என் மலர்
நாகப்பட்டினம்
- நாகையில் உள்ள புதேவாலயம், கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுவிட் வழங்கி கொண்டாடினார்.
- மீலாதுநபி பெறுவிழாவாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மீலாதுநபி பெறுவிழாவாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி நாகூர் நாயகன் நேசபாசறை என்ற அமைப்பை சேர்ந்த ஹாஜா சம்சுதீன் சாகிப் என்ற இஸ்லாமியர் மீலாது நபியை மத நல்லிணக்க விழாவாக கொண்டாடும் வகையில் நாகப்பட்டினம் கடற்கரை சாலையில் உள்ள புனித லூர்து அன்னை தேவாலயம், புகழ்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம், பாப்பாகோவில் ஹாஜா சேக் அலாவுதீன் வலியுல்லா தர்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு சுவிட் கேக் வழங்கி கொண்டாடினார்.
மீலாது நபி பெருவிழாவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இஸ்லாமியர் ஒருவர் கேக் வழங்கி கொண்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது.
- கள்ளச்சாராயம் கடத்தல், விற்பனையை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- சாராயம் விற்பனையில் ஈடுபட்டு தனபாலன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி நாகை மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொ ருத்தானிருப்பு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனபாலன் (வயது 57).
இவர் அதே பகுதியில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் சாராயம் விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளதோடு தனபாலன் கைது செய்யப்பட்டு நாகை மாவட்ட சிறையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து தனபாலன் சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வருவதால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்கிற்கு பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸக்கு பரிந்துரை செய்தார்.
அதனை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து கீழ்வேளூர் போலீசார் நாகை சிறையில் இருந்த தனபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
திருமருகலில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு திருமருகல் ஒன்றிய தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், தலைவர் குமார், பொருளாளர் திருவருட்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக மாவட்ட மகளிர் அணி நிர்வாகி ஜெயலட்சுமி வரவேற்றார்.
மாநில தலைமை நிலை செயலர் ரமேஷ் கொள்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை சரி செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- நகரில் பெரும்பாலான தண்ணீர் தேவையை இந்த குளம் பூர்த்தி செய்கிறது.
- குளத்தை சீரமைத்து நகரில் நீர் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நாகை நகரில் உள்ள நீர் நிலைகளில் முக்கியமானதாக அக்கரை குளம் உள்ளது.
தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த குளத்தை குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இது தவிர நகரில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு வரக்கூடிய பக்தர்கள் இந்த குளத்தில் நீராடி செல்வது வழக்கம்.
நகரில் பெரும்பாலான தண்ணீர் தேவையை இந்த குளம் பூர்த்தி செய்கிறது.
தற்போது இந்த அக்கரை குளத்தை சுற்றி கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.
வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் மாசடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
நாகை நகரில் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த குளத்தை சீரமைத்து நகரில் நீர் ஆதாரத்தை பெருக்கி பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகர் பகுதியில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
- பேரூராட்சி பகுதியில் அரசால் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தனர்.
- பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமாக ரூ.3 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டகலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்திரவின்படி, வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகம் செய்யப்படுகிறதா ? என கடைகளில் பேரூராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.
இதில் கடைகளில் 30 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமாக ரூ.3000 வசூல் செய்யப்பட்டது.
தொடர்ந்து பேரூராட்சி ஊழியர்கள் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கிறதா என சோதனை நடத்தி வருகின்றனர்.
- பெருங்கடம்பனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.
- அதனை தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்ட இரண்டாம் ஆண்டை முன்னிட்டு வனத்துறை சார்பில் நாகை பெருங்கடம்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.
அதனையொட்டி தேசிய பசுமை படை மாணவர்கள், ஆதிபராசக்தி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வனச்சரகர் ஆதிலிங்கம், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், பசுமை கண்காணிப்பாளர் டிவைனியா, தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் எழிலன், ஓவிய சங்கத் தலைவர் முருகையன், இயற்கை ஆர்வலர் கீழ்வேளூர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு மாணவர் பெயரிலும் ஒவ்வொரு மரக்கன்று நடப்பட்டு அவற்றை பராமரித்து வளர்த்து காட்டும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் ஒரு வருடம் கழித்து அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
தேசிய பசுமை படை மாணவர்களுக்கு கிரேட் எஃப் தொண்டு நிறுவனம் சார்பாக மஞ்சப்பைகள் வழங்க ப்பட்டன.
- திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கபடி போட்டியில் மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலை யில்லா சைக்கிள வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் தலைமை யாசிரியர் வெங்கடசுப்பிர மணியன் தலைமை தாங்கினார்.
ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரவணன், இளஞ்செழியன், அபிநயா அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 78 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பரமேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திருமால்வளவன் நன்றி கூறினார்.
பின்னர் முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.
விழாவில் போட்டியில் கலந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு, கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ வழங்கினார்.
- கண்இமைக்கும் நேரத்தில் மீனவர்கள் ஹரிகிருஷ்ணன் உள்பட 5 மீனவர்களையும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்க தொடங்கினர்.
- தொடர் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே உள்ள செருதூர் கிராமத்தில் இருந்து சக்திபாலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (வயது 26), சூர்யா (25), கண்ணன் (23), சிரஞ்சீவி, சக்தி பாலன் ஆகிய 5 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டனர்.
இன்று அதிகாலை 5 பேரும் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 அதிவேக படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் நாகை மீனவர்கள் பைபர் படகில் ஏறினர். கண்இமைக்கும் நேரத்தில் மீனவர்கள் ஹரிகிருஷ்ணன் உள்பட 5 மீனவர்களையும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்க தொடங்கினர்.
இந்த தாக்குதலில் மீனவர்கள் 5 பேரும் காயமடைந்து படகில் சரிந்து விழுந்தனர். இதனை தொடர்ந்து 550 கிலோ வலை, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பிடித்து வைக்கப்பட்ட மீன்கள், வாக்கி டாக்கி, ஜி.பி.எஸ் கருவி, பேட்டரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து தப்பினர்.
கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்கள் 5 பேரும் இன்று காலை கரைக்கு திரும்பி உறவினர்களுக்கு நடந்த விவரங்களை கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்த நாகை கடலோர காவல்படையினர் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த மீனவர்களை நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோடியக்கரையில் மீன்பிடித்து கொண்டிருந்த 4 நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை பறித்து சென்றனர். தற்போது மீண்டும் கோடியக்கரையில் இலங்கை கடற்கொள்ளையர்கள், மீனவர்களை தாக்கி கொள்ளையடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கடற்கொள்ளையர்களின் தொடர் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கருநாவாய் பூச்சி அறுவடை நிலையில் உள்ள வயல்களில் அதிகமாக தென்படுகிறது.
- விளக்கு பொரி அமைத்து தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
நாகப்பட்டினம்:
குறுவை பயிர்களை தாக்கும் குருத்துப் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குருத்துப்பூச்சி பாபநாசம் வேளாண்மை கோட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் ஆங்காங்கே குருத்துப் பூச்சி, கரு நாகப்பூச்சி மற்றும் இலை கருகல் நோய் அறிகுறிகள் தென்படுகிறது.
கபிஸ்தலம் அருகே கருப்பூர் கிராமத்தில் குறுவை பயிர்களில் வேளாண்மை துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கருநாவாய் பூச்சி அறுவடை நிலையில் உள்ள வயல்களில் அதிகமாக தென்படுகிறது.
இதனை கட்டுப்படுத்திட ஆசி பேட் 25 எஸ்.பி. ஏக்கருக்கு 250 கிராம் உபயோகப்படுத்தலாம்.
மேலும் வாத்துகளை கருநாவாய் பூச்சிகள் காணப்படும் வயல்களில் மேச்சலுக்கு விடுவதன் மூலம் இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்.
விளக்கு பொரி அமைத்து தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். கருநாவாய் பூச்சிகளை வேப்பங்கொட்டை கரைசல் வயலில் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
பாக்டீரியல் இலை கருக்கல் நோயை கட்டுப்படுத்திட தாக்குதல் அதிகமாக காணப்படும் போது காப்பர் ஆட்சி குளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்பெக்ட்ரோ மைசின் சல்பேட் மற்றும் பெற்றா சொலின் கலவை 120 கிராம் ஆகிய மருந்துகளை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேலைகளில் தெளித்து இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாகை மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் நாளை கடன் மேளா நடக்கிறது.
- ரூ.15 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கப்பட உள்ளன.
நாகப்பட்டினம் :
நாகப்பட்டினம் கூட்டுறவு சங்க நாகை மண்டல இணைப்பதிவாளர் அருள் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி நாகை மாவட்ட கூட்டுறவுத்துறையின் சார்பில் கடன் மேளா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடக்கும் இந்த கடன் மேளாவில் மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள், வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், வட்டியில்லா மீனவர் கடன், வட்டியில்லா மாற்றுத்திறனாளிகள் கடன் உள்ளிட்ட ரூ.15 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கப்பட உள்ளன.
இதில் வைப்புத்தொகை திரட்டுதல், பல்வேறு வகையான கடன் மனுக்கள் பெறுதல், புதிய சேமிப்பு கணக்குகள் தொடங்குதல், மத்திய கூட்டுறவு வங்கியின் தொழில் நுட்ப சேவைகளை விளம்பரப்படுத்துவது ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பயங்கர ஆயுதங்களுடன் நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
- வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் அவருடைய மகன்கள் பிரதீப், பிரகாஷ், பிரவின், திருமுருகன் உள்ளிட்ட 4 பேர் கடந்த 21-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கோடியக்கரை தென்கிழக்கே 10 நாட்டில்கள் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு அத்துமீறி 2 அதிவேக படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்களிடம் கத்தி முனையில் மீன்கள் மற்றும் தளவாட பொருட்களை கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பின்னர் கத்தி முனையில் நாகை மீனவர்களின் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ வலை, 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், ஜிபிஎஸ் கருவி , 4 செல்போன்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் படுகாயங்களுடன் செருதூர் மீன் இறங்குதளத்திற்கு வந்த மீனவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சக மீனவர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தொழில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், ஒன்றிய அரசும் தமிழக அரசும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழுமம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர், போலீஸ் சூப்பிரண்டு ஜோதிராமலிங்கம் நாகை மீனவர்களை தாக்கி மீன் மற்றும் வலைகளை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்னதாக சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார்.
- நுண் உரக்கிடங்கு வளாகத்தில் செயல்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி சார்பில்தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் நகராட்சி செயல்படுத்தி வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை பொதுமக்கள் , சிறு கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்விளக்கம் அளிக்கபட்டது.
நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார் நகராட்சி ஆணையர் வெ ங்கடலட்சுமண ன்முன்னி லை வகித்தார்.
சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் வரவேற்றார் நிகழ்ச்சியி ல்வர்த்தக சங்க தலைவர் தென்னரசு பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி வளம் மீட்பு மையத்திலும் நுண் உரக்கிடங்கு வளாகத்திலும் செயல்முறை கள் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வணிகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் உரக்கி டங்கில் தயார் செய்யப்பட்ட மாதிரி உரம் இலவசமாக வழங்கப்பட்டது.
திடக்கழிவு மேலாண்மைவளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.






