என் மலர்
நாகப்பட்டினம்
- ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் பக்தர்கள் காவடி எடுத்து வந்து வழிபடுவது வழக்கம்.
- அங்கு நடந்த பாரம்பரிய கோலாட்டத்தை கண்டு ரசித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 28-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் பக்தர்கள் காவடி எடுத்து வந்து வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில், திருவிழாவின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை யொட்டி பக்தர்கள் மாவிளக்கு வைத்தும், படையலிட்டும், பால் காவடி, பன்னீர் காவடி, வேப்பிலை காவடி மற்றும் பாடை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். தொடர்ந்து அங்கு நடந்த பாரம்பரிய கோலாட்டத்தை கண்டு ரசித்தனர்.
- கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினார்.
- தப்பி ஓடிய குற்றவாளியை நாகூர் போலீசார் தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக வாஞ்சூர் பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வாஞ்சூர் சோதனை சாவடி வழியே புதுச்சேரி மாநிலம், காரைக்காலிருந்து வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர்.
சோதனையில் மோட்டார் சைக்கிளில் 180 மில்லி அளவுள்ள 197 கோட்டர் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து மதுகடத்தலில் ஈடுபட்ட வெளிப்பாளையம் தாமரைக் குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவரிடமிருந்து 197 மதுபாட்டில்களும் மற்றும் கடத்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளைய போலீசார் கைப்பற்றினார்.
இதேபோல் நாகூர் புறவழி சாலையில் நடைபெற்ற சோதனையில் மோட்டார் சைக்கிளை மறித்த போது மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு மர்மநபர் தப்பி ஓடி விட்டார்.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்த 100 புதுச்சேரி சாராய பாட்டில்களையும் கைப்பற்றப்பட்டன.
இது குறித்து வழக்கு பதிவு செய்த நாகூர் போலீசார் தப்பி ஓடிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
- பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
- முடிவில் ஊராட்சி செயலாளர் ரெங்கராசு நன்றி கூறினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தில் தேசிய தலித் கண்காணிப்பகம், புதுடெல்லி தலித் மனித உரிமைக்கான தேசிய அமைப்பு, மதுரை காஸ்கோ சேவை நிறுவனம் மற்றும் வெள்ளப்பள்ளம் ஊராட்சி மன்றம் ஆகியவை இணைந்து உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடந்தியது. ஊராட்சி தலைவர் துரைசாமி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார்.
முன்னதாக பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, தனிப்பது, பேரிடருக்கான முன்னெச்சரிக்கை தயார்படுத்துவது மற்றும் அரசு செயல்படுத்தி வரும் சமூக பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து மாநில அளவிலான பயிற்சியாளர் அன்னப்பூ ரணி, மாநில அளவிலான தேசிய கண்காணிப்பு ஒருங்கிணைப்பாளரும், காஸ்கோ நிறுவனருமான துரைபாண்டி ஆகியோர் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாகை மாவட்ட தலித் கூட்டமைப்பு தலைவர் முருகேசன் செய்திருந்தார். முடிவில் ஊராட்சி செயலாளர் ரெங்கராசு நன்றி கூறினார்.
- நாகை மாவட்டத்தில் முதல்முறையாக இந்த நவீன அரிசி ஆலை அமைக்கப்படுகிறது.
- நெல்கள் வெளிமாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பும் செலவு குறையும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி கிராமத்தில் தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தின் கீழ் நவீன அரிசி ஆலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
மஞ்சகொல்லை ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. ஒரு ஏக்கர் பரப்பளவில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள நவீன அரிசி ஆலைக்கான அடிக்கல்லை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் நட்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதல்மு றையாக அமைக்கப்படும் இந்த நவீன அரிசி ஆலை மாவட்ட வளர்ச்சியில் முக்கிய பங்கு வைக்கும் எனவும், ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்பட உள்ள இந்த நவீன அரிசி ஆலை பயன்பாட்டிற்கு வரும் பொழுது நாகை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்கள் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பும் செலவு குறையும் எனவும் கௌதமன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கணேசன், அரிசி ஆலையின் நிர்வாக இயக்கு னர் கணேசன் ஆறுமுகம் மற்றும் வணிகர்கள் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் 3 நாள் பயிற்சி நடைபெற்றது.
- எண்ணும் எழுத்திற்கான களஞ்சியங்களை காட்சிப்படுத்தி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ஆயக்காரன்புலம் இரா. நடேசனார் மேல்நிலைப் பள்ளியில் 164 ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 3 நாள் பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜ், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பழனிச்சாமி (பொ), வட்டார கல்வி அலுவலர்கள் ராஜமாணிக்கம், ராமலிங்கம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்பசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் மற்றும் சமூக அறிவிய லுக்கான பயிற்சியை மாவட்ட கருத்தாளர்கள் நீலமேகம், முருகானந்தம், பரமசிவம், சிவபாலன் ஆகியோர் எண்ணும் எழுத்திற்கான களஞ்சியங்களை காட்சிப்படுத்தி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு இந்த திட்டத்தை எடுத்து செல்வதற்கு ஆயத்தமாக பயிற்சி அளிக்கப்ப ட்டதாக பயிற்சி யாளர்கள் தெரிவித்தனர்.
- கள்ளநோட்டுகள், ஸ்கேன் எந்திரம், கணினியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- 3 சிறுவர்களையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
நாகப்பட்டினம் :
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்தரிப்புலத்தில் 3 பேர் கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விடுவதாக போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 14 மற்றும் 15, 16 வயதுடைய 3 சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 200 ரூபாய் ,100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகளை கத்தரிப்புலத்தில் உள்ள உறவினர் ஒருவருக்கு சொந்தமான ஸ்டுடியோவில் ஸ்கேன் செய்து , அந்த கள்ளநோட்டுகளை கணினி மூலம் பிரிண்ட் எடுத்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.
இதையடுத்து கள்ளநோட்டுகளையும், ஸ்கேன் எந்திரம் , கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்களையும் கைது செய்து அவர்களை வேதாரண்யம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், காரியப்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு வந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகள் மற்றும் ஸ்கேன் எந்திரம், கணினி ஆகியவற்றை பார்வையிட்டார்.
ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்து கள்ளநோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட 3 சிறுவர்கள் கைது செய்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கடங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
- மவுன சித்தர் பீடத்தில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வேதாரண்யம்:
வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
வனதுர்க்கை அம்மன் கோவில்
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கடங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, வண்ண மலர்க ளால் அலங்கரி க்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தாகள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
மாணிக்கவாசகர் மடம்
இதேபோல், வேதாரண்யம் நகரின் மேல வீதியில் உள்ள மாணிக்கவாசகர் மடத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசகருக்கு பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விக்னேஸ்வரன் தலைமையில் பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசக பாடல்கள் பாடி மாணிக்கவாசகரை வழிபட்டனர்.
முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகர்த்தா, யாழ்ப்பாணம் வரணி ஆதீனம், செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மவுன சித்தர் பீடம் இதேபோல், வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காடு தெற்கு பகுதியில் அமைந்துள்ள மவுன சித்தர் பீடத்தில் தினசரி பூஜைகள் நடைபெறும். நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் மகானுக்கு பிடித்த பலகாரங்கள், பொங்கல் ஆகியவை படையல் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.தொடர்ந்து, பக்தர்கள் பீடத்துக்கு வந்து தியானம் மேற்கொண்டு வழிபாடு நடத்தினார்கள். மேலும், பவுர்ணமியை முன்னிட்டு கடல் அன்னைக்கு பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
- இரட்டைமடி வலைகள் மீனவர்கள் பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்.
- மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
நாகப்பட்டினம்:
காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பான நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டம் அக்கரைப்பேட்டை மீன் பிடித் துறைமுகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் நாகப்ப ட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர் கிராம நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டை மடி வலைகளை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் பயன்படுத்தி தொழில் செய்வதை தடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தமிழ்நாடு கடல் எல்லையில் தொழில் செய்ய வந்தால் விசைப்படகுகளை சிறைபிடித்து மீன்வளத்து றையில் ஒப்படைக்க வேண்டும் என்றும், காரைக்கால் மாவட்ட விசைப்படகுகளுக்கு வியாபார ரீதியாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது எனவும், ஐஸ் உள்ளிட்ட மீன்பிடி தளவாடங்களை நாகை மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் வழங்க கூடாது என முடிவு செய்துள்ளனர்.
மேலும் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து அத்துமீறி தொழில் செய்தால் மீன்பிடி தடைக்காலம் முடிந்தவுடன் வரும் 14ம் தேதி முதல் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தொழில் மறியல் போராட்ட த்தில் ஈடுபடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் (மே) 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- வருகிற 6-ந் தேதி வெள்ளி ரத புறப்பாடு நடைபெற உள்ளது.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில்அமைந்துள்ளது.இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா,தங்க கருட சேவை, வெள்ளை சாத்தி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சௌரிராஜ பெருமாள்,பத்மினி தாயார் திருக்கல்யாண உற்சவம் நேற்று முதல் நாள் இரவு நடைபெற்றது.தொடர்ந்து நேற்று பெருமாள் உபநாச்சியார்கள் நால்வருடன் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.விழாவையொட்டி, வருகிற 6-ஆம் தேதி வெள்ளி ரத புறப்பாடும், 7-ஆம் தேதி விடையாற்றியும் நடைபெறு கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் முருகன்,செயல் அலுவலர் குணசேகரன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- விரதம் இருந்த பக்தர்கள் கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- தொடர்ந்து, பக்தர்கள் ரதக்காவடி எடுத்து வந்து வழிபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள தெற்குப்பொய்கை நல்லூரில் பழமை வாய்ந்த சொர்ணபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
கோவிலில் வைகாசி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட விரதம் இருந்த பக்தர்கள் கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்தி கரகம் முன்னாள் செல்ல ஒன்றன்பின் ஒருவராக மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
இதைத்தொடர்ந்து ரதக்காவடி அலகு காவடி எடுத்து வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களின் கோலாட்ட நிகழ்ச்சி நடை பெற்றது.
- சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுபானம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வெளிப்பாளையம் நல்லியான் தோட்டத்தில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மது பானம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 180 வெளி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் இது போன்ற கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் இதுகுறித்து புகார் தெரிவிப்பவர்கள் ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
- செங்காதலைபாலம்- வேதாரண்யம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
- நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
வேதாரண்யம்:
நாகை கோட்டம், வேதாரண்யம் உட்கோட்ட த்தில் நடைபெற்று வரும் சாலை பணிகளை திருச்சி, நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் வட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர் விஜயலெட்சுமி தலைமையில் பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர். செங்காதலைபாலம்- வேதாரண்யம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளின் தரம் குறித்து தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, தஞ்சாவூர், நெடுஞ்சாலை த்துறை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் சரவணன் மற்றும் நாகப்பட்டினம் நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கோட்டப்பொ–றியாளர் நாகராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.






