என் மலர்
மயிலாடுதுறை
- 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
- பளுதூக்குதலில் பதக்கம் வென்ற சிவா பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சீர்காழி:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் இந்தியா மாவட்ட விளையாட்டு மையம் திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியை மயிலாடுதுறை வருவாய் மாவட்ட மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியரின் அழைப்பினை ஏற்று சீர்காழி நகரம் மற்றும் சீர்காழி சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்தும் ஆக்கூர் மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் போன்ற பகுதிகளில் இருந்தும் 400க்கு மேற்பட்ட 6 முதல் 11 வகுப்பு வரையுள்ள மாணவ மாணவிகள் பளுதூக்குதல் பயிற்சியில் பங்குப்பெற கலந்து கொண்டனர்.
அதிலிருந்து 50 மாணவர்கள், 50 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு தினசரி காலை 6 மணி முதல் 8மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 6.30 வரை பயிற்சியளிக்க தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சிக்காக அகில இந்திய பளுதூக்குதலில் பதக்கம் வென்ற சிவா பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் எஸ். அறிவுடைநம்பி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துலாஷா பங்கேற்று முகாம் விதிகளை பற்றியும் பயிற்சி முறைகளை பற்றியும் விளக்கினார்.
மேலும் ஆக்கூர் ஓரியண்டல் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஷாஜகான், வைத்தீஸ்வரன் கோயில் அரசு மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் ஷங்கர், மற்றும் ஆசிரியர் ராதாகிருஷ்ணன், எஸ். டி. ஏ. டி அலுவலகர் ஏ.பிருந்தா, எம். விக்னேஷ் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் தேர்வாளர்களாக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் டி. முரளி, பி. மார்கண்டன், எஸ். சக்தி வேல், ச.ஹரிஹரன், ரா. ராகேஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக, பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் எஸ். முரளிதரன் நன்றி கூறினார்.
- முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3-ம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.
- வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன்வந்துள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
"மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெ டுத்து செல்லும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் 2022-23-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவையில மஞ்சப்பை விருதுகளை அறிவித்தார்.
இது ஒருமுறைபயன்ப டுத்தும் பிளாஸ்டிக் கேரிபேக்குகள் மற்றும் இவற்றிற்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்கு விக்கவும், தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் களுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூ ழலுக்கு உகந்தமாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.
முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3-ம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.
இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டு ப்பாட்டு வாரியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியான திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன்வந்துள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளத்தில் (https://Tiruvarur.nic.in) கிடைக்கும். விண்ணப்பபடிவத்தில் தனிநபர், நிறுவன தலைவர் முறையாக கையொப்பமிடவேண்டும்.
கையொப்பமிட்ட பிரதிகள் 2 மற்றும் குறுவட்டு பிரதிகள் இரண்டை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 01.05.2023 ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- முடிவில் மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மண்டல அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாநில செயலாளர் சிவபழனி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், மாவட்டத் துணைத் தலைவர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.
- தேங்காய் குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
- சனிக்கிழமையில் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் சுகாதார பணிகள் நடைபெறும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் மெகா தூய்மை பணி தொடக்க விழா நடைபெற்றது.
நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, நகராட்சி ஆணையர் வாசுதேவன் ஆகியோர் தூய்மை பணியை தொடங்கி வைத்தனர்.
பேருந்து நிலையம் பகுதி மற்றும் உள், வெளி வளாகம் முழுவதும் தேங்காய் குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல் வரும் சனிக்கிழமையில் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளதாக நகராட்சி தலைவர் துர்கா பரமேஸ்வரி, ஆணையர் வாசுதேவன் தெரிவித்தனர்.
- மணலில் இந்த சாமி சிலைகள் எப்படி வந்தது.
- சிதிலம் அடையாமல் அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் கடந்த 8-ந்தேதி அதிகாலை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது கடற்கரை ஓரம் மணலில் மூன்று சிலைகள் இருப்பதை கண்டறிந்து தகவல் அளித்ததன் பேரில் புதுப்பட்டினம் போலீசார் மற்றும் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் நேரில் சென்று இரண்டு பெருமாள் சிலைகள் மற்றும் ஒரு அம்மன் சிலை ஆகியவைகளை கைப்பற்றி எடுத்து வந்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு சிலைகள் அதே கடற்கரையில் இருப்பதாக தகவல் அறிந்த வி.ஏ.ஓ. பவளச்சந்திரன் மற்றும் புதுப்பட்டிணம் போலீசார் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு இருந்த 3 அடி உயரத்தில் உள்ள ஒரு அம்மன் சிலை மற்றும் இரண்டடி உயரத்தில் உள்ள ஒரு அம்மன் சிலை ஆகிய இரண்டு சிலைகளையும் எடுத்து வந்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
ஏற்கனவே மீட்கப்பட்ட மூன்று சுவாமி சிலைகள் குறித்து நடைபெற்ற விசாரணையில் சிலைகள் சீனிவாச பெருமாள், துவாரபாலகர , சிம்மவாகனி என தெரியவந்தது
மேலும் கிடைக்கப்பெற்ற சிலைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ரவி மற்றும் போலீசார் கடற்கரை மணலில் இந்த சாமி சிலைகள் எப்படி வந்தது. யார் கொண்டு வந்து குறிப்பாக இங்கு போட்டார்கள். எதற்காக போட்டார்கள் என்றும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக சிதிலமடைந்த சிலைகளை மட்டுமே கோயில்களில் பயன்படுத்த மாட்டார்கள்.
ஆனால் இங்கு எடுக்கப்பட்ட அனைத்து சாமி சிலைகளும் சிதிலம் அடையாமல் அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது.
ஏன் நல்ல சாமி சிலைகளை இங்கு கொண்டு வந்து போட்டார்கள் என்ற கோணத்திலும் புதுப்பட்டினம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிலா, கோள்களையும் மிக அருகில் கண்டு வியப்புற்று மாணவர்களை பாராட்டினர்.
- தொலைநோக்கியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழி சுபம் வித்யா மந்திர் மாணவர்கள், இஸ்ரோ விஞ்ஞானிகளின் வழி நடத்தலில் ஒரு தொலைநோக்கியை உருவாக்கினார்கள்.
இதன் மூலம் வானில் 15 கோடி கி.மீ தொலைவில் உள்ள சூரியனையும், 3,82,500 கி.மீ. தொலைவில் உள்ள நிலாவின் மேடு பள்ளங்களையும், கோள்களையும், செயற்கை–கோள்களையும், விண்மீன் களையும் மிக அருகில் காணமுடியும்.
முற்றிலுமாக மாணவர்களால் உருவாக்கப் பட்ட இந்த தொலை நோக்கியை பொதுமக்கள் பயனடையும் வகையில் சீர்காழி சுபம் லிட்டில்ஸ் ஏஞ்சல் பள்ளியில் காட்சி படுத்தப்பட்டது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இரவில் தோன்றிய நிலாவி னையும், கோள்களையும், செயற்கைகோள்களையும் மிக அருகில் கண்டு வியப்புற்று, மாணவர்களை பாராட்டினர்.
மேலும், சீர்காழி சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வானி யியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திட, சுபம் வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் தொலைநோக்கியுடன் சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இதேபோல் கொள்ளி டத்தில் உள்ள ஜெயின் சங்க கட்டடத்திலும் தொலை நோக்கி வைத்து பொதுமக்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- தமிழகம் முழுவதும் 300 தடுப்பணைகள் அமைக்கப்படும்.
- போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பணமங்கலம் கிராமத்தில் உள்ள உப்பனாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டுமென ஆற்றின் இரு பக்கமும் உள்ள குமாரநத்தம், துறையூர், கோடங்குடி, வரவுகுடி, நிம்மேலி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைந்து நிரந்தர தடுப்பணை அமைக்க வலியுறுத்தி ஆற்றில் இறங்கும் போராட்டம் அறிவித்திருந்தனர்.
இதனை அடுத்து சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் விரைவில் தடுப்பணை அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.இதனை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறி அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பேசிய காவிரி படுகை பாது காப்பு சங்க தலைவர் இமயவரம்பன் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழகம் முழுவதும் 300 தடுப்பணைகள் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது அதில் ஒன்றாக பணமங்கலம் உப்பனாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் அதற்கான அரசாணையை வெளியிட வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
- ராகுல் காந்தி எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்.
- சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டம் நடந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பில், மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் பீட்டர் தலைமையில் சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராஜ்குமார் எம்.எல்.ஏ, மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன் கலந்து கொண்டு அஞ்சல் அட்டை போராட்டத்தை துவக்கி வைத்தனர்.
நிகழ்வில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார், மாவட்ட எஸ்சி.எஸ்டி பிரிவு தலைவர் கிள்ளிவளவன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முருகன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன், வட்டாரத் தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் சிவராமன், நகர நிர்வாகிகள் மொரார்ஜி, தேவநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 3 சிலைகளையும் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
- புதுப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் அமைந்துள்ளது. மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடி தொழிலுக்கு சென்று வரும் நிலையில் கடற்கரையோர பகுதியில் கற்சிலை ஒன்று தென்பட்டதை கண்டுள்ளனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் அடுத்தடுத்து மூன்று சிலைகள் இருப்பது தெரிய வந்தது.
இதனை எடுத்து மூன்று சிலைகளையும் மீட்ட மீனவர்கள் இதுகுறித்து புதுப்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறை யினர் விரைந்து சென்று சிலைகளை கைப்பற்றிய நிலையில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமாருக்கு தகவல் அளித்தனர்.
இதனை எடுத்து கடற்கரையோரம் மீட்கப்பட்ட இரண்டடி உயரம் உள்ள பெருமாள் கற்சிலை ஒரு அடி உயரமுள்ள பெருமாள் சிலை அதேபோல் ஒன்றரை அடி உயரமுள்ள அம்மன் சிலை ஆகிய மூன்று சிலைகளை கிராம பஞ்சாயத்தார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வட்டாட்சியரிடம் பாதுகா ப்பாக ஒப்படைத்தனர்.
தீவு கிராம கடற்கரையோர பகுதியில் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலைகள் எப்படி தீவு கிராம பகுதிக்கு வந்தது என்பது குறித்து புதுப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
- தினமும் அம்மன் வீதிஉலா நடைபெற்று வந்தது.
- மாவிளக்கு தீபம் ஏற்றி பழ வகைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் உள்ள அமர்ந்தாளம்மன், துர்கா பரமேஸ்வரி கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா கடந்த மாதம் 22-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து, தினமும் அம்மன் வீதிஉலா நடைபெற்று வந்தது.
விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி, அமர்ந்தாளம்மன் மற்றும் துர்கா பரமேஸ்வரி இருவரும் 2 தேர்களில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது.
ஒவ்வொரு வீட்டு வாசலிலும், மண்ணினால் மேடை அமைத்து அதில் மாவிளக்கு தீபம் ஏற்றி பழ வகைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
விழாவில் டாக்டர் குரு குடும்பத்தார்கள், முத்துகுமாரசாமி, ரமேஷ், விழா குழுவினர்கள், குலதெய்வ குடும்பத்தார்கள், தெருமக்கள், இளைஞர் மன்றத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
- ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் ராகுல் காந்தி எம்பி பதவி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜம்பு.கென்னடி தலைமை தாங்கினார்.
முன்னாள் வட்டாரத் தலைவர் மாதிரிமங்கலம் மணி, மாவட்ட பொதுச் செயலாளர் ரியாத் அகமது, நகரத் தலைவர் சூர்யா, பேரூராட்சி மன்ற உறுப்பினர் நிரஞ்சனி தேவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார தலைவர் பரதன் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மயிலாடுதுறை எம்எல்ஏவுமான எஸ்.ராஜகுமார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ராகுல் காந்தி எம்பி பதவி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாநில செயலாளர் கனிவண்ணன், மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் வடவீரபாண்டியன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார், மயிலாடுதுறை நகர தலைவர் ராமானுஜம், நகர பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் குத்தாலம் பேரூர் செயலாளர் பூர்விகா செந்தில் நன்றி கூறினார்.
- ரூ. 6.47 கோடி செலவில் 1,200 மீட்டர் தூரம் சாலை அகலப்படுத்தும் பணி.
- தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை காமராஜர் சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஒருங்கி ணைந்த சாலை உட்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 6.47 கோடி செலவில் 1,200 மீட்டர் தூரம் சாலை அகலப்படுத்தும் பணி மற்றும் தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து கலெக்டர் மகாபாரதி நிருபர்களிடம் கூறுகையில்:-
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 2 பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவற்றில், தரங்கம்பாடி மயிலாடுதுறை-காமராஜர் சாலையில் ரூ. 6 கோடி 47 லட்சம் செலவில் சாலையில் இருபுறமும் அகலப்படுத்தியும், தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், கல்லணை காவேரிப்பட்டினம் தென்னமரசி சாலை ரூ. 2 கோடியே 50 லட்சம் செலவில் சாலைகள் இருபுறமும் அகலப்படுத்தும் பணி, தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் இந்திரன் உடன் இருந்தார்.






