என் மலர்
நாகப்பட்டினம்
- உலக நன்மை வேண்டி ருத்ர யாகம் நடைபெற்றது.
- மேல மறைக்காடர், வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் கோவிலில் உலக நன்மைக்காக ருத்ரயாகம் நடந்தது.
யாகத்தில் விக்னேஷ்வர பூஜையுடன், சுப்பிரமண்ய, நவக்கிரக பரிகார விசேஷ பூஜைகளுடன்ருத்ர மகாயாகம் வேதநாயகி அம்மனுக்கு உலக நன்மை வேண்டி யாகம் நடைபெற்றது.
பின்னர் மேல மறைக்காடர், வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தீபாரதனையும் முடித்த பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
- பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.
- பழமையான சுமைதாங்கி பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிலையம் அமைத்துத்தர வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
துணைத்தலைவர் அறிவழகன், ஒன்றிய ஆணையர்கள் ராஜூ, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அலுவலர் ரமேஷ் தீர்மானங்களை படித்தார்.
பின்னர் தீர்மானங்கள் குறித்து உறுப்பினர்கள் பேசியாதவது:-
செம்போடை ஊராட்சி பகுதியில் 24 மணி நேரமும் சாராய விற்பனை நடைபெறுகிறது.
எனவே, சாராய விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும்.
மருதூர் வடக்கு ஊராட்சி பகுதியில் உள்ள பைப்புகளில் தண்ணீர் வருவதில்லை, தெரு விளக்குகள் எரியவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாணிக்கோட்டகம் ஊராட்சி பகுதியில் உள்ள தெரு விளக்குகளில் பல ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வில்லை.
மேலும், பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.
முள்ளியாறு, மானங்கொண்டான் வடிகால் ஆறுகளின் கரைகளை பலப்படுத்தி மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய வேண்டும்.
மேலும், ஆறுகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும்.
கோடியக்காடு எல்லை பகுதியான பழமையான சுமைதாங்கி பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிலையம் அமைத்துத்தர வேண்டும் என உறுப்பினர்கள் பேசினர்.
இதேபோல உறுப்பி னர்கள் ருக்மணி, அருள் மேரி, வேதரெத்தினம், கோமதி, தனபால் உள்பட கவுன்சிலர்கள் தங்களது தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசினர்.
தலைவர் கமலாஅன்பழகன்:-
ஒன்றிய பகுதிகளில் சாலைப்பணிகள் உள்பட தேவையான வளர்ச்சி பணிகள் நிதி ஆதாரங்களின் அடிப்படையில் கட்சிப்பா குபாடின்றி செய்யப்படும் என்றார்.
கூட்டத்தில் மின்சாரம், நெடுஞ்சாலை, சமூக நலத்துறைகளின் அதிகாரிகளும், ஒன்றிய அலுவலர்களும் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி ஒன்றிய துணை ஆணையர் அண்ணாதுரை நன்றி கூறினார்.
- சுமார் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி மணல்மேடு கிராமம் உள்ளது.
இங்கு சுமார் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு காய்கறி சாகுபடியே பிரதான தொழிலாக உள்ளது.
இக் கிராமத்திலிருந்து அடுத்து உள்ள மீனவர் காலனி செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கப்பி மற்றும் மணல் சாலையாகவே உள்ளது.
இதனால் இவ்வழியே செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என விவசாயிகள் மிகவும் சிரமப்படு கின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி நிற்கிறது.
இதனால் வாகன ஒட்டிகள் பெரிதும் அவதி அடைகிறார்கள்.
இதனால் இந்த சாலையை தார் சாலையாக மாற்றி அமைத்துதர வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வைகாசி மாத அமாவாசை பெருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
- முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தடைந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியை அருகே உள்ள பூவைத்தேடி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீபாலஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் வைகாசி மற்றும் அமாவாசையை பெருவிழாவை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 501 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
விரதம் இருந்த பக்தர்கள் மாணிக்க விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் செண்டை மேளங்கள் முழங்க பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்தடைந்தனர்.
பின்னர் ஸ்ரீபாலஆஞ்சநேயருக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு மஹாதீபாரதணை காண்பிக்கப்பட்டது.இதில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
- கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து உற்சாகமாக கடலில் நீராடுகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்து பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், யாத்திரிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது முழு ஆண்டு தேர்வு விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வேளாங்க ண்ணியில் குவிந்துள்ளனர்.
பின்னர் நடுத்திட்டு, கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர். மேலும் தங்களது வேண்டுதல்களை மொட்டை அடித்தும், மெழுகுவத்தி ஏற்றியும், மாதாவிற்கு மாலை அணிவித்தும், தென்னங்கன்றுகளை காணிக்கையாக செலுத்தியும் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து உற்சாகமாக கடலில் நீராடுகின்றனர். மேலும் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கி சுடுதலில் ஈடுபடும் சுற்றுலா பயணிகள் ராட்டினத்தில் தங்களது குழந்தைகளை அமர வைத்து கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாடி வருகின்றனர்.
அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு வேளாங்கண்ணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
- அமிர்தகர சுப்பிரமணியருக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- சுப்பிரமணியர் ஒரு முகம், 6 கரங்களை கொண்ட குழந்தை முகத்துடன் அருள்பாலிப்பது சிறப்பாகும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதி கோவில்களில் வைகாசி மாத கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுகருக்கும், வெளிபிர காரத்தில் உள்ள மேலக்குமர ருக்கும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடைபெற்றது.
பின்னர், சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல், கோடியக்காடு அமிர்தக டேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியருக்கு மஞ்சள், பால் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின், விபூதி அலங்கா ரத்துடன் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரா தனை காண்பிக்கப்பட்டது.
இக்கோவிலில், சுப்பிரம ணியர் ஒரு முகம், 6 கரங்களை கொண்ட குழந்தை முகத்துடன் அருள்பாலிப்பது சிறப்பாகும்.
இதேபோல், தோப்பு த்துறை கைலாசநாதர் கோவிலில் உள்ள முருகருக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் உள்ள முருகருக்கும், வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து முருகனை வழிபட்டனர்.
- குளங்கள் கழிவுநீராலும், குப்பைகளாலும் சூழந்து துார்ந்து போகும் நிலையில் உள்ளது.
- வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்பவர்கள் இந்த குளங்களில் நீராடி செல்வார்கள்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லை ஊரா ட்சிக்கு உட்பட்ட புத்துார் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் இங்கு சிவன்கோயில் தெரு குளம், அய்யனார்குளம், தாமரைக்குளம் ஆகிய 3 குளங்கள் உள்ளது.
இந்த குளங்கள் தற்போது கழிவுநீராலும், குப்பைகள், கருவேல மரங்கள் சூழந்து துார்ந்து போகும் நிலையில் உள்ளது.
மேலும் தேங்கி உள்ள தண்ணீரால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதிலிருந்து விஷ பூச்சிகள் அப்பகுதியில் உள்ள குழந்தைகளை கடிப்பதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை குளத்தை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
வேளாங்கண்ணிக்கு பாதை யாத்திரையாக செல்பவர்கள் இந்த குளங்களில் குளித்துவிட்டு செல்வார்கள்.
தற்போது இந்த குளங்கள் தூர்வாரப்படாததால் அதில் தேங்கியுள்ள நீர் அசுத்தமாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் குளத்தை துா ர்வாரி மக்கள் பயன்பா ட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆஞ்சநேயருக்கு வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
- ஆஞ்சநேயருக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் எதிரே கோவில் கொண்டுள்ள ஆஞ்ச நேயருக்கு வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடந்தது.
பின்னர், வண்ண மலர்களாலும், வெற்றிலை, வடை மாலைகள் சார்த்தப்பட்டும் சிறப்பு தீபாரா தனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
இதேபோல், நாகக்கு டையான் சீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும், வேட்டைக்கா ரனிருப்பு, கோவில்பத்து கிராமத்தில் இரட்டை கருடன் சன்னதி கொண்ட எனையாளும் கண்ணப்பெருமான் கோவிலில் தெற்கு முகமாக அமைந்துள்ள ஆஞ்சநே யருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
பின்னர், வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
- நாகையில் அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று தகவல் மையம் அமைக்க கோரிக்கை வைக்கப்படும்.
- 115 ஆண்டுகள் பழமையான கடல் மட்டம் அளவிடும் கல், டச்சுக் கல்லறை உள்ளிட்ட பல தொன்மையான இடங்களை பார்வையிட்டனர்.
நாகப்பட்டினம்:
தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான ஆய்வுக் குழுவினர் அண்மையில் நாகப்பட்டினம் வருகை தந்து, சூடாமணி விகாரம் இருந்த நாகை நீதிமன்ற வளாகம், 115 ஆண்டுகள் பழமையான கடல் மட்டம் அளவிடும் கல், பழைய கோட்டாட்சியர் அலுவலகம், நாகை அருங்காட்சியகம், டச்சுக் கல்லறை உள்ளிட்ட பல தொன்மையான இடங்களை பார்வையிட்டு 3 நாள்கள் ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் அந்த ஆய்வு முடிவுகளை அறிக்கையாக அளித்துள்ளனர். அறிக்கையின் முதல் பிரதியை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாசிடம் அமர்நாத் ராமகிருஷ்ணா வழங்கினார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும் என்றும், விரைவில் முதலமைச்சர் மற்றும் அமைச்சரை சந்தித்து, நாகையில் அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று தகவல் மையம் அமைக்க கோரிக்கை வைக்கப்படும் என்றும் ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறினார்.
- குற்றவாளிகள் அதிரடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
- விஷசாராயத்தை கைப்பற்றியதுடன், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் காவல்துறையினரால் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு பல்வேறு மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கடந்த மூன்று நாட்களில் (14, 15, 16.05.2023) ஆகிய 3 நாட்களில் மட்டும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் நடத்திய தீவிர மதுவிலக்கு வேட்டையில் 96 கள்ள சாராய வழக்குகள் பதியப்பட்டும், அதில் 92 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ 8,31,950 மதிப்பு உடைய விஷசாராயத்தை கைப்பற்றியதுடன், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுபோன்ற மதுக்கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,என்றும் குற்றவாளிகள் அதிரடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவல்துறையிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள் (10581)மூலம் கள்ளச்சாராய விற்பனை கஞ்சா விற்பனை மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சனையை குறித்தும் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- சிறுவர் பூங்காவினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் திறந்து வைத்தார்.
- நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் ஸ்வஸ்திக் நகரில் அம்ருத் 0.2 திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சம் செலவில் கட்டப்பட்ட சிறுவர் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது . விழாவிற்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார்.
நகராட்சிஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுவர் பூங்காவினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் மங்களநாயகி, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், ஆத்மா குழு தலைவர் சதாசிவம்,
வழக்கறிஞர்கள் அன்பரசு, வெங்கடேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னர், வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு தீபா ராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகிய நாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தி யன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீ ஸ்வரர் கோவில், வெள்ளப்ப ள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வ ரமுடையார் கோவில், அகரம் அழகிய நாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில், ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் கோவில், கத்தரிப்புலம் கோவில் குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களில் பிரரோஷ வழிபாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






