என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • சுமார் 1,036 சிறப்பு முகாம்களில் 30,000 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதே இலக்கு.
    • மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் வெல்ல தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் வருகிற 21-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம்ஆகியவை சேர்த்து சுமார் 1036 சிறப்பு முகாம்களில் 30,000 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு "சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்" நடைபெறவுள்ளது.

    எனவே மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்குவீட்டிற்கே சென்று தடுப்பூசிபோட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் விடுபட்டு போன முன்களப்பணியாளாகள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் 2வது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் சிறப்பினமாக 18 முதல் 59 வயதுடைய அனைவரும் 3-வது தவனை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இன்றைய காலகட்டத்தில் காளாண் வளர்ப்பின் அவசியம் அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார்.
    • விவசாயிகள் காளான் வளர்ப்பில் உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி அருள்மொழிதேவன் கிராமத்தில் 2022-23 வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைப்பெற்றது.

    திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொறுப்பு கலைச்செல்வன் தலைமையில் பயிற்சி நடைப்பெற்றது. பயிற்சிக்கு ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன் வரவேற்றார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி இன்றைய காலகட்டத்தில் காளாண் வளர்ப்பின் அவசியம் அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார். சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சந்திரசேகரன் காளாண் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் பற்றி விரிவுரை மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தார்.

    விவசாயிகள் காளாண் வளர்ப்பில் உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் வட்டாரத்தில் நடைமுறை படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலவலர் சிந்து மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.

    • புவி வெப்பமயமாவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகையிலிருந்து 2000 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார்.
    • எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்கிறார்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்துள்ள ஆரியநாட்டுதெரு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிமாறனின் மகன் ஹரிஹரமாதவன். தனியார் கல்லூரியில் ஏரோஸ்பேஸ் படித்து வரும் இவர் புவி வெப்பமயமாவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாகையில் இருந்து 2000 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இவரது சைக்கிள் பயணத்தை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    புவி வெப்பமயமாவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்லூரி மாணவன் ஹரிஹர மாதவன் நாகையில் இருந்து ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி அங்கிருந்து கோவை, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, கும்பகோணம் என 2000 கிலோமீட்டர் சைக்கிளிலேயே தனது பயணத்தை தொடர்கிறார்.

    இதன் மூலம் வழி நெடுகிலும் சந்திக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் இவர் புவி வெப்பமயமாதல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்கிறார்.

    • நெல்மணிகளின் தரம் மற்றும் ஈரப்பதத்தின் அளவினை கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.
    • லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் நெல்மணியை சேமிப்பு கிடங்குக்கு அனுப்ப உள்ள திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் நடைப்பெற்று வரும் பணிகள் குறித்து தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனர்.

    மன்னாா்குடி எம்.எல்.ஏ டி.ஆா்.பி. ராஜா தலைமையில் எம்.எல்.ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சுணன், ஈஸ்வரன், ராமச்சந்திரன்,அருள், அன்பழகன், பாலசுப்ர மணியன், செல்லூர் ராஜு, ராஜ்குமார் , முகமது ஷாநவாஸ் உள்ளிட்ட 11 பேர் இந்த குழுவில் வந்தனர். வேதாரண்யம் தாலுகா ஆலங்குடியில் வேளாண் துறை சாா்பில் நடைபெற்று வரும் ட்ரோன் மூலமான பூச்சி மருந்து தெளிப்புப் பணியை பாா்வையிட்டனர்.

    தொடர்ந்து ஆசியாவி லேயே 2வது மிகப்பெரிய சேமிப்பு கிடங்கான கோவில்பத்து கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொ ருள் வாணிபக் கழக தானிய சேமிப்புக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார்.

    கஜா புயலின் போது சேதமடைந்த நெல் சேமிப்பு கிடங்கில்மேற்கொ ள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் குறித்து, பார்வை யிட்டு இருப்பில் உள்ள நெல்மணிகளின் தரம் மற்றும் ஈரப்பதத்தின் அளவினை கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.

    மேலும் தற்போது ரூ.6 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள தரைதள பணிகள் மற்றும் தானியங்கு முறையில் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் நெல்மணியை சேமிப்பு கிடங்குக்கு அனுப்ப உள்ள திட்டப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து கோடியக்கரை, கோடியக்காடு வனவிலங்கு பகுதியில் ஆய்வு மேற்கொ ண்டனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து மனோகரனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் மனோகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி முச்சந்தி பகுதியில் தெற்குபொய்கைநல்லூர் கிராமத்தை சேர்ந்த மனோகரன் (வயது 40) என்பவர் பைனான்ஸ் நடத்தி வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்த நண்பருடன் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து மனோகரனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மனோகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் மணி வேலுக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தகவல் அறிந்த நாகை போலீஸ் சூப்பிரண்ட் ஜவகர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • வீட்டில் தனியாக வசித்து வரும் ரெத்தினசபாபதி நேற்றிரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்தார்.
    • கட்டிலில் படுத்திருந்த ரெத்தினசபாபதியை யாரோ அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலத்தில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் ரெத்தினசபாபதி (வயது 82) அடித்து கொலை செய்யபட்டுள்ளார்.

    வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலத்தில் வசிப்பவர் ரெத்தினசபாபதி. விவசாயி இவர் கருப்பம்புலத்தில் வீட்டில்தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்தார். காலையில் பால் எடுத்து வந்த பாலமுருகன் பார்த்தபோது ரெத்தினசபாபதி வீட்டின் முன்பு கட்டிலில் படுத்திருந்த வரை அடித்து யாரோ கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    புகாரின் போரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலை நடந்தது குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிறந்த சமூக பணியாற்றிய 10 பள்ளி மாணவிகள் மற்றும் சிறப்பு பெற்ற 15 அலுவலர்களுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.
    • நிகழ்ச்சியில் உமா, மயில்வாகனன், திருக்குமரன் உள்பட கவுன்சிலர்களும், ஊர்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

    வேதாரண்யம்:

    நாைக மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி அலுவலகத்தில் சிறந்த தூய்மை பணி மற்றும் மக்கள் நலம் சார்ந்த பணிகளில் சேவையாற்றிய மாணவிகள், அலுவலர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் மங்களேஸ்வரி, என்ஜினீயர் முகம்மது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் நகர்மன்ற தலைவர் புகழேந்தி சிறந்த சமூக பணியாற்றிய 10 பள்ளி மாணவிகள் மற்றும் வரி வசூல், சுகாதாரம், அலுவலகம் உள்ளிட்ட பணிகளில் சிறப்பு பெற்ற 15 அலுவலர்களுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.

    நிகழ்ச்சியில் உமா, மயில்வாகனன், திருக்குமரன் உள்பட கவுன்சிலர்களும், ஊர்பிரமுகர்களும் கலந்துகொண்டனர். ஆணையர் ஹேமலதா வரவேற்றார். மின்பிரிவு கரிகாலன் நன்றி கூறினார்.

    • டிராக்டரை பறிமுதல் செய்து உரிமையாளர் ராமச்சந்திரன், செந்தில் ஆகியோரை கைது செய்தனர்.
    • மணல் கடத்தலில் ஈடுபட்ட கார்த்தி, பாஸ்கர், நில உரிமையாளர் சரிதா ஆகிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா செம்போடையை சேர்ந்தவர் அசோக்குமார் இவரது மனைவி சரிதா இவருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றிமணல் ஏடுத்தாகவேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர்ஜெயராஜ் பவுலினுக்கு தகவல் கிடைத்ததுசம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின்வேதாரண்யம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ரவி, இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சென்று டிராக்டரை பறிமுதல் செய்தனர் புகாரின் போரில் டிராக்டர் உரிமையாளர் ராமச்சந்திரன், செந்தில் ஆகியோரை கைது செய்தனர்

    மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட கார்த்தி, பாஸ்கர், நில உரிமையாளர் சரிதா ஆகிய மூன்றுபேரை தேடி வருகின்றனர்.

    • காற்றில் நெல் மணிகள் ஒன்றொடு ஒன்று மோதியும், வெடித்தும் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது.
    • நாவாய் பூச்சி தாக்குதலுக்கு வசம்பை பொடியாக்கி வயலில் தூவினால் நாவாய் பூச்சைக் கட்டுப்படுத்தலாம்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் தலைஞாயிறு, பிராந்தியங்கரை, உம்பளச்சேரி, மணக்குடி உள்ளிட்ட ஆற்றுப் பாசன பகுதிகளில் வழக்கமாக 5000 ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணை ஒரு மாதம் முன்பாக திறந்ததால் சுமார் 8000 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. தற்போது குறுவை சாகுபடிகள் நன்றாக வளர்ந்து கதிர் அதிகளவில் வெளிவந்த நிலையில் குறுவை சாகுபடியில் கதிர் நாவாய் பூச்சி தாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது. பருவம் தப்பிய மழையால் நெல் சூழ் பிடிக்கும் வேளையில் கதிரில் தண்ணீர் விழுந்தும் காற்றில் நெல் மணிகள் ஒன்றொடு ஒன்று மோதி நெல்மணிகள் வெடித்தும் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது. உம்பளச்சேரி பகுதியில் காணப்படும் கதிர் நாவாய் பூச்சி தாக்குதலை வேளாண்மை துறை உதவி இயக்குனர் கருப்பையா மற்றும் வேளாண்மை அலுவலர் நவீன்குமார் ஆலோசனையின் பேரில் தலைஞாயிறு உதவி வேளாண்மை அலுவலர் கலைவாணி, விதை அலுவலர் ஜீவா, உதவி தோட்டக்கலை அலுவலர் செல்வராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்பு, நாவாய் பூச்சி தாக்குதலுக்கு வசம்பை பொடியாக்கி வயலில் தூவினால் நாவாய் பூச்சைக் கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

    • பழமையான ஒன்றரை அடியில் ராகு சிலை, ஒன்றரை அடியில் கேது சிலை, 1 அடியில் இரண்டு அம்மன் சிலைகள் இருந்துள்ளது.
    • சிலைகள் நான்கும் அகரக்கொந்தகை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அறையில் வைத்து பூட்டப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் சோழ அய்யனார் கோவில் பின்புறம் கற்சிலைகள் இருப்பதாக திட்டச்சேரி போலீ சாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    தகவலின் பெயரில் திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒன்றரை அடியில் ராகு சிலை, ஒன்றரை அடியில் கேது சிலை, 1 அடியில் அம்மன் சிலைகள் 2ம் இருந்துள்ளது.

    அதனை கைப்பற்றிய திட்டச்சேரி போலீசார் அகரக்கொந்தகை கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். சிலைகள் நான்கும் அகரக்கொந்தகை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அறையில் வைத்து பூட்டப்பட்டுள்ளது. நாளை நாகப்பட்டினம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாக தெரிகிறது.

    கற்சிலைகளை யார் இங்கு கொண்டு வந்தது. எதற்காக கோவிலின் பின்புறம் வைத்து சென்றனர். மற்ற கோவில்களில் இருந்து திருடப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
    • காரைக்கால் மார்க்கத்திலிருந்து நிரவி, சேஷமுலை, இடையாத்தாங்குடி, பண்டாரவாடை, திருப்பட்டினம் வழியாக காரைக்கால் சென்றடைகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் உள்ள புதிய வழித்தடத்தில் புதுச்சேரி போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பஸ் இயக்கப்பட்டது.இதற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மார்க்கத்தில் இருந்து நிரவி, சேஷமுலை, இடையாத்தாங்குடி, பண்டாரவாடை, திருமருகல், திட்டச்சேரி, திருப்பட்டினம் வழியாக காரைக்கால் சென்றடைகிறது.இந்த புதிய வழித்தடத்தை காரைக்கால் மாவட்டம் விழுதியூரில் புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, நிரவி சட்டமன்ற உறுப்பினர் நாகதியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

    அதைத் தொடர்ந்து நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சேஷமுலை, இடையாத்தாங்குடி, திருமருகல், திட்டச்சேரி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு பஸ்சை வரவேற்றனர். இடையாத்தாங்குடியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்திரகலா கிருஷ்ணமூர்த்தி, முருகன், சிவகாமிஅன்பழகன், இடையாத்தங்குடி சுப்பிரமணியன், சேஷமூலை திருநாவுக்கரசு, விழுதியூர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    திட்டச்சேரி பஸ் நிலையம் அருகில் பேரூர் திமுக செயலாளர் முகமது சுல்தான் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் இயக்கிய பஸ்சை வரவேற்றனர்.

    இதில் புதுச்சேரி மாநில போக்குவரத்து கழகத்தின் காரைக்கால் கிளை மேலாளர் அருள்ஜோதி, திருமருகல் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் இந்திரா அருள்மணி, பெரியமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • நேற்றிரவு ஓட்டலின் பின்பக்கம் உள்ள கீற்று சமையல் கூடம் தீடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
    • தீ விபத்தில் பல லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து முற்றிலும் நாசமாயின.

    வேதாரண்யம்:

    வேதாரணியம் சேதுர ஸ்தாவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 67). இவர் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலின் அருகில்மே லமட வளாகத்தில் 40 ஆண்டுகளாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு இவரது ஓட்டலின் பின்பக்கம் உள்ள கீற்று சமையல் கூடம் தீடீரென்று தீப்பிடித்து எரிந்தது தீ மளமள என்று பரவி சமையல் கொட்டகை முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்புத் துறையினர் மேலும் பரவாமல் அணைத்தனர். டிஎஸ்பி முருகவேல் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வந்து பார்னவையிட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து முற்றிலும் நாசமாயின.

    ×