என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • பள்ளிகளில் அருகே கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.
    • விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் பள்ளி அருகில் புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    நாகை, புத்தூர், மஞ்சக்கொல்லை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் உத்தரவின்படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் இளங்கோவன் ஆலோசனையின் படி, புகையிலை பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில் குமார், நவீன்பாலா, ராகுல், தேவகுமார், விக்னேஷ், பாலமுருகன் ஆகியோரை கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது புகையிலை தடுப்பு சட்டத்தை மீறியவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    இது குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் கூறியதாவது:-

    புகையிலை கட்டுப்பாடு தொடர்பான சட்டங்களை அமல்படுத்தும் விதமாக ஒவ்வொரு வணிக வளாகங்கள், அலுவலகங்களில் 'புகையிலை பயன்படுத்துதல் தடைசெய்யப்பட்ட பகுதி' என்ற வாசகம் அடங்கிய விளம்பர பலகை வைக்க வேண்டும்.

    சிகரெட் பற்ற வைப்பதற்கு ஏதுவாக எரியூட்டப்பட்ட கயிறு, லைட்டர் ஆகியவற்றை கடைகளில் வைத்திருக்க கூடாது.

    பள்ளிகளில் இருந்து 100 மீட்டர் இடைவெளியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.

    18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது இல்லை என்ற வாசகம் அடங்கிய விளம்பர பலகையை கட்டாயமாக வணிக வளாகங்களில் வைக்க வேண்டும்.

    இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டு சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது பொது சுகாதார சட்டங்களை மீறிய உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அலுவலர்கள் நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனர்.

    • தொடர்ந்து இலங்கை கடல் கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் நடந்து வருவதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் சொந்தமாக பைபர் படகு வைத்துள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மதியழகன், குமரவேல், நெடுஞ்செழியன் ஆகிய 4 பேரும் நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 10 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு பைபர் படகில் இலங்கை கடல் கொள்ளையர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் கத்தி முனையில் மீனவர்களை மிரட்டி படகில் இருந்த மீன்கள், ஜி.பி.எஸ். கருவி, செல்போன்கள் உள்ளிட்ட சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இந்நிலையில் இன்று காலை ஆறுகாட்டுதுறைக்கு கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    தொடர்ந்து இலங்கை கடல் கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் நடந்து வருவதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காவல்துறையினரும் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.
    • வீரமரணம் அடைந்தவர்களுக்கு 21 குண்டுகள் 3 முறை முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு உயிரிழந்த காவலர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவு தூண் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் , போலீஸ் சூப்பிரண்டு ஹரிஷ் சிங் ஆகியோர் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்நது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு , துணை போலீஸ் சூப்பிரண்டுகள் , ஊர்க்காவல் படையினர் உட்பட அனைத்து நாகை மாவட்ட காவல்துறை யினரும் மலர் வளையம் வைத்து வீரவ ணக்கம் செலுத்தினார்கள்.

    பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் போலீசார் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் பின்பு ஆயுதப்படை காவல் ஆய்வாளரின் தலைமையில் ஆயுதப்படை காவலர்கள், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு 21 குண்டுகள் 3 முறை முழங்க அஞ்சலி செலுத்தி, போலீசார் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    • பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.
    • 5 வகையான உணவுகள் வாழை இலை போட்டு பறிமாறப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரத்தில் சமுதாய வளைக்காப்பு விழா நடைப்பெற்றது.

    இதில் வேளாங்கண்ணி திருப்பூண்டி பூவைத்தேடி, கீழையூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100- க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்துக் கொண்டனர்.

    சாதி, மதம் கடந்து கலந்து கொண்டவர்களுக்கு தமிழ் பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.

    வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவி டயானா சர்மிளா , கீழையூர் வட்டார திட்ட அலுவலர் சித்ரா ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு ஆகியோர் கலந்துக் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை தட்டினை வழங்கினர்.

    மேலும் புளி சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், எழுமிச்சை சாதம், இனிப்பு பொங்கல் என ஐந்து வகை உணவு வகைகளை வாழை இலை போட்டு பந்தி பறிமாறப்பட்டது.

    கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்களை அங்கன் வாடி பணியாளர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு செய்து கொடுத்தனர்.

    • கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, சினை ஊசி, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டது.
    • சிறந்த கால்நடை பராமரிப்பு உரிமையாளர்களுக்கு மேலாண்மைகான விருது வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்

    நாகை ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தானிருப்பு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சிறப்பு மருத்துவம் முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் மற்றும் உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, சினை ஊசி, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டது. முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் லாரன்ஸ், பூபதி, ராதா ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வாய்மேட்டை அடுத்த அண்ணாப்பேட்டை ஊராட்சியில் நடந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக கால்நடை உதவி மருத்துவர் கமலப்பட்டு வரவேற்றார். ஒன்றியக்குழு உறுப்பினர் கோமதி தனபால், கால்நடை உதவி மருத்துவர் சிவசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன. இதில் சிறந்த கால்நடை பராமரிப்பு உரிமையாளர்களுக்கு மேலாண்மைகான விருது வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    • பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்க ண்ணியை அடுத்த பிரதாபரா மபுரம் வடக்கு பாலத்தடியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஸ்ரீவல்லவ கணபதி கோவிலில் நவராத்திரி விழாவை யொட்டி தினந்தோறும் பல்வேறு அலங்காரங்கள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி 5 நாள் நிகழ்ச்சியான நேற்று மஹா லெட்சுமி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். முன்னதாக பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தயிர் உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மஹாதீ பாரதனை காண்பிக்க ப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கடலோர கிராமங்களில் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் சுனாமி புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்கும் அரணாகவும் பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி, காமேஷ்வரம் உள்ளிட்ட கடலோர கிராமங்களை பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

    பிரதாபராமபுரம், விழுந்த மாவடி, காமேஸ்வரம், , நாகூர் பட்டினச்சேரி, வேட்டைக்காரன் இருப்பு, உள்ளிட்ட 24 மீனவர் கிராமங்களில் 7.1/2 லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட்டு இருப்பதாகவும் இப்பணியில் கல்லூரி மாணவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் தன்னார்வு அமைப்பினர் ஈடுபட்டதா கவும் இதன் மூலம் வரும் காலங்களில் கடற்கரை ஓரம் இயற்கை பேரிடர் இருந்து பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

    குறிப்பாக பிரதாப ராமபுரம் ஊராட்சியில் உள்ள கடற்கரைப் பகுதியில் ஆய்வுமேற்கொண்ட கலெக்டர் 4 ஆண்டுகளில் இந்த கிராமத்தில் மட்டும் 5 லட்சம் பண விதைகள் நடப்பட்டு தற்போது நன்கு வளர்ந்திருப்பதாகவும், இதில் 90% மரக்கன்றுகள் நல்ல நிலையில் வளர்ந்து இருப்பதாகவும் அடுத்த கட்டமாக உள் கிராமங்களில் தமிழ்நாடு கிரீன் விஷன் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்படும் என தெரிவித்தார்.

    • வடகிழக்கு பருவமழை அக்டோபர் 23ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த இரண்டு தினங்களாகவே லேசான பனிப்பொழிவு காணப்படுகிறது.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 23ஆம் தேதி துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள் ஆனால், தற்போது அதற்கு மாறாக நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே லேசான பனிப்பொழிவு காணப்படுகிறது.

    குறிப்பாக இன்று அதிகாலை முதல் கீழ்வேளூர், பட்டமங்கலம்,தேவூர், கிள்ளுக்குடி, அனக்குடி, இறையான்குடி, கொளப்பாடு, திருக்குவளை, வாழக்கரை, ஈசனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சற்று கூடுதல் பனிப்பொழிவுடன் கூடிய மந்தமான வானிலை நிலவி வருகிறது.

    பருவ நிலை மாற்றம் காரணமாக மார்கழி மாதம் போன்று காணப்படும் சூழலால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

    அதிகாலை வேளையில் பணிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் டியூசன் செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகி உள்ளதோடு சளி இருமல் காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்படும் எனவும் அச்சமடைந்துள்ளனர்.

    நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்கள் முழுவதுமாக பனி போர்வை போர்த்தியது போன்று காட்சியளித்து வருகிறது.

    • 3 பேரும் ஒரே மோட்டார் சைக்களில் சென்றனர்.
    • சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரிஸ்வான்(17), பாஸித்(17), நூஃபுல்(17) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்களில் திருவாரூர் - நாகை நெடுஞ்சாலையில் சென்றனர்.

    அப்போது கூத்தூர் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது திருவாரூரிலிருந்து நாகை நோக்கி வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் இதில் ரிஸ்வான் மற்றும் பாசித் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கீழ்வேளூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்ற படுகாயம் அடைந்த நூஃபுலை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து கீழ்வேளூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நெல்மூட்டைகளின் எடை, சாக்கு, சணல் , தார்பாய் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.
    • அங்கு இருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

    நாகப்பட்டினம்:

    மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அதை நம்பி நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்தனர் இருந்தபோதிலும் போதிய தண்ணீர் இல்லாததால் சுமார் 40,000 ஏக்கரில் குறுவை பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் எஞ்சிய பயிர்களை ஏரி குளங்கள் மூலம் இறைத்து தற்போது அறுவடை ப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் பெருங்கட ம்பனூர்,தெத்தி, சின்னத்து ம்பூர், ஆவராணி , பட்டம ங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்பட்ட நேரடி கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    கொள்முதல் செய்து இருப்பு வைக்கப்ப ட்டுள்ள நெல்மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்ப ட்டுள்ளதா, கொள்முதல் செய்த நெல்லின் தரம், நெல்மூட்டைகளின் எடை,சாக்கு, சணல் , தார்பாய் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.

    அதனை தொடர்ந்து அங்கு இருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

    பின்னர் அவர் அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    முதல்நிலை மண்டல மேலாளர் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய நாகப்பட்டினம் மாவட்டத்தில் 114 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 12000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பு வைக்காமல் உடனுக்குடன் நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து லாரிகள் மூலம் சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது தரக்கட்டுபாட்டு துணை மேளாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • சவுந்தரநாயகி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் ஆமாதள நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    மருங்கூர் கோவில்

    இதேபோல், மருங்கூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் சவுந்தரநாயகி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், கணக்கர் சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மனித சங்கிலியாக சென்றனர்.
    • விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் அமைதி அறக்கட்டளை சார்பில் குழந்தை திருமணம் இல்லா இந்தியா குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடைப்பெற்றது.

    மாவட்ட குற்றவியல் நீதிபதி கார்த்திகா தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மனித சங்கிலியாக நின்றனர்.

    தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் முன்னிலையில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து குழத்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எழிலரசி, மாவட்ட சமூக நல அலுவலர் சுகிர்தா தேவி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபபாலன், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×