என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறையில், தீத்தொண்டு வார விழிப்புணர்வு பேரணி
- பேரணியை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.
- தீயணைப்பு நிலைய வளாகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சார்பில் தீ தொண்டு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட அலுவலர் சரவணபாபு முன்னிலை வகித்தனர். தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் மணிமாறன் வரவேற்றார். வருவாய் கோட்டாட்சியர் யுரேகா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மரகதவல்லி செந்தில், மணிமேகலை, சுமதி கண்ணன், குத்தாலம் சிறப்பு நிலை நிலைய அலுவலர் சீனிவாசன், கவிஞர் ராதாகிருஷ்ணன், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர், சமுதாயக் கல்லூரி மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீயணைப்பு வளாகத்தில் புறப்பட்ட மிதிவண்டி உட்பட்ட பேரணி நகர முக்கிய வழியாக கச்சேரி சாலை, காந்திஜி சாலை, பட்டமங்கல தெரு, பெரிய கடை தெரு, மகாதான தெரு, கண்ணார தெரு வழியாக பேரணியாக சென்று தீயணைப்பு நிலையம் வந்தனர்.
இதில் ஏராளமான சமூக ஆர்வ லர்கள் கலந்துக்கொன்டனர்.