சாலை விபத்தில் 3 பேர் பலி

3 பேரும் ஒரே மோட்டார் சைக்களில் சென்றனர். சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
சாலை விபத்தில் 3 பேர் பலி
Published on

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரிஸ்வான்(17), பாஸித்(17), நூஃபுல்(17) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்களில் திருவாரூர் - நாகை நெடுஞ்சாலையில் சென்றனர்.

அப்போது கூத்தூர் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது திருவாரூரிலிருந்து நாகை நோக்கி வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் இதில் ரிஸ்வான் மற்றும் பாசித் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கீழ்வேளூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்ற படுகாயம் அடைந்த நூஃபுலை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து கீழ்வேளூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com