என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பி அபராதம் செலுத்திய பிறகு விடுவிக்கப்படும்.
    • இருசக்கர வாகனத்தில் செல்லும் மாணவர்கள் தலைக்கவசம் அணியாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்து.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நெடுஞ்சாலை மருத்துவம் மற்றும் போக்கு வரத்து துறை இதர அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நாகை மாவட்டத்தில் 11 பேர் ஜூலை மாதம் உயிரிழந்துள்ளனர்.

    இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் தலைக்கவசம் அணியாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது இதை தடுக்கும் பொருட்டு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர்ஆகியோர் உத்தரவின் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் காவல்து றையினர் இணைந்து வாகன சோதனை செய்தனர்.

    சோதனையில் ஓட்டுநர் உரிமம் இல்லாத 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பி அபராதம் செலுத்திய பிறகு விடுவிக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, நாகை நகர இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், வின்சென்ட் ராஜ், லோகநாதன், செல்வராஜ் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • 52 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைப்பெற்றது.
    • கர்ப்பிணி தாய்மார்கள் யோகா பயிற்சியை கற்றுக்கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை மற்றும் கீரைகள், பழங்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது.

    இதில் வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்தா தலைமை வகித்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு கீரைகள் மற்றும் பழங்களை வழங்கினார்.

    முன்னதாக 52 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைப்பெற்றது.

    இதில் கர்ப்பிணி தாய்மார்கள் யோகா பயிற்சியை கற்றுக்கொண்டனர்.

    இதில் மருத்துவர்கள் இந்திரா, பார்கவி, மருந்தாளுனர் சக்திவேல் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
    • சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவா ஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் முருகவேல் (வயது 55) விவசாயி.

    இவர் கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

    அக்கம் பக்கத்தினர் முருகவேலை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி முருகவேல் உயிரிழந்தார்.

    இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • அரசு மேல்–நிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தில் ஆய்வு செய்து உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் எம்.எல்.ஏ கேட்டறிந்தார்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

    உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடி கிராமம் மற்றும் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மரைக்கான் சாவடி பகுதியில் தலா ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, கட்டுமாவடியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம், கணபதிபுரம், அம்பல், திருக்கண்ணபுரம் ஊராட்சிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் பயணியர் நிழலகங்களையும் ஆய்வு செய்தார்.

    மேலும், திட்டச்சேரி, திருமருகல், மருங்கூர், கணபதிபுரம் அரசு பள்ளிகளுக்கு வழங்க ப்பட்ட பென்ஞ் டெஸ்க்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குறிப்பாக திருமருகல் அரசு மேல்–நிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தில் ஆய்வு செய்து, உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் எம்.எல்.ஏ கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது, திருமருகல் தி.மு.க ஒன்றியச் செயலாளர்கள் செல்வ செங்குட்டுவன், சரவணன், வி.சி.க ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஒன்றிய ஆணையர் பாலமுருகன், திட்டச்சேரி பேரூராட்சி மன்றத் தலைவர் ஆயிஸா சித்தீக்கா, பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் சுல்தான், ஒன்றிய பொறியாளர்கள் கவிதா ராணி, செந்தில் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனிருந்தனர்.

    • இந்நூலகத்தில் 40 முதல் 100 பேர் வரை தினசரி மாத இதழ் மற்றும் நூல்களை படித்து வருகின்றனர்.
    • சிறிய கட்டடத்தில் நூலகம் இயங்குவதால் 45 ஆயிரம் புத்தகங்களை வைக்கவே இடம் போதுமானதாக உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 1958-ம் ஆண்டு நூலகம் தொடங்கப்பட்டது.

    நூலகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது.

    கடந்த 2017-ம் ஆண்டு நூலகத்திற்கு சொந்தமான கட்டிடம் பழுதடைந்து இடிக்கப்பட்டது.

    அன்று முதல் வேதாரண்யம் பயணியர் மாளிகை செல்லும் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொழில் பயிற்சி கூடத்தில் நூலகம் இயங்கி வருகிறது.

    தற்போது இந்த கட்டிடமும் பழுதடைந்து மழை காலங்களில் தண்ணீர் உள்ளே வருகிறது.

    தற்போது நூலகத்தில் 45 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.

    இதில் 4,100 நபர்கள் உறுப்பினராகவும், 32 புரவலர்களும் உள்ளனர்.

    நாள்தோறும், இந்நூலகத்தில் 40 முதல் 100 பேர் வரை தினசரி மாத இதழ் மற்றும் நூல்களை படித்து வருகின்றனர்.

    மேலும், தமிழக அரசு நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான 1000-க்கும் மேற்பட்ட புத்தகங்களும் இந்த நூலகத்தில் உள்ளன.

    சிறிய கட்டடத்தில் நூலகம் இயங்குவதால் 45 ஆயிரம் புத்தகங்களை வைக்கவே இடம் போதுமானதாக உள்ளது.

    நிறைய வாசகர்கள் ஒரே நேரத்தில் படிக்க வந்தால் படிக்க முடியாமல் இடநெருக்கடியும் ஏற்படுகிறது.

    இதனால் வாசகர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    வேதாரண்யம் நூலகத்திற்கு வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் முன்பு நூலகம் இயங்கிவந்த சுமார் 3000 ஆயிரம் சதுர அடி இடம் காலியாக உள்ளது.

    எனவே, வேறு ஒரு துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கும் நூலகத்திற்கு புதிதாக காலியாக உள்ள பழைய இடத்தில் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என வாசகர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீரஹத்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சன்னதி முன்புள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றபட்டது.
    • பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் விநாயகர் வீதியுலா நடைபெறும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

    முன்னதாக வீரஹத்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, விநாயகர் சன்னதி முன்புள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றபட்டது.

    விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் விநாயகர் வீதியுலா நடைபெறும்.

    விநாயகர் சதுர்த்தியன்று சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் வீதியுலா நடைபெற உள்ளது.

    • சமுதாய விழிப்புணர்வு பேரணி நாகை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நாகூர் தர்கா அலங்கார வாசல் வரை நடைபெற்றது.
    • பேரணியில் மது, சிகரெட், கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் பற்றி துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு கோஷமிட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான சமுதாய விழிப்புணர்வு பேரணி நாகை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நாகூர் தர்கா அலங்கார வாசல் வரை நடைபெற்றது.

    கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பேரணியை தொடங்கி வைத்தனர்.

    பேரணியில் மாணவர்களுடன் ஷாநவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நவுஷாத், நாகூர் தர்கா மேனேஜி டிரஸ்டி காமில் சாஹிப், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினர் கலீபா சாஹிப், நாகூர் முஸ்லீம் ஜமாத் தலைவர் சாஹா மாலிம், நாகை நகர்மன்ற உறுப்பினர் நத்தர், கௌத்தியா மேல்நிலை பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் சாதிக் சாஹிப் கலந்து கொண்டனர்.

    பேரணியில் மது, சிகரெட், கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் பற்றி துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு கோஷமிட்டனர்.

    நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பென்னட் மேரி நன்றி கூறினார்.

    • நாகை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
    • கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேர் திரிகோணமலை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்படியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது இந்திய எல்லையை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரையும் திரிகோணமலை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவிலின் ஆண்டு திருவிழா கடந்த 12-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை செடிலில் வைத்து, தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.

    நாகப்பட்டினம் :

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குப்பொய்கைநல்லூரில் பழைமை வாய்ந்த நல்லமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    கோவிலின் ஆண்டு திருவிழா கடந்த 12ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் இரவு நடைபெற்றது.

    30 அடி உயரமுள்ள செடில் மரத்தில், வேண்டுதல் நிறைவேற நூற்றுக்கணக்கான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை செடிலில் வைத்து, தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.

    அதனை தொடர்ந்து மாவிளக்கு, அர்ச்சனை செய்தும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.

    • தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • தமிழ் அமைப்பின் விருதுபெற்ற தலைமையாசிரியர் பாஸ்கரன் கலை இலக்கிய பெருமன்றத்தால் பாராட்டப்பட்டார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றக் கிளையின் சார்பில் "வாங்க பேசலாம்" கலை, இலக்கிய அமர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் வட்டாரக் கிளைத் தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார்.

    அமைப்பின் மாவட்டத் தலைவர் புயல் குமார், மாவட்டச் செயலாளர் அம்பிகாபதி,மாவட்டப் பொருளாளர்கைலாசம் ஆகியோர் முன்னிலை வகி த்தனர் நாட்டுப்புறப் பாடகர்கள் கோவிரா சேந்தின், சேதுமாதவன், அகிலா, சுகன்யா, கார்த்திக் உள்ளிட்டோர் தங்களின் படைப்புகளை பதிவி ட்டனர்.

    தமிழ் அமைப்பின் விருதுபெற்ற தலைமையாரியர் பாஸ்க ரன் கலைஇலக்கிய பெருமன்றத்தால் பாராட்டப்பட்டார்.

    நிகழ்ச்சியில், அமைப்பின் நிர்வாகிகள் பார்த்தசாரதி, நல்லாசிரியர் வைரக்கண்ணு, சத்தியசிவம், செந்தில்நாதன், ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.

    கூட்டத்தில் பெரும ன்றத்தின் முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் கவிஞர் வாய்மைநாதன் எழுதிய வெண்மணிக் காப்பியம் நூல் அறிமுக விழா மற்றும் நூலாசிரியருக்கு பாராட்டு விழாவை ஆக.27ம் தேதி, பஞ்சநதிக்குளம் மேற்கில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மேலும்இ ளம் தலைமுறையினரிடையே நேரிடும் குற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு,பள்ளி, கல்லூரிகளில் நன்நெறி ஒழுக்கம் சார்ந்த பாடத்திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    • 12 முனைவர் பட்டங்கள் உள்ளிட்ட 339 மாணவ- மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் பட்டங்களை வழங்கினார்.
    • உட்கட்டமைப்பு உள்ளிட்ட–வைகளில் தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூரில் உள்ள தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வளபல்கலை க்கழகத்தி ன் 7வது பட்டம ளிப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.

    215 இளங்கலை மீன்வள அறிவியல் மாணவர்கள், 55 இளநிலை தொழில்நுட்ப கல்வி மாணவர்கள், 25 முதுகலை மீன்வள அறிவியல் மாணவர்கள், 12 முனைவர் பட்டங்கள் உள்ளிட்ட 339 மாணவ- மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் பட்டங்களை வழங்கினார்.

    பின்னர் ஆளுநர் வாசிக்க பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொ ண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகையில்;

    உலக பொருளாதாரம் வேகமாக முன்னேறி கொண்டு இருக்கும் சூழலில், அதே வேகத்தில் நாமும் முன்னேற வேண்டும். சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளோம்.

    அடுத்த வர 25 ஆண்டுகளில் இதைவிட வேகமாக உழைக்கவேண்டும்.

    நாட்டின் முன்னேற்றத்திற்கு இளை–ஞர்கள் பொறுப்பேற்க வேண்டும். மாறுபட்ட புதிய சிந்தனைகளை உருவாக்கி நாட்டை முன்னேற்ற இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

    மகளிர் மேம்பாடு, தொழிற்துறை, உட்கட்டமைப்பு உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார்.

    விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், பல்கலைகழக துணை வேந்தர்கள், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் நாகை மாலி, நிவேதாமுருகன், மீன்வளத்துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    பட்டமளிப்பு விழாவிற்கு கவர்னர் வருகை தந்ததை அடுத்து நாகை மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • ரூ.80 லட்சம் மதிப்பீட்டில், தங்கும் வசதியற்றவர்கள் தங்குவதற்கான கட்டிட பணிகள் நடைபெறுகிறது.
    • ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் நகர் நல மையம் கட்டும் பணியினை ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி நாகூர் நகரில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ், ரூ.80 லட்சம் மதிப்பீட்டில், தங்கும் வசதியற்றவர்கள் தங்குவதற்கான கட்டிடப் பணி நடைபெறுகிறது.

    அதனை ஷாநவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், நாகூர் பீரோடும் தெருவில் 15-வது நிதிக்குழு மான்ய நிதியின் கீழ், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் மற்றும் தார்ச்சாலை அமைக்கும் பணி, நாகூர் வள்ளியம்மை நகரில் நிறைவடைந்துள்ள சிமெண்ட் சாலை பணி, சாமந்தான்பேட்டை பகுதியில் 15-வது நிதிக்குழு மான்ய நிதியின் கீழ், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் நகர் நல மையம் கட்டும் பணியினையும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி மற்றும் செயற் பொறியாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×