என் மலர்
உள்ளூர் செய்திகள்

இறந்து கிடக்கும் ரெத்தினசபாபதி.
முதியவர் அடித்துக் கொலை
- வீட்டில் தனியாக வசித்து வரும் ரெத்தினசபாபதி நேற்றிரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்தார்.
- கட்டிலில் படுத்திருந்த ரெத்தினசபாபதியை யாரோ அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலத்தில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் ரெத்தினசபாபதி (வயது 82) அடித்து கொலை செய்யபட்டுள்ளார்.
வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலத்தில் வசிப்பவர் ரெத்தினசபாபதி. விவசாயி இவர் கருப்பம்புலத்தில் வீட்டில்தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்தார். காலையில் பால் எடுத்து வந்த பாலமுருகன் பார்த்தபோது ரெத்தினசபாபதி வீட்டின் முன்பு கட்டிலில் படுத்திருந்த வரை அடித்து யாரோ கொலை செய்திருப்பது தெரியவந்தது.
புகாரின் போரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலை நடந்தது குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






