கடைகளில் 30 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

பேரூராட்சி பகுதியில் அரசால் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தனர்.பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமாக ரூ.3 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்.
Published on

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டகலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்திரவின்படி, வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகம் செய்யப்படுகிறதா ? என கடைகளில் பேரூராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

இதில் கடைகளில் 30 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமாக ரூ.3000 வசூல் செய்யப்பட்டது.

தொடர்ந்து பேரூராட்சி ஊழியர்கள் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கிறதா என சோதனை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com