வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி ஆய்வு

ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.அரசுஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது.
கட்டிடம் கட்டும் பணிகளை ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
கட்டிடம் கட்டும் பணிகளை ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

தொடர்ந்து திருப்பய த்தங்குடியில் அரசுஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள நிலையில் அதற்கான இடத்தையும், அதை தொடர்ந்து வடகரை ஊராட்சியில் ரேஷன் கடை கட்டுவதற்கான இடத்தையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது திருமருகல் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன்,ஊராட்சி மன்ற தலைவர்கள் ரஜினி தேவி பாலதண்டாயுதம், பாண்டியன், மோகன், ஊராட்சி செயலர் பிரகாஷ் குமார் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com