என் மலர்
நாகப்பட்டினம்
- நில ஒருங்கிணைப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும்.
- செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை நிறுத்த வேண்டும்.
வேதாரண்யம்:
நில ஒருங்கிணைப்பு மசோ தாவை திரும்ப பெற வேண்டும், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை நிறுத்த வேண்டும், பருவம் தவறி பெய்த மழையால் பாதித்த நிலக்கடலை, உளுந்து, பயறு, எள் பயிர்க ளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், மாவட்ட நிர்வாகக்குழு நாராயணன், ஒன்றிய துணை செயலாளர் பாலகுரு, பொருளாளா் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- 13 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளன.
- குத்தகை செலுத்தி வருபவர்கள் குத்தகை செலுத்த இயலாமல் உள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு 13 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளன.
இந்த நிலங்களில் ஓரளவுதான் கணக்கில் உள்ளது.
பாக்கி நிலங்கள் யாரிடம், எவ்வளவு உள்ளது என்பது தெரியவில்லை.
இதனால் பல ஆண்டுகளாக குத்தகை செலுத்தி வருபவர்கள் குத்தகை செலுத்த இயலாமல் உள்ளனர்.
இந்நிலையில், கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்ய உத்தரவிடப்பட்டு அதன்படி, குரவப்புலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை வட்டாட்சியர் அமுதா, கோவில் நிர்வாக அதிகாரி அறிவழகன் உள்பட கோவில் அலுவலர்கள், நில அளவையர் குழுவினர் நிலங்களை அளவீடு செய்து எல்லைக்கல் போட்டு வருகின்றனர்.
- கல்லூரி மாணவிகளுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு நலக்கல்வி அளிக்கப்பட்டது.
- அனைவரும் டெங்கு குறித்த சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை துணை இயக்குனர் சுகாதார பணிகள் விஜயகுமார் உத்தரவின் பேரில் பொரவாச்சேரி ஆண்டவர் நர்சிங் கல்லூரியில் தேசிய டெங்கு தினம் மே 16 கடைபிடிக்கப்பட்டது.
மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அதிகாரி மரு. லியாக்கத் அலி மாவட்ட நல கல்வி அலுவலர் மணவாளன் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் நேர்முக உதவியாளர் கோகுல்நாதன் வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் பொறுப்பு செந்தில்குமார் ஆண்டவர் கல்லூரியின் தாளாளர் நடராஜன் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்கள் களப்பணி உதவியாளர்கள் டெங்கு காய்ச்சல் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்லூரியில் பயிலும் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பேரணி சென்றனர் கல்லூரி மாணவிகளுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வு நலக்கல்வி அளிக்கப்பட்டது மேலும் டெங்கு பற்றிய சுகாதார உறுதிமொழியை சுகாதார ஆய்வாளர் மணிமாறன் வாசித்தார்.
முடிவில் வடுகச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையசுகாதார ஆய்வாளர் சுத்தானந்த கணேஷ் நன்றி கூறினார்.
- மாதாந்திர சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை அடுத்த ஆழியூரில் மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் மாதாந்திர சிறப்பு கலந்தாய்வு கூட்டம், புதிய உறுப்பி னர்களின் அறிமுக கூட்டம் மற்றும் இஸ்தரி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாற்றுத்தி றனாளிகள் நலச்சேவை பிரிவின் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆழியூர். ஹாஜா மைதீன் தலைமை தாங்கினார்.
மாநில ஒருங்கி ணைப்பா ளர்கள் முருகையன், பொ ருள்வை கண்ணுவாப்பா, ஜெம்பு கேசன், செல்வராஜ், பாலசுப்பிரமணியன், நாகை மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் வீராசாமி மற்றும் நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்ட செய்தி தொடர்பாளர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாள ர்களாக நிறுவன தலைவர் சம்பத்குமார், தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலமுரளி, தலைமை சட்ட ஆலோசகர் வக்கீல் வைரவநாதன் கலந்து கொண்டனர்.
இதில் வறுமையில் வசித்து வரும் மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்த தொழிலாளி பிச்சை என்பவருக்கு சுமார் 6.500 கிலோ எடையுள்ள இஸ்தரி பெட்டி வழங்கப்பட்டது.
அதன் மூலம் அவர் தொழில் செய்ய வழிவகை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
எம்.என்.கே. டிரஸ்டின் பொது சேவைகள் குறித்து அறிந்து புதிதாக 15-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் டிரஸ்டில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்கள் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
முன்னதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலமுரளி வரவேற்றார்.
முடிவில் மாநில ஒருங்கிணைப்பாளர் (பொது) பொருள்வை கண்ணுவாப்பா நன்றி கூறினார்.
இதில் ஜெயினுதின் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- தெற்கு சல்லிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே வேட்டைக்காரனிருப்பு தெற்கு சல்லிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். விவசாயி.
இவருடைய மனைவி காந்திமதி (வயது54).
இவர் நேற்று வீட்டில் இருந்தபோது காலில் கட்டு விரியன் பாம்பு கடித்து விட்டது. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் காந்திமதி இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சுற்றுச்சுவர் இடிந்து காணப்படுவதால், சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தன.
- விரைவில் தாமரை குளம் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகரின் அடையாளமாக விளங்கும் தாமரைக்குளம் சிதிலமடைந்து உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
அங்கு சுற்றுச்சுவர் இடிந்து காணப்படுவதால், சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தன.
இந்நிலையில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷாநவாஸ் அங்கு நேரில் ஆய்வு செய்து, விரைவில் தாமரைக் குளம் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து
விடப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
அதன்படி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சுற்றுச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதை ஷாநவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- விழாவையொட்டி கட்டமது உண்பதும், உழவாரப்பணி விடை செய்வதும் நடைபெற்றது.
- 63 நாயன்மார்கள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பு கலூரில் அக்னீசுவரசாமி கோவில் உள்ளது. தேவார ஆசிரியர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் இந்த கோவிலில் தான் ஐக்கியமானார்.
ஆதலால் இந்த கோவிலில் ஆண்டுதோறும் அப்பர் ஐக்கிய திருவிழா நடைபெற்று வருகிறது.
அதேபோல இந்த ஆண்டு அப்பர் ஐக்கிய திருவிழா 10 நாட்கள் நடை பெற்றது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை கட்டமது உண்பதும், உழவாரப்பணி விடை செய்வதும், 63 நாயன்மார்கள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதைதொடர்ந்து இரவு நடைபெற்ற திருமுறை கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூர் 18-வது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் தலைமை தாங்கினார்.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் காரைக்கால் முனைவர் ராஜேஸ்வரன், திருவாரூர் புலவர் விவேகா னந்தன், கவிஞர் நாகை நாகராஜன், புலவர் நாகை வேம்புமாலா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
இதை த்தொடர்ந்து நேற்று அதிகாலை அப்பர் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சாமிகள், கோவில் நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேதாராண்யம் உபகோட்டத்திற்க்குட்பட்ட வேதாரண்யம் துணை மின் நிலையம், வாய்மேடு 1 துணை மின் நிலையம், ஆயக்கா ரன்புலம் துணை மின் நிலையம் ,வேட்டைகாரன் இருப்பு துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்ப்பள்ளி, தோப்புதுறை, பெரியக்குத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு,ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், இடும்பவனம் தொண்டியக்காடு, தாணிக்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர் பஞ்நதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்காரன்புலம் , கருப்பம்புலம், கடிநெல்வயல், கத்தரிபுலம், செட்டிபுலம் ,நாகக்குடையான், குரவப்புலம் , தென்னம்புலம், கரியாப்பட்டினம்,நாலுவேதபதி, வெள்ள பள்ளம், விழுந்தமாவடி, கோவில்பத்து,கன்னி தோப்பு ஆகிய பகுதிகளுக்கு நாளை 16-ந்தேதி செவ்வாய்கிழமை காலை 9.00 மணி முதல் 5.00மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முன்னுரிமை அடிப்படையில் விரைந்து நாகையில் அரசு சட்ட கல்லூரியை தொடங்க வேண்டும்.
- இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை தந்த சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகம்மது ஷாநவாஸ் ஒரு கோரிக்கை மனு அளித்தார்.
அந்த கோரிக்கை மனுவில் கூறியிப்பதாவது:-
மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி என்ற அரசின் திட்டத்தின் படி, நாகப்பட்டினத்தின் பின்த ங்கிய நிலையை கருத்தில் கொண்டு முன்னு ரிமை அடிப்படையில் நாகையில் விரைந்து அரசு சட்டக் கல்லூரியை தொடங்க வேண்டும்.
இது குறித்து ஏற்கெனவே சட்டப்பேரவையில் பேசியுள்ள தோடு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள 10 முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகவும் முன்வைத்து ள்ளேன்.
எனவே இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
- நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நாகூர் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- வரைபடத்துடன் திட்ட மதிப்பீடு தயார் செய்து தரும்படி அதிகாரிகளிடம் கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகூர் பேருந்து நிலையம் மிகவும் சிதிலமடைந்து உள்ளதாகவும், அதனை சீரமைத்து, வணிக வளாகம் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்துகள் உள்ளே சென்று வரும்படி மேம்படுத்த வேண்டுமென்று மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நாகூர் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் உட்கட்ட மைப்பை மேம்படுத்துவது தொடர்பாக வரைபடத்துடன் திட்ட மதிப்பீடு தயார் செய்து தரும்படி அதிகாரிகளிடம் கூறினார்.
விரைவில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரை சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்த உள்ளதாகவும், நாகை புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுவது போல், நாகூர் பேருந்து நிலைய சீரமைப்பும் நிறைவேறும் என்று அவர் உறுதியளித்தார்.
ஆய்வின் போது நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில்குமார், நகராட்சி செயற் பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- வங்கியில் நகை கடன் மற்றும் பல்வேறு தொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
- மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகர கூட்டுறவு கடன் சங்கம் கடந்த 24 ஆண்டுகளாக இயங்கி வருகிறது .
இந்த கூட்டுறவு சங்கத்தில் சுமார் 8000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். வங்கியில் நகை கடன் மற்றும் பல்வேறு தொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க கடன் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு வங்கி செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
விழாவில் மறைஞாயநல்லூர் பொன்னாங்காட்டை சேர்ந்த மரிக்கொழுந்து மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கடன் உதவி நகர கூட்டுறவுவங்கி தலைவர் (பொறுப்பு) அன்பரசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் வங்கி பணியாளர்கள் கண்ணன், மகாராஜன், நகராட்சி மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் செல்லம்மாள் மற்றும் வங்கி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.
- கடிநெல்வயல் அரசு மேல்நிலை பள்ளி மாணவி நிவேதிதா நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் முதல் இடம் பிடித்தார்.
- வேதாரண்யம் தி.மு.க ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் பாராட்டி புத்தகம் வழங்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கடிநெல்வயல் அரசு மேல்நிலை பள்ளி மாணவி நிவேதிதா நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் முதல் இடம் பிடித்தார்.
அவரை வேதாரண்யம் தி.மு.க ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் பாராட்டி புத்தகம் வழங்கினார்.
இதில் நகர் மன்ற தலைவரும் நகர செயலாளருமான புகழேந்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சன்.செல்லப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






