என் மலர்
உள்ளூர் செய்திகள்

செடில் வழிபாடு நடந்தது.
நல்லமுத்து மாரியம்மன் கோவிலில் செடில் வழிபாடு
- கோவிலின் ஆண்டு திருவிழா கடந்த 12-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை செடிலில் வைத்து, தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.
நாகப்பட்டினம் :
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குப்பொய்கைநல்லூரில் பழைமை வாய்ந்த நல்லமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
கோவிலின் ஆண்டு திருவிழா கடந்த 12ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் இரவு நடைபெற்றது.
30 அடி உயரமுள்ள செடில் மரத்தில், வேண்டுதல் நிறைவேற நூற்றுக்கணக்கான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை செடிலில் வைத்து, தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.
அதனை தொடர்ந்து மாவிளக்கு, அர்ச்சனை செய்தும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.
Next Story






