என் மலர்
நாகப்பட்டினம்
- விழாவில் அமைச்சர் ரகுபதி பங்கேற்று பேசினார்.
- பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட் அனைவரையும் வரவேற்றார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது.
விழாவில் அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ., முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நகர்மன்ற தலைவர் புகழேந்தி, கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குனர் உதயம் முருகையன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர். சுந்தரராஜன், ஆத்மா குழு உறுப்பினர் மகாகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட் அனைவ ரையும் வரவேற்றார். தொடர்ந்து, பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
- ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- வருகிற 30-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதிஉலா நடைபெற உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், வடக்கு பொய்கைநல்லூரில் கோரக்கர் சித்தர் ஜீவசமாதி பீடம் உள்ளது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதிலும், ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ஐப்பசி பவுர்ணமி விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு நாளை மதியம் சுவாமிக்கு அன்னாபி ஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்ப டும். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
அதனை தொடர்ந்து, வருகிற 29-ந் தேதி பரணி விழா நடைபெற உள்ளது.
அன்று இரவு 8 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்படும்.
தொடர்ந்து, 30-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதிஉலா காட்சிகள் நடைபெற உள்ளது.
இதற்காக இன்று காலை முதலே அதிகளவில் கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
- மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
- அம்மனுக்கு கலசநீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்று, தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச்யில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு சூரியமூர்த்தி சுவாமிகள் கோவில் அமைந்து ள்ளது.
இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெறுவதற்காக கோவில் திருப்பணிகள் நிறைவுற்ற 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அனுஞக்ஞை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி , கோ பூஜை, தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகளுடன் பூர்ணாஹூதி தீபாரதனைகள் நடைப்பெற்றது. தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை முடிவுற்று மஹா பூர்ணாஹூதி நடைபெற்று யாகசாலை பூஜைகள் நிறைவடை ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
சிவாச்சாரியார் கடங்கங்களை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீசூரியமூர்த்தி சுவாமிக்கு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அம்மனுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.
இக்கும்பாபிஷேகத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்ககள் எடுக்கப்பட்டு வருகிறது.
- ஹெல்மெட் ல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மோட்டார் சைக்கிளில் சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
நாகை செம்போடை ஆர்.வி கல்லூரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் போலீஸ் சூப்பிரண்ட் ஹர்ஷ் சிங் தலைமையில் 150 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியில் ஈடுபட்டனர்.
செம்போடை ஆர் வி இன்ஜினியரிங் கல்லூரியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியானது வேதாரண்யம் சென்று முடிக்கப்பட்டு பின்பு பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது.
- மரக்கன்றுகள் நடும் பணி நடை பெற்றது.
- மரங்களுடன் வாழும் போது தூய்மையான காற்று கிடைக்கிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் தலைமை வகித்தார்.
நாகை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகா மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்து பேசியதாவது:- மரங்கள் உயிரின் சுவாசம் போன்றது மரங்க ளுடன் வாழும் போது தூய்மையான காற்று கிடைக்கிறது.
இதனால் மனிதனின் வாழ்நாள் அதிகரிக்கிறது.
எதையும் உணர்ந்து பார்க்கும் போது தான் அதன் சிறப்புகள் வெளிப்படும் அப்படித்தான் மரங்கள் மரங்களை நட்டு அவற்றுடன் பேச கற்றுக் கொள்ளுங்கள் அவற்றின் பயன் முழுமையாக கிடைக்கும் தற்போது திருமண விழாக்களில் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது இது நமக்குள் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை உணர்த்துகிறது என்றார்.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் டி.எஸ்.பி சுபாஷ்சந்திரபோஸ், வழக்கறிஞர் சங்க தலைவர் பாரி வழக்கறிஞர் சங்க செயலாளர் பாரதிராஜா, துணை தலைவர் வெங்கடேஷ், பொருளார் மதியழகன் துணை செயலாளர் வீரகுமார் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் மணிவண்ணன், குமரவேல், மாதவன், அறிவுச்செல்வன், பாலசுப்பிரமணியன், அன்பரசு, மகேஷ், .கலியராஜன், ராஜசேகர், சுதாகர், ராஜ்குமார், குலாளன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், வழக்கறிஞர் எழுத்தர்கள், தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
- 1200 விசைப்படகுகளும், 6000 பைபர் படகுகளும் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து இருந்தனர்.
- நான்கு நாட்களுக்கு பிறகு இன்று காலை நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மற்றும் பைபர் படகு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
நாகப்பட்டினம்:
வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தொடர்ந்து நாகை மாவட்ட மீன்வளத்துறையினர் ஆழ்கடல் செல்லும் விசைப்படகு மீனவர்கள் மற்றும் பைபர் படகு மீனவர்கள்கடலுக்கு செல்ல தடை விதித்தனர்.
இதனால் நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், நாகூர், சிருதூர் வேளாங்கண்ணி விழுந்தமாவடி, புஷ்பவனம், கோடியக்ககரை வேதாரணியம் ஆற்காடுதுறை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் 1200 விசைபடகுகளும், 6000 பைபர் படகுகளும் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து இருந்தனர்.
நேற்று ஹாமூன் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து அவர்களுக்கான தடையை மீன்வள துறையினர் விலக்கிக்கொண்டு நேற்று மாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கத் தொடங்கினர்.
இதனால் நான்கு நாட்களுக்கு பிறகு இன்று காலை நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மற்றும் பைபர் படகு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
முன்னதாக மீனவர்கள் அவர்களுக்கு தேவையான டீசல், ஐஸ் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களைபடகுகளில் ஏற்றினர். பின்னர் அவர்களின் இஷ்ட தெய்வமான கடல் மாதாவை வணங்கி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
- கடந்த 13-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்ததது..
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ தேவ துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது.
நவராத்திரி பெருவி ழாவை முன்னிட்டு கடந்த மாதம் 13ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நாள்தோறும் சிறப்பு பூஜை நடைபெற்று வந்ததது.
நிகழ்ச்சி நாளில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளித்தார்.
நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான மகாசண்டி யாகம் நடைபெற்றது.
இதில் கோ பூஜை, சுகாசினி பூஜை,வடுக பூஜை, சப்த கன்னிகா பூஜை, பிரம்மச்சாரியார் பூஜை, யாத்ரா தானம், உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து 7அடி அகலம், 7அடி ஆழத்தில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு யாகத்திற்கு பழங்கள், 108 மூலிகைகள் திரவியங்கள் கொண்டு யாகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை வலம் வந்து ஸ்ரீ தேவதுர்க்கை அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
- அரசுஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
தொடர்ந்து திருப்பய த்தங்குடியில் அரசுஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள நிலையில் அதற்கான இடத்தையும், அதை தொடர்ந்து வடகரை ஊராட்சியில் ரேஷன் கடை கட்டுவதற்கான இடத்தையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது திருமருகல் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன்,ஊராட்சி மன்ற தலைவர்கள் ரஜினி தேவி பாலதண்டாயுதம், பாண்டியன், மோகன், ஊராட்சி செயலர் பிரகாஷ் குமார் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
- 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- நாகை மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
நாகப்பட்டினம்:
மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
மேலும் இது வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, நாளை அக்டோபர் 25 ஆம் தேதி நண்பகலில் கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்காளதேச கடற்கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.
இந்நிலையில் புயல் உருவாகிய உள்ளது என்பதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகை ,எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மீன்வளத்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையின்படி நாகை மாவட்டத்தில் 700 விசைபடகுகள் 3000 பைபர் படகுகள் 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பாதுகாப்பு உபகரணங்கள், கோப்புகள் சரஸ்வதி படத்திற்கு முன்பு வைக்கப்பட்டது.
- அலங்கரிக்கப்பட்ட வாகனங்களுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட தலைமை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளது.
இங்கு தீயணைப்பு வாகனங்கள் அவசர ஊர்திகள் அலங்க ரிக்கப்ப ட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன தீயணைப்புக்கு தேவையான கருவிகள், தலைக்கவசம், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கோப்புகள் சரஸ்வதி தேவி புகைப்படத்திற்கு முன்பு வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.
இதைப்போல் நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரணியம் உள்ளிட்ட 7 தீயணைப்பு நிலையங்களிலும் நிலை யங்களிலும் ஒரே நேரத்தில் பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களுக்கு தீபார தனை ஏற்றி வழிபட்டனர்.
பின்பு அனைத்து வாகனங்கள் ஊர்வலமாக சென்றனர் இவ்விழாவில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முகீசன் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் பங்கேற்றனர்.
- தேவூர் தேவபுரீஸ்வரர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது.
- அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த தேவூரில் தேவதுர்கை அம்மன் கோவில் உள்ளது.
நவராத்திரியை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக உலக அமைதி வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது.
தேவூர் தேவபுரீஸ்வரர் கோவிலில் இருந்து விஜயேந்திர சுவாமிகள் தலைமையில் புறப்பட்ட பால்குட ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.
அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- பருவநிலை மாறுபாடு காரணமாக திடீரென பனிப்பொழிவு காணப்படுகிறது.
- சில நேரங்களில் பூவை பறிக்காமலேயே விட்டு விடுகிறோம்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், நெய்விளக்கு, பஞ்சநதிக்குளம் உள்ளிட்ட 20 கிராமங்களில் 4 ஆயிரம் ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது.
இந்த பகுதியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை முல்லைப்பூ சீசன் காலமாகும்.
இந்த சீசன் காலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் முல்லைப்பூக்கள் விளையும்.
இங்கிருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு முல்லைப்பூ விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது வேதாரண்யம் பகுதியில் பருவநிலை மாறுபாடு காரணமாக திடீரென பனிப்பொழிவு காணப்படுகிறது.
இதனால் முல்லைப்பூ செடிகளின் இலைகள் உதிர்ந்து பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
நாள் ஒன்றுக்கு 1 டன் முதல் 2 டன் வரை மட்டுமே வெளியூர்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சீசன் காலத்தில் முல்லைப்பூ கிலோ ரூ.50-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. சீசன் இல்லாத நவம்பர் முதல் பிப்ரவரி வரை கிலோ ரூ.1000 வரை விற்பனை ஆகிறது.
தற்போது கிலோ ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனையாகிறது. பனிப்பொழிவால் முல்லைப்பூ அதிகம் விளையாததால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
விளைச்சல் அதிகமான காலங்களில் பூ பறிப்பதற்கான கூலிக்கு கூட கட்டுப்படியாகாத விலை கிடைக்கிறது.
இதனால் சில நேரங்களில் பூவை பறிக்காமலேயே விட்டு விடுகிறோம்.
இந்த நிலையில் தற்போது எதிர்பாராத வேளையில் பனிப்பொழிவு ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.






