என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • 2 சிறிய தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு முக்கிய வீதிகளில் உலா வந்தனர்.
    • பக்தர்கள் தங்கள் வீட்டு வாசலில் குத்து விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லநாயகி அம்மன் பொறையான் திருக்கோயிலில் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் நடைபெறும் உற்சவ திருவிழா பத்து நாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது.

    அதில் நேற்று முன்தினம் மாலையில் இரண்டு சிறிய தேர்கள் பக்தர்கள் தோளில் சுமந்துக் கொண்டு மணக்குடி கிராமம் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தது.

    பக்தர்கள் வீடுகள் தோறும் வாசலில் குத்து விளக்குகள் ஏற்றி வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் தர்மபுரம் ஆதீனம் நிர்வாகிகள், மணக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, துணைத் தலைவர், வார்டு உறுப்பி னர்கள், வள்ளலார் கோயில் கண்காணிப்பாளர் அகோரம், மற்றும் வெங்கட்ராமன், குமார், ரவி, சீனிவாசன், மற்றும் குலதெய்வ குடும்பத்தார்கள், மனக்குடி கிராமவாசிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சீர்காழியை அடுத்த திட்டையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான காப்பகம் இயங்கி வருகிறது.
    • தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் மகாபாரதி புத்தாண்டை கொண்டாடினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திட்டையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான அன்பாலயம் காப்பகம் இயங்கி வருகிறது.

    இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் புத்தாடைகள் பழங்கள் உள்ளிட்டவர்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கி குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடினார்.

    மேலும் இந்த குழந்தைகள் உருவாக்கும் கைவினைப் பொருட்கள் கைத்தறி ஆடைகள் கண்டு பாராட்டு தெரிவித்தார்.

    மேலும் அன்பாலய குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரக்கோரி அன்பாலய நிர்வாகம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சீர்காழியில் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
    • அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அ.தி.மு.க. நகர செயலாளர் எல்.வி.ஆர் வினோத் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், ஆதமங்கலம் ரவிச்சந்திரன், கே.எம்.நற்குணன், சிவக்குமார், பேரூர் கழகச் செயலாளர் போகர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் திருமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜெ.பேரவை செயலாளர் ஏ.வி. மணி வரவேற்றார்.

    மயிலாடுதுறை மாவட்ட அவை தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி.பாரதி கலந்து கொண்டு அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் பக்கிரி சாமி, முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாடி செல்வ முத்துக்குமரன், நகர பொருளாளர் மதிவாணன், வார்டு செயலாளர் சுரேஷ் மற்றும் அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காலையில் குழந்தைகளுக்கு கொழுக்கட்டை வழங்கப்பட–வில்லை.
    • மதிய உணவிற்காக எந்த வித தயாரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப–தாவது:-

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் டி.

    மணல்மேடு அங்கன்வாடி மையத்தில் கடந்த 12-ந்தேதி மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டர்.

    ஆய்வின் போது டி. மணல்மேடு குழந்தைகள் மைய பணியாளர் ரமா மற்றும் உதவியாளர்லதா ஆகியோர் பணியில் மெத்த னமாக இருந்துள்ளனர்.

    உணவு பொருட்கள் பூச்சி மற்றும் வண்டுகள் இல்லாமல் பாதுகாக்கப்படவில்லை.

    பதிவேடுகள் பராமரிக்கப்ப டவில்லை. காலையில் கொழுக்க ட்டை வழங்கப்பட– வில்லை. மதிய உணவிற்காக எந்த வித தயாரிப்பு பணி களும் மேற்கொள்ளவில்லை என்று ஆய்வின் போது தெரியவந்துள்ளது.

    எனவே பணியில்குறைபாடுகள் காரணமாக டி. மணல்மேடு குழந்தைகள் மைய பணியாளர் ரமா மற்றும் குழந்தைகள் மைய உதவியாளர் லதா ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாலையின் குறுக்கே பாதியளவிற்கு மேல் சாலைகளை சுறுக்கி கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.
    • பகல் நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றன.

    சீர்காழி:

    விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்தப் பணிகள் வரும் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் ஒரு பகுதியாக சீர்காழி முதல் நாகப்பட்டினம் வரை சாலை விரிவாக்க பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நிலங்கள், குடியிருப்புகள் கட்டடங்கள் ஆகியவை கையகப்படுத்தப்பட்டு நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    சீர்காழி புறவழிச் சாலையில் எருக்கூர் ,கோயில் பத்து, செங்கமேடு, பனமங்கலம் ஆகிய பகுதிகளில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கப்பணியில் பாலங்கள் அமைக்கப்படுகிறது.

    இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சாலையின் குறுக்கே பாதியளவிற்கு மேல் சாலைகள் குறுக்கி கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது.

    ஆனால் கட்டுமான பணிகள் நடைபெறுவது குறித்து போதிய எச்சரிக்கை பலகை திசை மாறி செல்லும் அறிவிப்புபலகை, இரவில் ஒளிரும் எச்சரிக்கை பலகை ஆகியவை முறையாக அமைக்கப்படவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சட்டி வருகின்றனர்.

    இரவு மற்றும் பகல் நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன.

    தொடரும் விபத்துகளை தடுக்க சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்பு கட்டைகள், எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் எச்சரிக்கை பலகைகள் ஆகியவற்றை போதிய அளவு அமைத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்களிடம் இருந்து குறைகளை மனுக்களாக பெற்றனர்.
    • மீதமுள்ள மனுக்கள் உரிய நேரங்களில் விசாரணை செய்ய பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைகள் தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    தஞ்சை சரக காவல்துறை தலைவர் ஜெய்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு ஜவகர் வரவேற்றார்.

    முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளை மனுக்களாக பெற்றனர்.

    அந்த முகாமிலேயே மனுக்களுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

    புகார் மனு கொடுத்த வந்தவர்களிடம் குறைகளை நேரடியாக விசாரணை செய்து அந்த முகாமிலேயே தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் உரிய நேரங்களில் விசாரணை செய்ய பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட மக்கள் குறைகள் தீர்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் ராமு, தங்கவேல், டி.எஸ்.பி. சஞ்சீவ், இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நகராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.
    • கண் பார்வை குறைவு உள்ளிட்டவைகள் குறித்து சோதனை செய்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ரோட்டரி சங்கம் மற்றும் எல்.பி.எப். தொழிற்சங்கம் சார்பில் நகராட்சி துப்புரவு பணி, தூய்மை பணி ஊழியர்களுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார்.

    செயலாளர் நவநீதகண்ணன், பொருளாளர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எல்.பி. எப். தொழிற்சங்க நகராட்சி பிரிவு தலைவர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

    முகாமை நகர மன்ற தலைவர் செல்வராஜ் துவைக்கி வைத்தார்.

    முகாமில் புதிய நவீன கருவிகள் கொண்டு நகராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.

    இதில் புரை கண், கண் மறைவு, கண் பார்வை குறைவு உள்ளிட்டவைகள் சோதனை செய்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுகிறது. அந்த முகாமிலேயே மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.

    இதில் ஏரானவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    நிகழ்ச்சியில் உதவி ஆளுநர் தேர்வு முருகேசன் சாசன தலைவர் ராமன் மற்றும் ஆர்.கே.சேகர், தனபால், குஷிமாதவன், தங்கதுரை ராஜ், இளங்கோ, உள்ளிட்ட உறுப்பினர்கள், திமுக தொழிற்சங்க பிரதிநிதிகள் பொறுப்பாளர்கள் நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
    • நாளை (வியாழக்கிழமை) காலை 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வியாழக் கிழமைகள் தோறும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வருவாய் வட்டாட்சியர்கள், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இணை இயக்குநர் சுகாதார பணிகள் ஆகிய துறைகளை கொண்டு மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நாளை 13-ந்தேதி காலை 11.00 மணி அளவில் வளாகத்தில் வருவாய் மாற்றுத்திறனாளி களுக்கான மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் சிறப்பு குறை தீர்க்கும் அலுவலகத்தில் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

    இதில்மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறும், மேலும் இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தாங்கள் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் மருத்துவ சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் அளிவிலான தற்போதைய போட்டோ 1. கைப்பேசி எண். ஆகிய ஆவணங்களுடன் விண்ண ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மர்மநபர் ஒருவர் செல்போன், பர்ஸ் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளார்.
    • வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவிலில் தேவார பாடல் பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது.

    நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இங்கு செவ்வாய்க்கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சிறப்பு வழிபாடு செய்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களாக செவ்வாய்க்கிழமை அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மர்ம நபர் ஒருவர் செல்போன் பர்ஸ் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளார்.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

    நேற்று செவ்வாய்க்கிழமை ஆனதால் எப்படியும் அந்த மர்ம நபரை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கோவிலில் உள்ள சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்தார்.

    உடனே வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் திருச்சி உறையூரை சேர்ந்த ஆனந்தன் (வயது 35).

    என்பதும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    அதை அடுத்து போலீசார் ஆனந்தனை கோர்ட்டில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.

    • 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
    • பளுதூக்குதலில் பதக்கம் வென்ற சிவா பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சீர்காழி:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் இந்தியா மாவட்ட விளையாட்டு மையம் திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியை மயிலாடுதுறை வருவாய் மாவட்ட மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியரின் அழைப்பினை ஏற்று சீர்காழி நகரம் மற்றும் சீர்காழி சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்தும் ஆக்கூர் மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் போன்ற பகுதிகளில் இருந்தும் 400க்கு மேற்பட்ட 6 முதல் 11 வகுப்பு வரையுள்ள மாணவ மாணவிகள் பளுதூக்குதல் பயிற்சியில் பங்குப்பெற கலந்து கொண்டனர்.

    அதிலிருந்து 50 மாணவர்கள், 50 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இவர்களுக்கு தினசரி காலை 6 மணி முதல் 8மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 6.30 வரை பயிற்சியளிக்க தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.

    இப்பயிற்சிக்காக அகில இந்திய பளுதூக்குதலில் பதக்கம் வென்ற சிவா பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் எஸ். அறிவுடைநம்பி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துலாஷா பங்கேற்று முகாம் விதிகளை பற்றியும் பயிற்சி முறைகளை பற்றியும் விளக்கினார்.

    மேலும் ஆக்கூர் ஓரியண்டல் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஷாஜகான், வைத்தீஸ்வரன் கோயில் அரசு மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் ஷங்கர், மற்றும் ஆசிரியர் ராதாகிருஷ்ணன், எஸ். டி. ஏ. டி அலுவலகர் ஏ.பிருந்தா, எம். விக்னேஷ் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியின் தேர்வாளர்களாக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் டி. முரளி, பி. மார்கண்டன், எஸ். சக்தி வேல், ச.ஹரிஹரன், ரா. ராகேஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

    நிறைவாக, பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் எஸ். முரளிதரன் நன்றி கூறினார்.

    • முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3-ம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.
    • வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன்வந்துள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெ டுத்து செல்லும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் 2022-23-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவையில மஞ்சப்பை விருதுகளை அறிவித்தார்.

    இது ஒருமுறைபயன்ப டுத்தும் பிளாஸ்டிக் கேரிபேக்குகள் மற்றும் இவற்றிற்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்கு விக்கவும், தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் களுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூ ழலுக்கு உகந்தமாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.

    முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3-ம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.

    இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டு ப்பாட்டு வாரியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியான திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன்வந்துள்ளது.

    இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளத்தில் (https://Tiruvarur.nic.in) கிடைக்கும். விண்ணப்பபடிவத்தில் தனிநபர், நிறுவன தலைவர் முறையாக கையொப்பமிடவேண்டும்.

    கையொப்பமிட்ட பிரதிகள் 2 மற்றும் குறுவட்டு பிரதிகள் இரண்டை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 01.05.2023 ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • முடிவில் மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மண்டல அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

    அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

    செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மாநில செயலாளர் சிவபழனி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், மாவட்டத் துணைத் தலைவர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.

    ×