என் மலர்
நீங்கள் தேடியது "நாகூர் பேருந்து நிலையம்"
- நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நாகூர் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- வரைபடத்துடன் திட்ட மதிப்பீடு தயார் செய்து தரும்படி அதிகாரிகளிடம் கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகூர் பேருந்து நிலையம் மிகவும் சிதிலமடைந்து உள்ளதாகவும், அதனை சீரமைத்து, வணிக வளாகம் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்துகள் உள்ளே சென்று வரும்படி மேம்படுத்த வேண்டுமென்று மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நாகூர் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் உட்கட்ட மைப்பை மேம்படுத்துவது தொடர்பாக வரைபடத்துடன் திட்ட மதிப்பீடு தயார் செய்து தரும்படி அதிகாரிகளிடம் கூறினார்.
விரைவில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரை சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்த உள்ளதாகவும், நாகை புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுவது போல், நாகூர் பேருந்து நிலைய சீரமைப்பும் நிறைவேறும் என்று அவர் உறுதியளித்தார்.
ஆய்வின் போது நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில்குமார், நகராட்சி செயற் பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






