search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழைநீர் வடிகால் அமைக்கும் பணி- எம்.எல்.ஏ ஆய்வு
    X

    மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை ஷா நவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

    மழைநீர் வடிகால் அமைக்கும் பணி- எம்.எல்.ஏ ஆய்வு

    • ரூ.80 லட்சம் மதிப்பீட்டில், தங்கும் வசதியற்றவர்கள் தங்குவதற்கான கட்டிட பணிகள் நடைபெறுகிறது.
    • ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் நகர் நல மையம் கட்டும் பணியினை ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி நாகூர் நகரில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ், ரூ.80 லட்சம் மதிப்பீட்டில், தங்கும் வசதியற்றவர்கள் தங்குவதற்கான கட்டிடப் பணி நடைபெறுகிறது.

    அதனை ஷாநவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், நாகூர் பீரோடும் தெருவில் 15-வது நிதிக்குழு மான்ய நிதியின் கீழ், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் மற்றும் தார்ச்சாலை அமைக்கும் பணி, நாகூர் வள்ளியம்மை நகரில் நிறைவடைந்துள்ள சிமெண்ட் சாலை பணி, சாமந்தான்பேட்டை பகுதியில் 15-வது நிதிக்குழு மான்ய நிதியின் கீழ், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் நகர் நல மையம் கட்டும் பணியினையும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி மற்றும் செயற் பொறியாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×