search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
    X

    நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    • 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    • நாகை மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

    நாகப்பட்டினம்:

    மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

    மேலும் இது வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, நாளை அக்டோபர் 25 ஆம் தேதி நண்பகலில் கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்காளதேச கடற்கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.

    இந்நிலையில் புயல் உருவாகிய உள்ளது என்பதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகை ,எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    மீன்வளத்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையின்படி நாகை மாவட்டத்தில் 700 விசைபடகுகள் 3000 பைபர் படகுகள் 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×