என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • சீர்காழி வட்டாரத்துக்கு உட்பட்ட 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • குறிப்பாக பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் குறைவாகவே தேவைப்படுகிறது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு, பூம்புகார், வைத்தீஸ்வரன் கோவில், கொண்டல், மங்கைமடம், பெருந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது பருத்தியில் களை வெட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    சீர்காழி வட்டாரத்துக்கு உட்பட்ட 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக நெல், உளுந்து, கடலை சாகுபடியில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்த நிலையில், விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடி ஓரளவிற்கு லாபத்தை ஈட்டி தந்தது.

    இதனால் கோடையில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

    இதனிடையே கடந்த ஆண்டு பருத்தி விலை கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டதால் அதிக லாபம் கிடைத்தது. குறிப்பாக பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் குறைவாகவே தேவைப்படுகிறது.

    மேலும் கடற்கரையை ஒட்டி உள்ள நிலங்களில் பருத்தி நன்றாக விளையக்கூடியது.

    அதன் காரணமாகவே விவசாயிகள் பருத்தி சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

    இதுவரை பூச்சி தாக்குதல் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.

    கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் விலை கிடைக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது.

    ஏனென்றால் உலக அளவில் இந்தியாவில் விளையக்கூடிய பருத்திக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    பருத்தி சாகுபடி செய்யும்போது திடீரென கனமழை பெய்தால் பருத்தி காய்கள் கொட்டிவிடும்.

    பருத்தி சாகுபடியிலும் சில இடர்பாடுகள் இருப்பதால் பருத்தி சாகுபடிக்கு காப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 32 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (மே) 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • கும்பாபிஷேகத்தன்று மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவிலில், 32 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (மே) 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

    இந்நிலையில், கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் அச்சிடப்பட்டு அதனை பிரம்மபுரீஸ்வரர், திருநிலைநாயகி அம்மன், சட்டைநாதர் உள்ளிட்ட சுவாமி சன்னதிகளில் வைத்து வழிபாடு செய்யப்ப ட்டது.

    அதன்பின்னர், அழைப்பிதழை விழாக்குழு வினர் பெற்றுக்கொண்டனர்.

    இதனை அடுத்து, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமையிலான விழாக்குழு வினர் கும்பாபிஷேக அழை ப்பிதழை கொடுத்தனர்.

    மேலும், கும்பாபி ஷேகத்தன்று மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • குரு பகவானுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • பரிகார ராசிக்காரர்கள் யாகத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    குரு பெயர்ச்சி விழா ஏப்ரல் 22 ம்தேதி சனிக்கிழமையில் இரவு 11. 24 மணிக்கு குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகினார்.

    இதனை முன்னிட்டு நேற்று மயிலாடுதுறை சேந்தங்கு டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வதான்யேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் ( வள்ளலார் கோயிலில்) ரிஷப வாகனத்தில் அமர்ந்து ஸ்ரீமே தா தக்ஷிணாமூர்த்தியான குரு பகவானுக்கு மூலிகை, பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தானம், பலவகை பழங்கல் மற்றும் வாசனை பொருட்கள் கொண்டு கோயில் அர்ச்சகர் பாலச்சந்தர் சிவாச்சாரியார் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

    பின்னர் தங்கம் அங்கி செலுத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஐந்து முகம் கொன்ட பத்து பூஜை தீபங்கள் காட்டப்பட்டது.

    இதில் பரிகார ராசிகள், பயன்பெறும் ராசிகள், பரிகாரத்தில் மற்றும் யாகத்திலும் பங்கு பெற்று பயனடைந்தனர்.

    தருமபுரம் ஆதீன தம்பிரான் சுவாமிகள் கலந்துக்கொன்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோயில் கண்காணிப்பாளர் அகோரம், முக்கிய பொருப்பாளர்கள் பக்தர்கள் திரளாக கலந்துக்கொன்டு வழிப்பட்டனர்.

    • 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மழை காலங்களில் நீரில் மூழ்கி விளைச்சல் பாதிக்கப்படும்.
    • சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை முதல் திருவாரூர் வரை சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் தற்போது மேற்கொள்ளப்ப ட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் முதல் கழனிவாசல் இடையே புறவழிச் சாலை அமைக்கப்ப டுகிறது.

    இதற்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலங்கள் கையகப் படுத்தப்படுகின்றன.

    வடக்கு தெற்க்காக அமையும் இந்த புறவழிச்சாலை காரணமாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மழைக் காலங்களில் தண்ணீர் வடிவதற்கு சிரமம் ஏற்படும் என்றும் இதன் காரணமாக மேலமங்க நல்லூர் கழனிவாசல் வேலங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 2000 ஏக்கர் விளை நிலங்கள் பருவமழை காலங்களில் நீரில் மூழ்கி விளைச்சல் பாதிக்கப்படும் என்றும் பல கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் அப்புறப்படுத்தக்கூடிய நிலைமை உருவாகி உள்ளதாகவும் இதனை தவிர்க்க இப்பகுதியில் புறவழிச் சாலையை முழுவதுமாக பாலமாக கட்டி தர வேண்டும் என்றும், சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என கோரியும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதற்காக நூற்றுக்கு மேற்பட்ட மனுக்களின் நகல்களை தோரணமாக கட்டி கையில் கருப்புக்கொ டியுடன் கழனிவாசல் வயல்வெளியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    தங்களது கோரிக்கை நிறைவேற்ற படாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் விவசாயி சம்பந்தம் கூறுகையில் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் பயிர்கள் அதிகப்படியாக விவசாயம் செய்து வருகிறார்கள்.

    இதனை அழித்து சாலை அமைப்பதால் பெரும் வரலாற்று பிழை ஏற்படும்.

    இங்கே உள்ள தத்தங்குடி கிராமத்தில் தான் நெல் ஆராய்ச்சி நிலையம் வைக்க முற்பட்டது விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் ஆடுதுறையில் மாற்றியமைக்கப்பட்டனர்.

    எனவே மத்திய மாநில மாவட்ட அரசுகள் இப்பகுதியில் மாற்று அமைப்பை ஏற்படுத்தி தர வேண்டும் விவசாயம் அழிவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டாம் என அப்பகுதி விவசாயிகளின் சார்பில் கேட்டுக்கொண்டனர்.

    • விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தினர்.
    • அவரை வெண்டை, கத்திரிக்காய் போன்ற காய்கறி தோட்டத்தை வேளாண் புல மாணவிகள் அமைத்து கொடுத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருதே உள்ள செம்மங்குடி கிராமத்தில் தங்கி பயிற்சி வரும் வேளாண் புல இறுதியாண்டு மாணவிகள் (குழு எண் -14) அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு "இயற்கை விவசாயம்" குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் , வேளாண் புல மாணவிகள் மகாலட்சுமி, , சுஷ்மிதா, சுருதி, சுகிர்தா, சுமித்ரா, ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    வேளாண் புல மாணவிகள் செம்மங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தினர்.

    இப்போது வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இதேபோல் செம்மங்குடியில் உள்ள முதியோர் இல்லத்தில் அவரை வெண்டை, கத்திரிக்காய் போன்ற காய்கறி தோட்டம் வேளாண் புல மாணவிகள் அமைத்துக் கொடுத்தனர்.

    • பேரணியை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.
    • தீயணைப்பு நிலைய வளாகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சார்பில் தீ தொண்டு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமை தாங்கினார்.

    மாவட்ட அலுவலர் சரவணபாபு முன்னிலை வகித்தனர். தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் மணிமாறன் வரவேற்றார். வருவாய் கோட்டாட்சியர் யுரேகா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மரகதவல்லி செந்தில், மணிமேகலை, சுமதி கண்ணன், குத்தாலம் சிறப்பு நிலை நிலைய அலுவலர் சீனிவாசன், கவிஞர் ராதாகிருஷ்ணன், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர், சமுதாயக் கல்லூரி மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தீயணைப்பு வளாகத்தில் புறப்பட்ட மிதிவண்டி உட்பட்ட பேரணி நகர முக்கிய வழியாக கச்சேரி சாலை, காந்திஜி சாலை, பட்டமங்கல தெரு, பெரிய கடை தெரு, மகாதான தெரு, கண்ணார தெரு வழியாக பேரணியாக சென்று தீயணைப்பு நிலையம் வந்தனர்.

    இதில் ஏராளமான சமூக ஆர்வ லர்கள் கலந்துக்கொன்டனர்.

    • முதியவர் உடல் நலக்குறைவால் அவதி பட்டு வந்தார்.
    • விஷம் குடித்த ஜெயராஜை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி தென்பாதி தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது70).

    இவர் கடந்த 3 மாதமாக சிறுநீரக பிரச்சினை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்தார்.

    இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஜெயராஜ் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துமயங்கி விழுந்தார்.

    இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் ஜெயராஜை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் இறந்தார்.

    இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அகர திருக்கோவிலக்கா பகுதியில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • பணிகளை விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டு அகர திருக்கோவிலக்கா பகுதியில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த தூய்மை பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீரென ஆய்வு செய்தார்.

    மேலும், பணிகளை விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, நகராட்சி ஆணையர் வாசுதேவன், தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 0.50 ஹெக்டர் தர்பூசணி சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட்டது.
    • மணல் திடல்களில் தர்பூசணி அதிகளவில் பயிரிடுவது குறித்து ஆய்வு செய்தனர்.

    தரங்கம்பாடி:

    உலக வங்கி நிதியின் கீழ் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம், மயிலா டுதுறை மாவ ட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் தர்பூசணி சாகுபடியை மேம்படுத்தும் வகையில் தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றிய பகுதிகளில் திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கனோடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கு 0.50 ஹெக்டர் தர்பூசணி சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த பகுதியில் மணல் திடல்களில் தர்பூசணி அதிகளவில் பயிரிடுவது குறித்து ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்ட வயலை உலக வங்கியின் சார்பாக தோட்டக்கலை நிபுணர் (உணவு மற்றும் விவசாய அமைப்பு) சாஜன் கொரியன், தோட்டக்கலை நிபுணர் டாக்டர் வித்யா சாகர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து பார்வை யிட்டனர்.

    ஆய்வின்போது தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) ரமேஷ், தோட்டக்கலை அலுவலர் கவிராகவி, சீர்காழி தோட்டக்கலை அலுவலர் பார்கவி, உதவி தோட்டக்கலை அலுவ லர்கள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • விக்னேஷ் மதுவுடன் பூச்சி மருந்தை (விஷம்) கலந்து குடித்து மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம்மணல்மேடு அருகே உள்ள உச்சிதமங்கலத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது40). இவருடைய உறவினர் சீர்காழி தென்னலகுடியைச் சேர்ந்த வீரமணி மகன் விக்னேஷ் (25) என்பவர் கார்த்திக் வீட்டிற்கு வந்துள்ளார்.

    இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று காலை அருகில் உள்ள கிழாய் ஓடக்கரை பகுதியில் மதுவுடன் பூச்சி மருந்தை (விஷம்) கலந்து குடித்து மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • யாகசாலை அமைப்பதற்காக மேற்கு கோபுர வாசல் நந்தவனப் பகுதியில் பள்ளம் தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.
    • இந்து சமய அறநிலையத்துறை 6 பேர் கொண்ட குழுவினர் சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு வருகை புரிந்து கண்டெடுக்கப்பட்ட ஆய்வு மேற்கொண்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

    இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் திருப்பணிகள் நிறைவு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் 16 ம் தேதி யாகசாலை அமைப்பதற்காக மேற்கு கோபுர வாசல் நந்தவனப் பகுதியில் பள்ளம் தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள் ,55 பீடம் மற்றும் 462 செப்பேடுகள், மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

    இதனை அடுத்து ஐம்பொன் சிலைகளும் மற்றும் செப்பேடுகள் கோயிலின் பாதுகாப்பு அறையில் வட்டாட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாத்து வருகின்றனர்.

    17ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு நூலாக்க திட்ட குழுவை 6 பேர் கொண்ட குழுவினர் சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு வருகை புரிந்து கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது இதுவரை தமிழ்நாட்டில் ஓலை சுவடியில் எழுதிய பதிகங்கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் முதன்முறையாக அதிக அளவு பதிகங்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டு தற்போது இங்கு சீர்காழி தான் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஐம்பொன் சிலைகள் கோயி லில் வைக்கப்பட்டுள்ளதால் அங்கு துப்பாக்கி ஏந்திய 2 அடுக்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு கருதி கூடுதலாக இரும்பு கிரில் கேட் பொருத்தப்பட்டுள்ளதை மயிலாடுதுறை மாவட்ட (பொறுப்பு) காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கண்டார்.

    அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக், இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், புயல்.பாலசந்திரன், தனிப்பிரிவு ஆய்வாளர் சதீஸ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • சட்டை நாதர் சுவாமி கோயிலில் விலை மதிக்க முடியாத ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகளை கிடைத்துள்ளன.
    • கோயிலில் வைத்து பாதுகாத்து அருங் காட்சியகம் அமைக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற உறுப்பினர்களான முழுமதி இமயவரம்பன், ஜெயந்தி பாபு, நித்யாபால முருகன்,கலைச்செல்வி மதியழகன், ரம்யா தன்ராஜ்,வள்ளிமுத்து, ரேணுகாதேவி, சூரியபிரபா ,ரமாமணி, ராஜேஷ், பாலமுருகன், ராஜசேகர் ஆகிய 12 பேர் தருமபுர ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மச்சாரியா சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனர்.

    பின்பு நகர்மன்ற உறுப்பினர் ராஜசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டை நாதர் சுவாமி கோயிலில் விலை மதிக்க முடியாத ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகளை கிடைத்துள்ளன.

    இதனை கோயிலில் வைத்து பாதுகாத்து அருங் காட்சியகம் அமைக்க வேண்டும்.

    பக்தர்கள் வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வருகிற மே 24ஆம் தேதி நடைபெற இருப்பதால் கோயில் பகுதியில் குப்பைகள்அ திகளவு குவிந்து கிடக்கிறது.

    இதனை நகராட்சி நிர்வாகம் தூய்மைபடுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் துப்புரவு பணிகளை 12 நகர்மன்ற உறுப்பினர்கள் சேர்ந்து தங்களது சொந்த செலவில் மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

    ×