வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யும் பணி

13 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளன.குத்தகை செலுத்தி வருபவர்கள் குத்தகை செலுத்த இயலாமல் உள்ளனர்.
கோவில் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
கோவில் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு 13 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளன.

இந்த நிலங்களில் ஓரளவுதான் கணக்கில் உள்ளது.

பாக்கி நிலங்கள் யாரிடம், எவ்வளவு உள்ளது என்பது தெரியவில்லை.

இதனால் பல ஆண்டுகளாக குத்தகை செலுத்தி வருபவர்கள் குத்தகை செலுத்த இயலாமல் உள்ளனர்.

இந்நிலையில், கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்ய உத்தரவிடப்பட்டு அதன்படி, குரவப்புலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை வட்டாட்சியர் அமுதா, கோவில் நிர்வாக அதிகாரி அறிவழகன் உள்பட கோவில் அலுவலர்கள், நில அளவையர் குழுவினர் நிலங்களை அளவீடு செய்து எல்லைக்கல் போட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com