய வரும்போது ஜாதி சான்றிதழ் அசலை கொண்டு வர வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) குமரேசமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதற்கு பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேதாரண்யம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான உதவி மையம் அமைக்க ப்பட்டுள்ளது.
இந்த மையம் இன்று (8-ந்தேதி) முதல் 19-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
பதிவு செய்ய விண்ணப்ப கட்டணமாக ஓ.சி, பி.சி, எம்.பி.சி மாணவர்கள் ரூ.50 செலுத்தினால் 5 கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி. பிரிவை சேர்ந்த மாணவர்கள் ரூ. 2 பதிவு கட்டணமாக செலுத்தி 5 கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி. மாணவர்கள் பதிவு செய்ய வரும்போது ஜாதி சான்றிதழ் அசலை கொண்டு வர வேண்டும்.
இந்த வாய்ப்பை வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மாணவ- மாணவி கள் பயன்படுத்திக் கொள்ளு ங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குழந்தைகளை 30 அடி உயர செடில் மரத்தில் ஏற்றி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
- பாடைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு ஞாயிறு தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காத்தவராய சுவாமி செடில் மரத்தில் ஏறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் பக்தர்கள் தங்களது குழந்தைகளை 30 அடி உயர செடில் மரத்தில் ஏற்றி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
அதனைத் தொடர்ந்து நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
தேரை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலைக்கு வந்தது.
இதேபோல், ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு வைத்தும், படையல் இட்டும், பால்காவடி, பன்னீர்காவடி, வேப்பில்லை காவடி மற்றும் பாடைக்காவடி உள்ளிட்ட பல்வேறு விதமான காவடிகள் எடுத்தும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- 108 ஆம்புலன்சில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார்.
- வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்தவைகள் திருடப்பட்டிருந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). 108 ஆம்புலன்சில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது தம்பி பிரபாகரனுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், திருமண வேலை சம்பந்தமாக பிரகாஷ் வீட்டை பூட்டு விட்டு வெளியே சென்றார். பின்னர் விட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது விட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் வீட்டிற்குள் சென்று பார்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் திருமணத்திற்காக வைத்திருந்த இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து பிரகாஷ் வேதாரண்யம் ேபாலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், நாகையில் இருந்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அகழாய்வில் கிடைத்த புத்த சிற்பங்களை மீட்டு நாகையில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
- சூடாமணி விகாரம் பகுதியை நாகையின் அடையாள சின்னமாக மாற்றப்படும்.
நாகப்பட்டினம்:
கீழடியில் அகழாய்வு செய்து தமிழர் நாகரிகத்தை வெளிக்கொண்டு வந்த, தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான ஆய்வுக் குழுவினர், நாகை நீதிமன்ற வளாகத்தில் உள்ள சூடாமணி விகாரம், 115 ஆண்டுகள் பழமையான கடல் மட்டம் அளவிடும் கல், பழைய கோட்டாட்சியர் அலுவலகம், நாகை அருங்காட்சியகம், டச்சுக் கல்லறை உள்ளிட்ட பல தொன்மையான இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முன்னதாக அவர்களை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வரவேற்றார்.நாகப்பட்டினம் துறைமுக நகரத்தின் வரலாற்று பண்பாட்டுத் தடங்களை வெளிக்கொண்டு வரும் வகையில், இந்த ஆய்வுப் பயணம் அமைந்துள்ளது என்று அமர்நாத் ராமகிருஷ்ணா கூறினார்.
நாகப்பட்டினத்தில் ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த புத்த சிற்பங்களை மீட்டு நாகையில் புதிய அருங்காட்சியகம் அமைப்பது, சூடாமணி விகாரம் பகுதியை நாகையின் அடையாளச் சின்னமாக மாற்றி, கீழடி போல் மக்கள் பார்வைக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த ஆய்வுப் பயணம் வலுசேர்க்கும் என்று ஷாநவாஸ் எம்.எல்.ஏ கூறினார்.
- 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
- 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வங்க கடல் பகுதியில் புதிய மோக்கா புயல் உருவாக இருப்பதால் கடலில் பலத்த காற்ற வீசகூடும் என்பதால் மறு அறிவிப்பு வருவரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம் , வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
கடலுக்கு செல்லாததால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வேலை இழந்து உள்ளனர்.
- உப்பு உற்பத்தி பாத்திகள், நிறுவனங்களுக்கு சென்று உப்பு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தனர்.
- ஆய்வு குழுவினர்களுடன் சென்று தொழில்வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் நடைபெறும் உப்பு உற்பத்தியை அடிப்படையாக கொண்டு புதிதாக தொழில் தொடங்குவது தொ டர்பாக சென்னையில் செயல்படும் முன்னணி நிறுவனங்களின் தொழில்நுட்ப வல்லுநர்கள் பி.எஸ்.ஆர்.பாபு, ஜி.வி.விஸ்வநாதன் உள்ளிட்ட குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த குழுவினர் தென்னடார், கடிநெல்வயல், அகஸ்தியம்ப ள்ளி ஆகிய இடங்களில் உள்ள உப்பு உற்பத்தி பாத்திகள், நிறுவனங்களுக்கு சென்று உப்பு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. ஆய்வு குழுவினர்களுடன் சென்று தொழில்வாய்ப்புகள் பற்றி விளக்கி, ஆய்வுகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வி ன்போது மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், வக்கீல் தங்க.கதிரவன், வருவாய்த்து றையினர் உடன் இருந்தனர்.
- ஏராளமான பக்தர்கள் சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் செய்து வழிபாடு நடத்தினர்.
- கடற்கரையில் கடல் அன்னைக்கு பக்தர்கள் சிறப்பு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.
வேதாரண்யம்:
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதி கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் வனதுர்க்கை அம்மன் கோவிலில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் வளர்த்து பூஜைகள் நடைபெற்றது. பின்னர், புனிதநீர் அடங்கியகடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்க ப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இதேபோல், வேதாரண்யம் மேல வீதியில் உள்ள மாணிக்கவாசகர் மடத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசகருக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாடி மாணிக்கவாசகரை வழிபட்டனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகத்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்திநாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், வேதார ண்யம் அருகே வேம்ப தேவன்காட்டில் மவுனமகான் சித்தர் பீடம் அமைந்துள்ளது. இந்த சித்தர் பீடத்தில் தினசரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
மேலும், ஒவ்வொரு மாத பவுர்ணமியிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பலகாரங்கள், பொங்கல் வைத்து படையல் செய்து பின் பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். இந்நிலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் செய்து வழிபாடு நடத்தினர்.
மேலும், பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் கடல் அன்னைக்கு பக்தர்கள் சிறப்பு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.
இதேபோல், கோடிய க்காடு குழகர் கோவிலில் உள்ள அமிர்தகர சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதேபோல், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள ஆறுமுகக்கடவுள், மேலகுமரர் மற்றும் நாகை சாலையில் உள்ள பழனியாண்டவர் கோவில், ஆறுகாட்டுத்துறையில் உள்ள முருகன் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- வங்கிகடன், அரசு துறை சான்றிதழ்கள் பெறுவது எப்படி.
- அடிப்படை பிரச்சினைகளுக்கு புகார் அளிப்பது எப்படி.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த செம்போடையில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் இலவச பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சட்ட பஞ்சாயத்து இயக்க மாநில பொதுச்செயலாளர் அருள் முருகானந்தம் தலைமை தாங்கினார்.
இதில் நீதிமன்ற வழக்குகள் மற்றும் நடைமுறைகளை எதிர்கொள்ளுவது எப்படி? தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் இலவசமாகவும், விரைவாகவும் பட்டா, குடும்ப அட்டை, மின் இணைப்பு, வங்கிகடன், அரசு துறை சான்றிதழ்கள் பெறுவது எப்படி? அடிப்படை பிரச்சினை களுக்கு புகார் அளிப்பது எப்படி? சமூக வலைதளங்களை பயன்படுத்தி புகார் அளிப்பது எப்படி? போன்றவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் கங்காதுரை, நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், தலைஞாயிறு ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன், கீழையூர் ஒன்றிய பொறுப்பாளர் அன்பழகன், வேதாரண்யம் பேரூராட்சி பொறுப்பாளர் நந்தகுமார் மற்றும் அகிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி பலியாகும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.
- இதை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகூர் சில்லடி கடற்கரைக்கு வரும் வெளியூர் பயணிகள், கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி பலியாகும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.
இதை தடுக்கும் வகையில், கடலில் குளிப்பவர்களுக்கான எச்சரிக்கை பலகை நாகூர் முஸ்லிம் ஜமாத் சார்பில் சில்லடி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில் குமார், நாகூர் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஏ.எஸ்.ஏ.காதர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி செயற் பொறியாளர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.






