விவசாயம் செழிக்க வேண்டி தேவதுர்க்கை அம்மனுக்கு அபிஷேகம்

தேவூர் தேவபுரீஸ்வரர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தேவதுர்க்கை அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.
தேவதுர்க்கை அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.
Published on

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த தேவூரில் தேவதுர்கை அம்மன் கோவில் உள்ளது.

நவராத்திரியை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக உலக அமைதி வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது.

தேவூர் தேவபுரீஸ்வரர் கோவிலில் இருந்து விஜயேந்திர சுவாமிகள் தலைமையில் புறப்பட்ட பால்குட ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.

அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com