search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paddy Bells"

    • காற்றில் நெல் மணிகள் ஒன்றொடு ஒன்று மோதியும், வெடித்தும் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது.
    • நாவாய் பூச்சி தாக்குதலுக்கு வசம்பை பொடியாக்கி வயலில் தூவினால் நாவாய் பூச்சைக் கட்டுப்படுத்தலாம்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் தலைஞாயிறு, பிராந்தியங்கரை, உம்பளச்சேரி, மணக்குடி உள்ளிட்ட ஆற்றுப் பாசன பகுதிகளில் வழக்கமாக 5000 ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணை ஒரு மாதம் முன்பாக திறந்ததால் சுமார் 8000 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. தற்போது குறுவை சாகுபடிகள் நன்றாக வளர்ந்து கதிர் அதிகளவில் வெளிவந்த நிலையில் குறுவை சாகுபடியில் கதிர் நாவாய் பூச்சி தாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது. பருவம் தப்பிய மழையால் நெல் சூழ் பிடிக்கும் வேளையில் கதிரில் தண்ணீர் விழுந்தும் காற்றில் நெல் மணிகள் ஒன்றொடு ஒன்று மோதி நெல்மணிகள் வெடித்தும் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது. உம்பளச்சேரி பகுதியில் காணப்படும் கதிர் நாவாய் பூச்சி தாக்குதலை வேளாண்மை துறை உதவி இயக்குனர் கருப்பையா மற்றும் வேளாண்மை அலுவலர் நவீன்குமார் ஆலோசனையின் பேரில் தலைஞாயிறு உதவி வேளாண்மை அலுவலர் கலைவாணி, விதை அலுவலர் ஜீவா, உதவி தோட்டக்கலை அலுவலர் செல்வராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்பு, நாவாய் பூச்சி தாக்குதலுக்கு வசம்பை பொடியாக்கி வயலில் தூவினால் நாவாய் பூச்சைக் கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

    ×