அ.தி.மு.க. சார்பில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா

சீர்காழியில் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அ.தி.மு.க. நகர செயலாளர் எல்.வி.ஆர் வினோத் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், ஆதமங்கலம் ரவிச்சந்திரன், கே.எம்.நற்குணன், சிவக்குமார், பேரூர் கழகச் செயலாளர் போகர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் திருமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜெ.பேரவை செயலாளர் ஏ.வி. மணி வரவேற்றார்.

மயிலாடுதுறை மாவட்ட அவை தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி.பாரதி கலந்து கொண்டு அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் பக்கிரி சாமி, முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாடி செல்வ முத்துக்குமரன், நகர பொருளாளர் மதிவாணன், வார்டு செயலாளர் சுரேஷ் மற்றும் அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com