என் மலர்
நாகப்பட்டினம்
- இணைப்பு சாலையின் நடுவே மின்கம்பம் நடப்பட்டது.
- இதனால் மாற்று வழியில் 5 கி.மீ சுற்றிச்செல்லும் அவல நிலை உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்த மாவடி மணல்மேட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயலின் போது எல்லைரோட்டையும் -சடச்சி கச்சல் சாலையை இணைக்கும் 2 கிலோ மீட்டர் இணைப்பு சாலையின் நடுவே மின்கம்பம் நடப்பட்டது.
சாலையின் நடுவே இடையூறாக உள்ள இந்த மின்கம்பத்தால் பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ், மற்ற வாகனங்கள் என அனைத்தும் மாற்றுவழியில் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் அவல நிலை உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் சாலை பணியையும் மேற்கொள்ள முடியாமல் மணல் சாலையாக உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே உடனடியாக மின்கம்பத்தை அகற்றி சாலையின் ஓரத்தில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி பணியாளர்கள் சேகரித்து குப்பை கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.
- சுற்றுலா பயணிகளிடம் பொது இடங்களில் குப்பைகள் கொட்டக்கூடாது என விழிப்புணர்வு.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி சார்பில் சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி ஆகியோரின் உத்தரவுபடி வேதாரண்யம் நகராட்சி பகுதியில் மக்கள் தூய்மை இயக்கம் ஓராண்டு நிறைவு பெற்றது,
உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் சன்னதி கடல் பகுதியில் மெகா தூய்மை பணி நடைபெற்றது.
கடற்கரை மற்றும் கடற்க ரைக்கு செல்லும் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி பணியாளர்கள் சேகரித்து குப்பை கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் தூய்மை பணி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் மங்கள நாயகி, உறுப்பி னர்கள், தன்னார்வலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கடற்க ரைக்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் பொது இடங்களில் குப்பைகள் கொட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டு துண்டு பிரசு ரங்கள் வழங்கப்பட்டது.
- வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஆதனூர், கருப்பம்புலம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியர் (பொறுப்பு) மதியழகன் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் புஷ்பவனம், தேத்தாக்குடி வடக்கு, செம்போடை, குரவப்புலம், ஆதனூர், கருப்பம்புலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
இதில் ஆதரவற்ற விதவை சான்று கோரி விண்ணப்பித்திருந்த ஆதனூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ ரேகா தேவி என்பவருக்கு உடனடியாக ஆதரவற்ற விதவை சான்றை கோட்டாட்சியர் (பொறுப்பு) மதியழகன் வழங்கினார்.
அப்போது தாசில்தார் ஜெயசீலன், வருவாய் கோட்ட நேர்முக உதவியாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கவியரசி ஆகியோர் உடன் இருந்தனர்.
- தூணில் முருகேசனை கட்டி வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.
- அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது இறந்து தெரிய வந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மதுபோதை மறுவாழ்வு சிகிச்சை மையம் இயங்கி வருகிறது.
இந்த சிகிச்சை மையத்தில் மதுபோதையை மறப்பதற்காக 30 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளாங்காடு ஊராட்சி கரையங்காடு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி முருகேசன் (வயது 47) என்பவரும் சிகிச்சை பெற்று வந்தார்.
இவர் நேற்று மறுவாழ்வு மையத்தின் பூட்டை உடைத்து தப்பிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிகிச்சை மையத்தை சேர்ந்தவர்கள் அங்கு உள்ள தூணில் முருகேசனை கட்டி வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர், வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் பசுபதி ஆகியோர் மதுபோதை மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முருகேசன் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக வேதாரண்யம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிகிச்சை மைய உரிமையாளர் மணிகண்டன் (36), மேலாளர் வேல்மு ருகன்(38), பணியாளர்கள் ஷியாம் சுந்தர்(35), தீபக்குமார்(33) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
முன்னதாக மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த சரண்ராஜ்(32), பிரபாகரன்(35), பாலமுருகன் (25) ஆகிய 3 பேரும் காயம்பட்டிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதித்தனர்.
மீதம் இருந்த 26 பேரில் 17 பேரை வேதாரண்யத்தில் உள்ள பல்நோக்கு சேவை கட்டிடத்துக்கும், 9 பேரை நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கும் வேதாரண்யம் உதவி கலெக்டர் மதியழகன், தாசில்தார் ஜெயசீலன் ஆகியோர் அனுப்பி வைத்தனர்.
அதைத்தொ டர்ந்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு 'சீல்' வைத்தனர்.
இந்த சம்பவம பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொடி புனிதம் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
- மின் அலங்கார பெரிய தேர்பவனி வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த கோகூரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக, கொடி ஊர்வலம் ஆலயத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து, தஞ்சை மறை மாவட்ட பரிபாலர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர், கொடி புனிதம் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான மின் அலங்கார பெரிய தேர்பவனி வருகிற 17ந் தேதி நடைபெற உள்ளது.
- கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 4 பேரையும் கைது செய்து 580 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறு வதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங்குக்னு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைய டுத்து அவரது உத்தரவின் பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கஞ்சா விற்ற வேதாரண்யம் அடுத்த கீழ ஆறுமுக கட்டளையைச் சேர்ந்த கபிலன் (வயது 26), உச்சகட் ( 24), ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி நெடுமாறன் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்து 580 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் குழுவிற்கு போட்டிகள் நடைபெற்றன.
- வெற்றி பெற்ற 25 மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் மகளிர் திட்ட நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுவிற்கு கவிதை கட்டுரை ஓவிய போட்டிகள் நடைபெற்றன.
இதையடுத்து பரிசளிக்கும் விழா மகளிர் திட்ட இயக்குனர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் செல்லம்மாள் வரவேற்றார்.
நிர்வாக கணக்கு திட்ட உதவிஅலுவலர் முருகேசன், உதவித்திட்ட அலுவலர் சரவணன் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற 25 மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களுக்கு தலைமை திட்ட இயக்குனர் முருகேசன் பரிசுகள் வழங்கினார்.
- பொதுமக்களுக்கு மஞ்சப்பை, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
- மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சியும், கரகம், தப்பாட்ட நிகழ்ச்சியும் நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேசிய பசுமை படை சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டு சுற்றுச்சூழலை பாதுகா ப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறினார்.
பின்னர் பொதுமக்க ளுக்கு மஞ்சப்பை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாணவ மாணவி யருக்கு மூலிகைக் கன்றுகள் வழங்கினார்.
சுற்றுச்சூ ழல் விழிப்பு ணர்வு நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் செ.சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு
ஏ.நிர்மலா ராணி, மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் முருகன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தெர்லின் விமல், பள்ளித்துணை ஆய்வாளர் ராமநாதன், நகராட்சி துணைத் தலைவர் செந்தில்கு மார், நாகூர் சித்திக் சேவை குழுமத்தை சேர்ந்த நாகூர் சித்திக் வேளாங்கண்ணி அந்தோணிசாமி நாகை மோகன், அமிர்தா பள்ளி முதல்வர் என் சித்ரா, சுற்றுச்சூழல் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் எஸ்.செங்குட்டுவன், தேசிய பசுமைப்படை ஆசிரியர்கள் பால சண்முகம், ரமேஷ், மங்கலம், ரகு, காட்சன், அருண் முன்னாள் என்சிசி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் கலை குழுவினரின் கரகம் தப்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முன்னதாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளர் தமிழ் ஒளி வரவேற்றார்.
முடிவில் தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் நன்றி கூறினார்.
- சாலை விபத்துக்கள் அதிகமாக தினமும் நடைபெறுகின்றன.
- பொதுமக்கள் அனைவரும் மிகவும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் வர்த்தக சங்கம் சார்பில் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை சாலையில் அதிகமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
திருமருகலை சுற்றியுள்ள சுமார் 20 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த சந்தைப்பேட்டை சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் அதிவேகத்திலும் கட்டுபா டின்றி செல்வதாலும், சாலை விபத்துக்கள் அதிகமாக தினந்தோறும் நடை பெறுகின்றன.
பொதுமக்கள் அனை வரும் மிகவும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
பொதுமக்கள் நலன் கருதியும்,சாலை விபத்து ஏற்படாமல் இருப்ப தற்கும்,அரசு மருத்துவமனை அருகில் வேகக்கட்டுப்பாட்டு தடையும், சந்தைப்பேட்டை சாலையிலும், அண்ணாமலை நகர் சாலையும் சந்திக்கும் இடத்தில் வேகக்கட்டுப்பாட்டு தடையும் அமைத்து தரும்படி பொதுமக்கள் சார்பாகவும், திருமருகல் வர்த்தகர்கள் சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை நாணயக்கார தெருவில் உள்ள உச்சமாகா ளியம்மன் கோவிலில் வைகாசி உற்சவம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து காளியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள் பூந்தட்டுகள் எடுத்து ஊர்வலமாக காளியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர், அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் கலந்துகொண்ட பெண்களுக்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதனைய டுத்து கலசம்பாடி முத்து பூசாரி குழுவினரின் காளியாட்டத்துடன் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
- விவசாயிகள் உழவு பணியை மேற்கொள்ள இந்த மழை பயனுள்ளதாக இருக்கும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் அக்கினி நட்சத்திரம் நிறைவடைந்தும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் வெயில் வாட்டி வதைத்து வந்தது.
இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக்கி வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு திடீர் கனமழை பெய்தது.
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட திட்டச்சேரி, திருமருகல், நாகூர், வெளிப்பாளையம், புத்தூர், பரவை, வேளாங்கண்ணி, திருப்பூண்டி, மேலப்பிடாகை, திருவாய்மூர், எட்டுக்குடி, ஈசனூர், வாழக்க ரை, கீழையூர்,சாட்டியக்குடி, கீழ்வேளூர், சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் பல்வேறு நகர் பகுதிகளில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதோடு பெரும்பாலான வாகன ஓட்டிகள் நனைந்த படி பயணம் மேற்கொண்ட னர்.
மேலும் இந்த திடீர் மழை வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் ஜூன் 12 தண்ணீர் திறந்து விடப்பட உள்ள நிலையில், குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் உழவு பணியை மேற்கொள்ள இந்த திடீர் மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரி வித்துள்ளனர்.
- நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் மெகா தூய்மை பணி நடைபெற்றது.
- பொதுமக்களிடம் சாலையில் குப்பைகளை கொட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேதாரண்யம்:
சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி ஆகியோரின் உத்தரவின்படி, வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மை இயக்கம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார்.
நகராட்சி ஆணையர் ஹேமலதா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் மங்கள நாயகி, உறுப்பினர்கள், ஈகா, பிரியம் அறக்கட்டளைகள், தன்னார்வலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் மெகா தூய்மை பணி நடைபெற்றது.
பின், நந்தவன குள தெருவில் பொதுமக்கள் பங்களிப்புடன் குளத்தை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து, அகஸ்தியர்கோவில் குளம் தூய்மை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, தூய்மை பணியாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக நகராட்சி நுண்ணிய உரக்கிடங்கில் பணிபுரியும் 8 பணியாளர்களுக்கு நற்சான்றிதழை நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் வழங்கினர்.
பின்னர், தோப்புத்துறை இலந்தயடி ரஸ்தா பகுதியில் கொட்டப்பட்டிருந்த கட்டிடக்கழிவுகள் அகற்றப்பட்டு பொதுமக்களிடம் குப்பைகளை சாலையில் கொட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.






