என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • 4 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளது.
    • மீட்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சோதியக்குடி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் கைலாசநாதர் சுவாமி கோயில் உள்ளது.

    இந்த கோயிலுக்கு சோதியக்குடி மற்றும் கோபாலசமுத்திரம் ஆகிய கிராமங்களில் 4 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளது.

    கோயிலுக்கு எந்த வருவாயும் இன்றி ஆக்கிர மிப்பு செய்யப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் கோயில் நில ஆவணங்கள் மற்றும் வருவாய் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது.

    தொடர்ச்சியாக இந்த நிலங்களை மீட்பதற்கு மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன் ஆகியோரால் அறிவுறுத்தப்பட்டு வந்தது.

    அதன்படி மயிலாடுதுறை தனி வட்டாட்சியர் விஜயராகவன் தலைமையில் வி.ஏ.ஓ சங்கீதா முன்னிலையில் கோயில் செயலாளர் அன்பரசன், ஆய்வாளர் பிரனேஷ், கனக்கர் ராஜி ஆகியோரால் சொத்துக்கள் மீட்கப்பட்டு கோயில் வசம் எடுக்கப்பட்டது.

    மீட்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும். மீட்கப்பட்ட இந்த நிலங்கள் இணை ஆணையரின் அனுமதி பெற்று கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் முதல் முறையாக ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீட்கப்பட்ட இந்த நிலங்களில் எவரும் அத்து மீறி பிரவேசிக்கக் கூடாது எனவும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட இடத்தில் இது குறித்த தகவல் பலகையும் வைக்கப்பட்டது.

    • வேளாண் அதிகாரிகள் புறக்கணிப்பது குறித்து கலெக்டரிடம் புகார் அளிக்கப்படும்
    • பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராபியா நர்கீஸ்பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

    மோகன்தாஸ்:-

    கிடாரங்கொண்டான்- தலையுடையவர் கோயில்பத்து, பொன்செய்-முடிகண்டநல்லூர் ஆகிய பகுதியில் இணைப்பு பாலம் வேண்டும்.

    நாச்சிகட்டளை -தலைச்சங்காடு செல்லும் சாலையில் விவசாயிகள், பொதுமக்களுக்கு இடையூறாக பாதிப்புகளை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.

    ராஜ்கண்ணன்:-

    ஆக்கூரில் பிடாரி குளத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.

    புங்கையன் தோப்பு பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும்.

    சுப்பிரமணியன்:-

    கஞ்சாநகரம் அருகே மங்கனூர் கிராமத்தில் உள்ள பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும்.

    சக்கரபாணி:-

    கருவாழக்கரை மாரியம்மன் கோயில் பகுதியில் வடிகால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    மருதூர் அரசு பள்ளி நடுநிலைப் பள்ளி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.

    ரஜினி:-

    1-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட குளங்களை தூர்வார வேண்டும். சேமங்கலம், கொண்டத்தூர், பாகசாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.

    தேவிகா:-

    இலுப்பூர் ஊராட்சி எரவாஞ்சேரி- மாரியம்மன் கோயில் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    லெனின் தாஸ்:-

    காழியப்பநல்லூர் ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு ஆகியவற்றை தனிநபர் ஆக்கிரமித்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    டி.மணல்மேடு ஊராட்சியில் காடுவெட்டி, நடுவலூர், நட்சத்திரமாலை ஆகிய கிராமங்களுக்கு சுடுகாடு சாலை அமைத்து தரவேண்டும்.

    ஜெயந்தி:-

    தில்லையாடி-திருவிடைக்கழி இடையே பூச்சாத்தனூர் பகுதியில் உள்ள சேதமடைந்த பாலத்தை புதிதாக கட்டித் தர வேண்டும்.

    ஊராட்சியில் 100 நாள் பணியில் ஈடுபடும் மக்களுக்கு விடுபடாமல் சம்பளம் வழங்க வேண்டும்.

    இதுதொடர்பாக ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு ஒவ்வொரு கூட்டத்துக்கும் முன்கூட்டியே அழைப்புகள் விடுக்கப்படுகிறது.

    அவர்கள் இதுவரை எதிலும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருவதை கண்டித்து மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் அனுப்பப்படும்.

    உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஒன்றிய உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார், உள்ளிட்ட யூனியன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மங்கள வாத்தியங்கள் முழங்க எழுந்தருள செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • 3 முறை குளத்தை சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை திருஇந்த ளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் 5-வது தலமாகும்.

    இக்கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதன் சிகர விழாவான தெப்போற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பரிமள ரெங்கநாதர் பெருமாள், கோயில் திருக்குளத்தில் மின் விளக்குளால் அலங்கரிக்க ப்பட்ட தெப்பத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க எழுந்தருள செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்ப ட்டது.

    தொடர்ந்து, மூன்று முறை குளத்தைச் சுற்றி வந்து மீண்டும் நிலையை அடை ந்தது. இதில், கோயில் செயல் அலுவலர் ரம்யா, உதவி அலுவலர் விக்னேஸ்வரன், நகர மன்ற துணை தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    • மின்கம்பியையும், கம்பத்தையும் மாற்றி அமைத்துதர பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • திருப்பணி வேலைகள் முடிந்து கோவில் கும்பாபிஷேகம் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா

    பெரம்பூர் ஊராட்சி காளியம்மன்கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ் தலைமையில் பொதுமக்கள், கலெக்டர் மகாபாரதியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    எங்கள் ஊரில் உள்ள காளியம்மன்கோயில் மேலே மிகவும் ஆபத்தான நிலையில் மின்கம்பி தாழ்ந்து செல்வதால் கடந்த ஐந்து வருடங்களாக திருப்பணி வேலைகள் முடிந்து கோயில் கும்பாபிஷேகம் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம்.

    தற்பொழுது கோயில் கும்பாபிஷேகம் செய்ய முயற்சி செய்து வருவதால் மின்சாரம் ஓடிக்கொண்டி ருக்கும் மின் கம்பியால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    கோயிலுக்கு மேலே தாழ்ந்து செல்லும் மின்கம்பி யையும், கம்பத்தையும் மாற்றி அமைத்துதர மின்சார துறையில் பல முறை புகார் கொடுத்தும் எந்த வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே தாழ்ந்து செல்லும் மின் கம்பிகளையும், மின்கம்பத்தையும் மாற்றி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தரங்கம்பாடி கடற்கரையில் ஏப்ரல்,மே, ஜூன்,ஜூலை ஆகிய மாதங்களில் ஓசோன் காற்று அதிகமாக வீசுகிறது.
    • ஓசோன் காற்றின் மகத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி கூறினார்.

    மயிலாடுதுறை: 

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் ஏப்ரல்,மே, ஜூன்,ஜூலை ஆகிய மாதங்களில் ஓசோன் காற்று அதிகமாக வீசுகிறது. உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடிய இந்த ஓசோன் காற்றை சுவாசிக்க இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், டென்மார்க், ஜெர்மனி,சிங்கப்பூர், அமெரிக்கா,ஆஸ்திரிலியா,பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்

    இந்த நிலையில் ஓசோன் காற்றின் நன்மைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை கடற்கரையில் நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தஞ்சாவூர் மண்டலம், மயிலாடுறை மாவட்டம் மற்றும் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு விழா நடந்தது.

    விழாவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மாதவன் ஆகியோர் ஓசோன் காற்றின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கியாஸ் பலூனை ஆகாயத்தில் பறக்கவிட்டனர். தொடர்ந்து ஓசோன் காற்றின் மகத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பேசினார்.

    இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரிசங்கர், ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல், மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், பேரூராட்சி துணை தலைவர் பொன்.ராஜேந்திரன், செயல் அலுவலர் பூபதி கமலக்கண்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், சுற்றுலா அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சுபா கொற்கை கிராமத்தில் உள்ள தனது அம்மாவீட்டிற்கு சென்றிருந்தார்
    • வீட்டில் இருந்த பொருட்கள் பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.18 ஆயிரம் என அனைத்தும எரிந்து நாசமாகியுள்ளது.

    மயிலாடுதுறை: 

    மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள மன்னிப்பள்ளம் தெற்குத் தெருவில் வசித்து வருபவர் பாஸ்கர்.

    இவருடைய மனைவி சுபா (வயது 34).

    பாஸ்கர் கேரளாவில் வேலை பார்த்துவருகிறார். சம்பவத்தன்று சுபா கொற்கை கிராமத்தில் உள்ள தனது அம்மாவீட்டிற்கு சென்றிருந்தார்.

    அன்று இரவு பக்கத்துவீட்டை சேர்ந்தவர்கள் சுபாவின் வீடு எரிந்துகொண்டு இருப்பதாக செல்போன் மூலம் அவருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக சுபா தனது சகோதரருடன் மன்னிப்பள்ளம் சென்று பார்த்தபோது தனது வீடு முற்றிலும் எரிந்தது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.18 ஆயிரம் என அனைத்தும எரிந்து நாசமாகியுள்ளது.

    இது குறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ எவ்வாறு பிடித்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுமார் 800 ஆண்டுகள் முற்பட்டவை என தொல்லியத்துறை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
    • மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகள் குறித்து கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (மே) 24-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்துக்கான யாக குண்டம் அமைப்பதற்காக நேற்று மதியம் மேற்கு கோபுரம் வாசல் அருகே உள்ள நந்தவனத்தில் யாகசாலை கட்டுமானத்திற்கு களிமண் எடுத்து பணிகள் மேற்கொள்ள பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, சுமார் 2 அடி ஆழம் பள்ளம் வெட்டியபோது சுவாமி சிலைகள் தென்பட்டது.

    தொடர்ந்து தோண்ட, தோண்ட அடுத்தடுத்து ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள், தங்கமுலாம் பூசிய கலசங்கள் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் முழுமையாக அவை வெளியில் எடுத்தபோது, ஐம்பொன் சிலைகளான விநாயகர், வள்ளிதேவசேனா சுப்ரமணியர், அதிகாரநந்தி, சுவாமி- அம்பாள், பூர்ண புஸ்கலா அய்யனார், திருஞானசம்பந்தர், சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட (அரை அடி முதல் சுமார் 2 அடி வரையிலான) 22 சுவாமி சிலைகள், தேவார பதிகம் பதியப்பட்ட 462 செப்பேடுகள், 15 சுவாமி பீடங்கள், தங்கமுலாம் பூசிய கலசங்கள், திருவாச்சிகள், பூஜைபொருட்கள், உலுக்கை உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்பட்டது.

    கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சுவாமி சிலைகள் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்காலத்து சிலைகள், செப்பேடுகள் எனவும், இவை சுமார் 800 ஆண்டுகள் முற்பட்டவை என தொல்லியத்துறை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் வந்து பார்வையிட்டார். தொடர்ந்து, தகவலறிந்த மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், தொல்லியல் துறை மண்டல ஆலோசகர் மதிவாணன், சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும், மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகள் குறித்து கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார். மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் கோவிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திலேயே வைக்கப்பட்டது. தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் உரியவர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு நூலாக்க திட்ட குழுவை சேர்ந்த தாமரை பாண்டியன் அறிவுறுத்தலின் படி ஆய்வாளர்கள் சண்முகம், சந்தியா, சுவடி திரட்டுனர் விஸ்வநாதன், சுவடி பராமரிப்பாளர் பிரகாஷ் குமார் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் கோவிலுக்கு வருகைபுரிந்து கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை மட்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது சீர்காழி சட்டநாதர் கோவில்.
    • இங்கு தோண்ட தோண்ட பல ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

    இந்நிலையில், மேற்கு வாசல் கோபுரம் அருகே யாக சாலைக்காக மண் எடுக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கே 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம்,100-க்கும் மேற்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிலைகளின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படும் நிலையில், சம்பவ இடத்திற்கு தொல்லியல் துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

    கோவிலில் பல சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதனை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

    • பயன்பாடின்றி வீணாக எரிந்து கொண்டிருக்கக்கூடிய இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவது.
    • எரிவாயு பைப்லைன் ப்ராஜெக்ட் தொடர்பாக ஆய்வுகள் நடத்தபட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் பழைய கிராமத்தை இயங்கிவரும் ஓ.என்.ஜி.சி மற்றும் கெயில் நிறுவனத்தில் பிளான்ட் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    தொழில்துறை செயலாளர் அறிவுறுத்தலின் பேரில் சீர்காழி வட்டம் பழையபா ளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் செயல்பாடு களையும், தடையின்மை சான்று பெறப்படாமல் இயக்கத்திலி ருக்கும் துறப்பணக்கிண றுளின் நிலைப்பாடு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் இருந்து பயன்பாடின்றி வீணாக எரிந்து கொண்டிருக்கக்கூடிய இயற்கை

    எரிவாயுவை கெயில் நிறுவனத்தினர்

    பயன்படுத்து வது தொடர்பான சாத்திய கூறுகள் மற்றும் கடலோர பாதுகாப்பு மண்டலத்தில் அமையப்பெற்றுள்ள எரிவாயு பைப்லைன் ப்ராஜெக்ட் தொடர்பான தடையின்மைக்கான சாத்திய கூறுகள் தொடர்பாக ஆய்வுகள் நடத்தபட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்வாய்வின் போது மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர்,

    சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் ஓ.என்.ஜி.சி, கெயில், நிறுவனங்க ளின் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • 32 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மே மாதம் 24-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • ரூ.12 கோடியில் திருப்பணிகள் முழுமையாக நடைபெற்று நிறைவடையும் நிலையில் உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

    இங்கு லிங்கம் , மூர்த்தம் சங்கமம், ஆகிய மூன்று வடிவங்களில் சிவபெருமான் அருள் புரிந்து வருகிறார்.

    கோயிலில் மலை மீது உமா மகேஸ்வரர், சட்டைநாதர் சுவாமிகள் அருள் பாலிக்கின்றனர்.

    திருஞானசம்பந்தர் அவதார ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது.

    இக்கோயில் பிரம்ம தீர்த்த குளத்தில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் திருமுலைப்பால் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த 1991 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

    இதற்கான ரூ.12கோடியில் திருப்பணிகள் முழுமையாக நடைபெற்று நிறைவுபெறும் தருவாயில் உள்ளது.

    இதனிடையே கோயில் கும்ப்பாபிஷேக பத்திரிக்கை அச்சிட்டு அதனை பிரம்மபுரீஸ்வரர்சுவாமி, திருநிலைநாயகிஅம்மன், சட்டநாதர் சுவாமி உள்ளிட்ட சுவாமி சன்னதிகளில் வைத்து வழிபாடு செய்து படைக்கப்பட்டது.

    அதன்பின்னர் கும்பாபிஷேக முதல் பத்திரிக்கையை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கிட அதனை திருப்பணி உபயதாரரும், சீர்காழி தமிழ்சங்க தலைவருமான இ.மார்கோனி பெற்றுக்கொ ண்டார்.

    அருகில் கோவில் கண்காணிப்பாளர் செந்தில் ஆசிரியர் கோவி.நடராஜன் உள்ளனர்.

    • நாட்டில் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
    • கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு-2023 தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் , துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் , சட்டப்பூர்வ அமைப்புகள் தீர்ப்பாயங்கள் போன்ற வற்றில் உள்ள குரூப் பி மற்றும் குரூப் சி நிலையில், 7,500-ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது.

    இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதா ரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

    பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவே ண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்ப ட்டுள்ளது.

    இப்பணி காலியிடங்களு க்கு www.ssc.nic.in என்ற பணியா ளர் தேர்வாணை யத்தின் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

    கணினி அடிப்படையி லான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ண ப்பிக்க கடைசி நாள் 3.05.2023.

    மேலும் ஆன்லைனில் கட்டணம் செலுத்து வதற்கான கடைசி நாள் 04.05.2023 ஆகும்.

    எனவே இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில், மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடைபெற்றது.
    • ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மாணவனை பாராட்டி வாழ்த்தினர்.

    சீர்காழி:

    சென்னையில் மாநில அளவிலான மெய்யறிவு கொண்டாட்டம் - 2022-23 (வினாடி வினா) நிகழ்ச்சி நடை பெற்றது.

    இதில் திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிவைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவன் அஷ்ரப் அலி பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

    இவர் மெய்யறிவு - வினாடி வினா நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பாக வெளிநாட்டு கல்விச் சுற்றுலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    அஷ்ரப் அலியை பள்ளி தலைமையாசிரியை பா.தமிழரசி, பட்டதாரி ஆசிரியர் கோவி.நடராஜன், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பனியாளர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    ×