என் மலர்
நாகப்பட்டினம்
- துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேதாராண்யம் உபகோட்டத்திற்க்குட்பட்ட வேதாரண்யம் துணை மின் நிலையம், வாய்மேடு 1 துணை மின் நிலையம், ஆயக்கா ரன்புலம் துணை மின் நிலையம் ,வேட்டைகாரன் இருப்பு துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்ப்பள்ளி, தோப்புதுறை, பெரியக்குத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு,ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், இடும்பவனம் தொண்டியக்காடு, தாணிக்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர் பஞ்நதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்காரன்புலம் , கருப்பம்புலம், கடிநெல்வயல், கத்தரிபுலம், செட்டிபுலம் ,நாகக்குடையான், குரவப்புலம் , தென்னம்புலம், கரியாப்பட்டினம்,நாலுவேதபதி, வெள்ள பள்ளம், விழுந்தமாவடி, கோவில்பத்து,கன்னி தோப்பு ஆகிய பகுதிகளுக்கு நாளை 16-ந்தேதி செவ்வாய்கிழமை காலை 9.00 மணி முதல் 5.00மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முன்னுரிமை அடிப்படையில் விரைந்து நாகையில் அரசு சட்ட கல்லூரியை தொடங்க வேண்டும்.
- இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை தந்த சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகம்மது ஷாநவாஸ் ஒரு கோரிக்கை மனு அளித்தார்.
அந்த கோரிக்கை மனுவில் கூறியிப்பதாவது:-
மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி என்ற அரசின் திட்டத்தின் படி, நாகப்பட்டினத்தின் பின்த ங்கிய நிலையை கருத்தில் கொண்டு முன்னு ரிமை அடிப்படையில் நாகையில் விரைந்து அரசு சட்டக் கல்லூரியை தொடங்க வேண்டும்.
இது குறித்து ஏற்கெனவே சட்டப்பேரவையில் பேசியுள்ள தோடு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள 10 முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகவும் முன்வைத்து ள்ளேன்.
எனவே இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
- நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நாகூர் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- வரைபடத்துடன் திட்ட மதிப்பீடு தயார் செய்து தரும்படி அதிகாரிகளிடம் கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகூர் பேருந்து நிலையம் மிகவும் சிதிலமடைந்து உள்ளதாகவும், அதனை சீரமைத்து, வணிக வளாகம் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்துகள் உள்ளே சென்று வரும்படி மேம்படுத்த வேண்டுமென்று மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நாகூர் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் உட்கட்ட மைப்பை மேம்படுத்துவது தொடர்பாக வரைபடத்துடன் திட்ட மதிப்பீடு தயார் செய்து தரும்படி அதிகாரிகளிடம் கூறினார்.
விரைவில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரை சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்த உள்ளதாகவும், நாகை புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுவது போல், நாகூர் பேருந்து நிலைய சீரமைப்பும் நிறைவேறும் என்று அவர் உறுதியளித்தார்.
ஆய்வின் போது நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில்குமார், நகராட்சி செயற் பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- வங்கியில் நகை கடன் மற்றும் பல்வேறு தொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
- மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகர கூட்டுறவு கடன் சங்கம் கடந்த 24 ஆண்டுகளாக இயங்கி வருகிறது .
இந்த கூட்டுறவு சங்கத்தில் சுமார் 8000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். வங்கியில் நகை கடன் மற்றும் பல்வேறு தொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க கடன் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு வங்கி செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
விழாவில் மறைஞாயநல்லூர் பொன்னாங்காட்டை சேர்ந்த மரிக்கொழுந்து மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கடன் உதவி நகர கூட்டுறவுவங்கி தலைவர் (பொறுப்பு) அன்பரசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் வங்கி பணியாளர்கள் கண்ணன், மகாராஜன், நகராட்சி மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் செல்லம்மாள் மற்றும் வங்கி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.
- கடிநெல்வயல் அரசு மேல்நிலை பள்ளி மாணவி நிவேதிதா நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் முதல் இடம் பிடித்தார்.
- வேதாரண்யம் தி.மு.க ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் பாராட்டி புத்தகம் வழங்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கடிநெல்வயல் அரசு மேல்நிலை பள்ளி மாணவி நிவேதிதா நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் முதல் இடம் பிடித்தார்.
அவரை வேதாரண்யம் தி.மு.க ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் பாராட்டி புத்தகம் வழங்கினார்.
இதில் நகர் மன்ற தலைவரும் நகர செயலாளருமான புகழேந்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சன்.செல்லப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- இன்று அதிகாலை 4 மணிக்கு செல்வமணி கடலுக்கு மீன் பிடிக்க தனது பைபர் படகில் சென்றுள்ளார்.
- அவரது உடலை மீட்க சக மீனவர்கள் அக்கரைப்பேட்டை மீன் பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தை அடுத்த அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி (வயது 56).
இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், சீதா மற்றும் லட்சுமி என்ற இரு மகள்களும் உள்ளனர்.
செல்வமணி இன்று அதிகாலை 4 மணிக்கு அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க தனது பைபர் படகில் சென்றுள்ளார்.
துறைமுகத்தில் 2 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகிலிருந்து நிலைதடுமாறு கடலில் விழுந்துள்ளார்.
இதில் அவர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய சக மீனவர்கள் செல்லும் வழியில் படகு மட்டும் தனியாக நிற்பதை பார்த்து அருகில் தேடி உள்ளனர்.
அப்போது உயிரிழந்த நிலையில் செல்வமணி கடலில் மிதந்துள்ளது தெரிய வந்தது.
இதனை எடுத்து அவரது உடலை மீட்க சக மீனவர்கள் அக்கரைப்பேட்டை மீன் பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக செல்வமணி உடல் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மீனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விழாவில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கலந்து கொண்டார்.
- புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் இந்திய வர்த்தக தொழிற்குழும கட்டிடத்தில் நாகூர் நாகப்பட்டினம் லயன்ஸ் சங்கம் 2022-23 சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, கடந்த 2 ஆண்டுகளில் நாகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன. தேர்தலின் போது சொன்ன வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வருகிறேன்.
நாகையில் வீடு எடுத்து தங்கி பணியாற்றுகிறேன். எம்.எல்.ஏ அலுவலகம் நாள்தோறும் இயங்குகிறது.
மனுக்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று, அவை மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறேன்.
இதுவரை 50சதவீதத்திற்கு மேல் கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டுள்ளன. நாகை தொகுதியின் முக்கிய பிரச்சனைகள் அனைத்தையும் சட்டமன்றத்தில் எழுப்பி உள்ளேன். புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாகையில் அரசு சட்டக் கல்லூரி, சூடாமணி விகார் பகுதியில் அருங்காட்சியகம், சிப்காட் தொழிற் பூங்கா, திருமருகல் தனி தாலுகா, மறைமலை அடிகள் நினைவு அரங்கம், நாகை நகரில் அரசு மேல் நிலைப் பள்ளி, நாகை நகராட்சியை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். லயன்ஸ் சங்கம் சார்பில் ஷாநவாஸ் எம்எல்.ஏ.விற்கு பாராட்டு கேடயம் வழங்கப்ப ட்டது.
இந்நிகழ்வில் லயன்ஸ் தலைவர் கே.சேகர், செயலாளர் யு.சதீஸ் குமார், பொருளாளர் டி.காத்தை யன், மாவட்ட நிதி ஆலோ சகர் ஆர்.பெலிக்ஸ் ரா யன் உள்ளிட்ட லயன்ஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்
- தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
முன்னதாக பைரவருக்கு மஞ்சள்,சந்தனம்,பால், பன்னீர், தயிர்,தேன், இளநீர், மாப்பொடி,திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் சாமிக்கு வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- செவிலியர்கள் கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தை யொட்டி நைட்டிங்கேள் அம்மையார் படம் வைத்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
பின்பு செவிலியர்கள் மெழுகுவார்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
செவிலியர்கள் கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் முருகப்பா, மருத்துவர்கள் தனஞ்சேயன், வினோத் மற்றும் செவிலி யர்கள் கலந்து கொண்டனர்.
- தொழில்துறை அமைச்சராக பொறுப்பே ற்றுள்ள நண்பர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு வாழ்த்துகள்.
- அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
நாகப்பட்டினம்:
நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியி ருப்பதாவது, தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நண்பர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு வாழ்த்துகள்.
கடந்த 2 ஆண்டுகளாக சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவில் அவர் தலைமையில் பயணித்ததில் அவரது செயல் திறனையும், கருத்தியல் உறுதியையும் கண்டு வியந்தேன். டெல்டா பகுதிக்கு அமைச்சர் இல்லையே என்ற குறை நீங்கியது.
பின்தங்கி யுள்ள நாகப்ப ட்டினம் மாவட்ட த்திற்கு அதிக தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தர அவர் பாடுபடு வார் என்று நம்புகிறேன். அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
- நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட கொந்தகையில் திட்டச்சேரி-காரைக்கால் மெயின் சாலை உள்ளது.
- இதனால் எதிரே இருசக்கர வாகனங்கள் கூட செல்ல வழி இல்லாமல் உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட கொந்தகையில் திட்டச்சேரி-காரைக்கால் மெயின் சாலை உள்ளது.
இந்த சாலையின் ஒருபுறம் நெடுஞ்சாலை துறை மூலம் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மற்றொருபுறம் வீட்டுக்கு வீடு குழாய்கள் மூலம் கேஸ் வழங்கும் தனியார் நிறுவனத்தின் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.
சாலையின் நடுவில் மட்டும் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு பாதை உள்ளது.
இதனால் எதிரே இருசக்கர வாகனங்கள் கூட செல்ல வழி இல்லாமல் உள்ளது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பணிகளை நிறுத்த வலியுறுத்தி வாகனங்களை சிறை பிடித்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், திட்டச்சேரி போலீஸ் சிறப்பு
சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரப்பிள்ளை,டென்னிசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவா ர்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அனைவரும் அமைதியாக கலந்து சென்றனர்.
பின்னர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் முழுவதும் மூடப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.
இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பொருளாதாரத்தில் நலிவுற்ற பின் தங்கிய மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளித்து வருகிறார்.
- இம்மாணவ மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றுள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் பகுதியைச் சேர்ந்த கிரண்ட் மாஸ்டர்எஸ்.பாண்டியன் அரசின் பொதுத் துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளான திருமருகல் திருப்பு கலூர், திருக்கண்ணபுரம், ஏனங்குடி, வவ்வாலடி, கணபதிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடந்த 20 ஆண்டு காலமாக பொருளாதாரத்தில் நலிவுற்ற பின் தங்கிய மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு தற்காப்பு கலை (டேக்வாண்டோ) பயிற்சி அளித்து வருகிறார்.
மேலும் இம்மாணவ மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றுள்ளனர்.கடந்த 20 ஆண்டுகளில் தங்கம் 98, சில்வர் 75,பித்தளை 112 உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுள்ளனர்.அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் பயிற்சியாளர் மாஸ்டர் பாண்டியனை ஜாக்கி புக் ஆப் வேல்டு என்ற நிறுவனம் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கெளரவித்துள்ளது.அதை தொடர்ந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில் ஓ.என்.ஜி.சி யின் அதிகாரி சம்பத்குமார், சீனியர் செக்யூரிட்டி மேனேஜர்கள் முரளி கிருஷ்ணன்,அஜய் மாலிக், ஆதித்யா ஆகியோர் கலந்து கொண்டு மாஸ்டர் பாண்டியனை பாராட்டினர்.






