என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கி பலியான 5 ஆடுகள்: அதிர்ச்சியில் பெண் உரிமையாளர் மரணம்
- மின்னல் தாக்கி 5 ஆடுகள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தன.
- லதா, தான் ஆசையாய் பராமரித்து வந்து ஆடுகள் இறந்து விட்டதே என்ற அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி பகுதியை சேர்ந்தவர் வீரையன். இவரது மனைவி லதா (வயது 40).
இவர்கள் சொந்தமாக 10 ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று இரவு ஆடுகளை வீட்டின் பின்புறம் கட்டி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி 5 ஆடுகள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தன.
இதனை பார்த்த லதா, தான் ஆசையாய் பராமரித்து வந்து ஆடுகள் இறந்து விட்டதே என்ற அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வாய்மேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story