என் மலர்
நீங்கள் தேடியது "Survey விவசாயிகள்"
- நெல்மூட்டைகளின் எடை, சாக்கு, சணல் , தார்பாய் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.
- அங்கு இருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
நாகப்பட்டினம்:
மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அதை நம்பி நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்தனர் இருந்தபோதிலும் போதிய தண்ணீர் இல்லாததால் சுமார் 40,000 ஏக்கரில் குறுவை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் எஞ்சிய பயிர்களை ஏரி குளங்கள் மூலம் இறைத்து தற்போது அறுவடை ப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் பெருங்கட ம்பனூர்,தெத்தி, சின்னத்து ம்பூர், ஆவராணி , பட்டம ங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்பட்ட நேரடி கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கொள்முதல் செய்து இருப்பு வைக்கப்ப ட்டுள்ள நெல்மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்ப ட்டுள்ளதா, கொள்முதல் செய்த நெல்லின் தரம், நெல்மூட்டைகளின் எடை,சாக்கு, சணல் , தார்பாய் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து அங்கு இருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
பின்னர் அவர் அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்நிலை மண்டல மேலாளர் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய நாகப்பட்டினம் மாவட்டத்தில் 114 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 12000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பு வைக்காமல் உடனுக்குடன் நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து லாரிகள் மூலம் சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது தரக்கட்டுபாட்டு துணை மேளாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






