என் மலர்
மயிலாடுதுறை
- சீர்காழி சட்டநாதர் சுவாமி கோவிலில் ரவீந்திரநாத்குமார் எம்.பி. சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.
- அதிமுகவில் என்ன மாற்றங்கள் வேண்டு மானாலும் நிகழலாம்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் சுவாமி கோவிலில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். கோயிலில் அனைத்து சன்னதிகளிலும் அர்ச்சனை செய்து வழிப்பட்ட ரவீந்திர நாத்குமார், தொடர்ந்து தருமபுர ஆதனத்திடம் ஆசி பெற்றார்.
பின்னர் செய்தியா ளர்களிடம் அவர் கூறுகையில், திருச்சி மாநாடு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஒன்றரை கோடி தொண்டர்கள் என்ன நினைத்தார்களோ அது நடந்துள்ளது.
அ.தி.மு.க பொதுச்செ யலாளர் பிரச்சனை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதே பொதுக்குழு தான் ஒருங்கிணைப்பாளரையும் தேர்ந்தெடுத்தது.
அதிமுகவிலிருந்து யார், யாரெல்லாம் வெளியே சென்றார்களோ அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும்.
இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான். எனது காரில் அதிமுக கொடியை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்றால் ஒன்றை கோடி தொண்டர்களும் பயன்ப டுத்தக் கூடாது என்று தான் அர்த்தம். அதிமுக உட்க்கட்சி விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட வில்லை.
சீர்காழி சட்டநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் அனைத்தும் தருமையா தினத்தின் பாதுகாப்பில் இருக்க அரசு நடவடிக்கை வேண்டும்பாராளுமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ். , இ.பி.எஸ் இணைந்து நிற்பதற்கான சாத்தியம் உண்டா என்ற கேள்விக்கு, பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடங்கள் உள்ளன அதற்குள் அதிமுகவில் என்ன மாற்றங்கள் வேண்டு மானாலும் நிகழலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை தக்க வைத்தல்.
- திரவ கழிவு மேலாண்மை நடடிக்கைகள் குறித்து விவாதித்தல்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ெவளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் கூறியிப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.5.23 தொழிலாளர் தினத்தன்று கிராமசபை கூட்டம் 241 கிராம் ஊராட்சிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது.
இக்கிராமசபா கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், 2022-23, 2023-24 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் விவரம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விதியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-2022 மற்றும் 2022-23-ஆம் ஆண்டு திட்டம் ii -ன் கீழ் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்ற விவரம் குறித்து விவாதித்தல்,2023-24 ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்- ii கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் விவரம் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட புதுப்பிக்கப்பட்ட நூலகங்களில் "வாசகர்கள் குழு" உருவாக்குவது குறித்தும் அதன் பயன்களையும் தெரிவித்தல், மகாத்மா காத்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2022-23ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற நிலை மற்றும் தேர்வு செய்யப்பட்ட பணிகள் மற்றும் வேலை வழங்குவதற்கான தொழிலாளர் மதிப்பீடு இறுதி செய்யப்பட்டதற்கான பணிகள் குறித்து விதித்தல், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம்.
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம். கழிப்பறை கட்டி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பாராட்டு தெரிவித்தல், திறந்த வெளியில் மலம் கழித்தவற்ற நிலையை தக்க வைத்தல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், நெகிழிக்கு மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், நெகிழிக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திரவக் கழிவு மேலாண்மை நடடிக்கைகள் குறித்து விவாதித்தல் ஜல் ஜீனை இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பண்ணை மற்றும் பண்ணை சாரா தொழில்கள் குறித்து விவாதித்தல், வறுமை குறைப்பு திட்டம் ஆகியனை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
எனவே, இக்கிரா மசபை கூட்டத்தில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடர்பான விபரங்களை கிராமசபை கூட்டத்தில் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
- அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட, ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மே மாதம் விடுமுறை வழங்கும் கோரி காத்திருப்புப் போராட்டத்தை துவங்கி நடத்தி வருகின்றனர்.
மாவட்டத் தலைவர் பேபி தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும், கேஸ் சிலிண்டர் பில்லுக்கான முழு தொகையை வழங்கிட வேண்டும், 10 வருடம் பணிபுரிந்த பணியாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் இரவு என்று பாராமல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் செம்பனார்கோயில் ஒன்றிய பொருளாளர் பானு, குத்தாலம் லதா உள்ளிட்ட பொருப்பாளர்கள் ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.
- எமனை வதம் செய்து மீண்டும் எமனை உயிர்ப்பித்த தலம்.
- கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ரிஷப கொடியேற்றப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலகப் புகழ்வாய்ந்த ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு மார்க்கண்டேயர் உயிரைக் காப்பாற்று வதற்காக இறைவன் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்து மீண்டும் எமனை உயிர்ப்பித்த தலம்.
மார்க்கண்டேயர் என்றும் 16 (சிரஞ்சீவி) என்ற வரத்தை இவ்வாலயத்தில் பெற்றதால் இக்கோயிலில் ஆயுள் விருத்தி வேண்டி வயதான தம்பதிகள் ஆயுள்சிய ஹோமம் செய்து திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.
பல்வேறு சிறப்புகள் உடைய தலங்களில் ஒன்றான இவ்வாலயத்தில் இறைவன் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்யும் ஐதீக நிகழ்வு நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
சென்னையை சேர்ந்த இராஜேந்திரன், வாசுகி, ராஜராஜன் ஆகியோர் கொடியேற்று விழாவி ற்க்கான உபயதாரர்கள் ஆவார்கள். விநாயகர், முருகன், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர்.
புனித நீர் அடங்கிய கடங்கள் பூஜிக்கப்பட்டது.
கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் பல்வேறு அபிஷே கங்கள் செய்யப்பட்டு ரிஷபக் கொடியேற்றப்பட்டது.
இவ்விழாவில் ஸ்ரீமத் சுப்ரமணிய கட்டளை தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாகத்தினர், கோயில் குருக்கள்கள், ஒன்றிய குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு அவதார வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சியும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 27-ம் தேதி அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் சாமி திருக்கல்யாணம், 30-ஆம் தேதி
(ஞாயிற்றுக் கிழமை) இரவு காலசம்ஹாரமூர்த்தி
எமனை வதம் செய்யும் ஐதீக திருவிழாவும்,மே 2-ஆம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- 11 தாம்பூலத்தில் பழங்கள், மங்கள பொருட்களுடன் சீர்வரிசை எடுத்து வந்து அம்மனை வழிப்பட்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் பழமைவாய்ந்த சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 17 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் இரட்டை குளகரையிலிருந்து பால் காவடி, அலகு காவடி, பறவைக் காவடிகள் உடன் கரகம் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க கடைவீதி வழியாக கோயிலை வந்தடைந்தது. கோயில் முன்பு அமைக்கபட்டியிருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
அப்போது பட்டாமணியார் குடும்ப வம்சத்தினர் 11 தாம்பால தட்டுகளில் பல்வேறு வகையான பழங்களுடன் மங்கள பொருட்களுடன் சீர்வரிசை எடுத்து வந்து அம்மனை சிறப்பித்து வழிப்பட்டனர். பின்னர் காத்த வீரன் முன் செல்ல சீத்தாளதேவி மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், இந்து அறநிலைத் துறை செயல் அலுவலர், விழா குழுவினர் மற்றும் கிராமத்தினர் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி வேல்முருகன், ராஜ் கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதா கணபதி, கட்சி பிரமுகர்கள் பக்தர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
- ரூ.42 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் கட்டிட திட்டமிடப்பட்டது.
- கட்டிட பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.
குத்தாலம்:
கோமல் ஊராட்சியில் ரூ.42.63 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் கட்டும் பணியை மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் ஊராட்சியில் ரூ.42 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் மற்றும் 15-வது நிதிக்குழு நிதியிலிருந்து ஊராட்சி செயலகம் கட்டிட திட்டமிடப்பட்டு, அதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.
ஊராட்சிமன்ற தலைவர் எழிலரசி பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு ஊராட்சி செயலக கட்டிட பூமி பூஜையை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் கட்டிட பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தி.மு.க ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் திவ்யா சரண்ராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 3 வகுப்புகளாக பிரிக்கப்பட்டு பயிற்சி நடைபெற்றது.
- மாணவர்கள் அந்தந்த வகுப்புக்கு ஏற்றவாறு தங்கள் கற்றல் திறனை பெறுவர்.
சீர்காழி:
சீர்காழி அருகே கொள்ளி டத்தில் ஆசிரியர்களுக்கு நடந்த எண்ணும், எழுத்தும் பயிற்சின்போது மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில் நடனவழி கல்வி பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டது.
சீர்காழி வட்டம் கொள்ளிடம் அருகே துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், வட்டார அளவிலான தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மூன்று வகுப்புகளாக பிரிக்கப்பட்டு பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்ச்சியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டங்கள், நடனவழி கல்வி மற்றும் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடத் திட்டங்களை எவ்வாறு கற்றுத் தருவது என்பன உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இதில் குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் காமராஜ், வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, தலைமை ஆசிரியர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினர்.
தொடர்ந்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி பேசுகையில், தமிழ்நாடு அரசால் கரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்ய 2022-23ல் அறிமுகப் படுத்தப்பட்ட எண்ணும், எழுத்தும் திட்டத்தில் மாணவர்களின் அடிப்படைத் திறன்கள் வலுவூட்டப்பட்டன. 2023-24 ஆம் ஆண்டில் மாணவர்கள் வகுப்பு நிலைக்கேற்றவாறு கற்றல் திறனை அதிகரிக்க மேம்படு த்தப்பட்ட நிலைவாரியான கற்பித்தல் அனுகு முறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் அந்தந்த வகுப்புக்கு ஏற்றவாறு தங்கள் கற்றல் திறனை பெறுவர். இப்பயிற்சியை ஆசிரியர்கள் முழுமையாக பெற்று மாணவர்களின் கற்றலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார். பயிற்சியில் கொள்ளிடம் வட்டாரத்தைச் சேர்ந்த அனைத்து துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் வந்து கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் ஐசக்ஞானராஜ் நன்றி கூறினார்.
+2
- சீர்வரிசை பொருட்களுடன் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்தனர்.
- சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று தையல்நாயகி அம்மனை தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் தேவார பாடல் பெற்ற தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இத்தலத்தில் செல்வமுத்துக்குமர சுவாமியும், நவகிரகங்களில் செவ்வாய் பகவானும் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 2-வது செவ்வாய்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக, காரைக்குடி, கந்தர்வகோட்டை, சிவகங்கை, பரமக்குடி, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வருவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டும் திரளான மக்கள் வழிபாடு செய்ய வந்துள்ளனர். இதற்காக நகரத்தார் மக்கள் சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை விரதம் இருந்து புறப்பட்டு இரண்டாவது செவ்வாய் கிழமையான இன்று காலை இங்கு வந்து சேர்ந்தனர்.
குலதெய்வ வழிபாடாகவும் அதே சமயம் தையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசையை பொருட்களை 51 கூண்டு வண்டிகளில் ஏற்றி பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த ஆண்டு பாதயாத்திரையாக சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று தையல்நாயகி அம்மனை தரிசனம் செய்தனர்.
தாங்கள் வேண்டுதலுக்காகவும் வழிநடைக்கு துணையாகவும் கொண்டு வந்த மஞ்சள் தடவிய கம்புகளை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோவில் கொடிமரத்தில் செலுத்தினர். மீண்டும் மறு வேண்டுதல் நிறைவேற அங்கிருந்து ஒரு குச்சியை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.
திருவிழாவை முன்னிட்டு 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் வசதிக்காக சீர்காழி,மயிலாடுதுறை, தஞ்சை,திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டு வருகிறது.
- வள்ளுவக்குடியில் ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்துள்ளது.
- ரூ.42 லட்சத்தில் புதிய ஊராட்சி அலுவலக கட்டிடம்.
சீர்காழி:
சீர்காழி அருகே வள்ளுவக்குடி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் உள்ளிட்டவைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
வள்ளுவக்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் சேதம் ஏற்பட்டிருந்தது.
இதனை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் படி சீர்காழி ஊராட்சி ஒன்றியம் சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.42லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமிபூஜை ஒன்றிய ஆணையர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய பொறியாளர் கலையரசன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட அமைப்பாளர் முருகன், ஊரட்சி மன்ற தலைவர் பத்மா முன்னிலை வகித்தனர்.
சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
- சீர்காழி வட்டாரத்துக்கு உட்பட்ட 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- குறிப்பாக பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் குறைவாகவே தேவைப்படுகிறது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு, பூம்புகார், வைத்தீஸ்வரன் கோவில், கொண்டல், மங்கைமடம், பெருந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது பருத்தியில் களை வெட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சீர்காழி வட்டாரத்துக்கு உட்பட்ட 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக நெல், உளுந்து, கடலை சாகுபடியில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்த நிலையில், விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடி ஓரளவிற்கு லாபத்தை ஈட்டி தந்தது.
இதனால் கோடையில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
இதனிடையே கடந்த ஆண்டு பருத்தி விலை கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டதால் அதிக லாபம் கிடைத்தது. குறிப்பாக பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் குறைவாகவே தேவைப்படுகிறது.
மேலும் கடற்கரையை ஒட்டி உள்ள நிலங்களில் பருத்தி நன்றாக விளையக்கூடியது.
அதன் காரணமாகவே விவசாயிகள் பருத்தி சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
இதுவரை பூச்சி தாக்குதல் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் விலை கிடைக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது.
ஏனென்றால் உலக அளவில் இந்தியாவில் விளையக்கூடிய பருத்திக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பருத்தி சாகுபடி செய்யும்போது திடீரென கனமழை பெய்தால் பருத்தி காய்கள் கொட்டிவிடும்.
பருத்தி சாகுபடியிலும் சில இடர்பாடுகள் இருப்பதால் பருத்தி சாகுபடிக்கு காப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 32 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (மே) 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- கும்பாபிஷேகத்தன்று மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.
தரங்கம்பாடி:
சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலில், 32 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (மே) 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் அச்சிடப்பட்டு அதனை பிரம்மபுரீஸ்வரர், திருநிலைநாயகி அம்மன், சட்டைநாதர் உள்ளிட்ட சுவாமி சன்னதிகளில் வைத்து வழிபாடு செய்யப்ப ட்டது.
அதன்பின்னர், அழைப்பிதழை விழாக்குழு வினர் பெற்றுக்கொண்டனர்.
இதனை அடுத்து, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமையிலான விழாக்குழு வினர் கும்பாபிஷேக அழை ப்பிதழை கொடுத்தனர்.
மேலும், கும்பாபி ஷேகத்தன்று மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- குரு பகவானுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- பரிகார ராசிக்காரர்கள் யாகத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தரங்கம்பாடி:
குரு பெயர்ச்சி விழா ஏப்ரல் 22 ம்தேதி சனிக்கிழமையில் இரவு 11. 24 மணிக்கு குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகினார்.
இதனை முன்னிட்டு நேற்று மயிலாடுதுறை சேந்தங்கு டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வதான்யேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் ( வள்ளலார் கோயிலில்) ரிஷப வாகனத்தில் அமர்ந்து ஸ்ரீமே தா தக்ஷிணாமூர்த்தியான குரு பகவானுக்கு மூலிகை, பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தானம், பலவகை பழங்கல் மற்றும் வாசனை பொருட்கள் கொண்டு கோயில் அர்ச்சகர் பாலச்சந்தர் சிவாச்சாரியார் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
பின்னர் தங்கம் அங்கி செலுத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஐந்து முகம் கொன்ட பத்து பூஜை தீபங்கள் காட்டப்பட்டது.
இதில் பரிகார ராசிகள், பயன்பெறும் ராசிகள், பரிகாரத்தில் மற்றும் யாகத்திலும் பங்கு பெற்று பயனடைந்தனர்.
தருமபுரம் ஆதீன தம்பிரான் சுவாமிகள் கலந்துக்கொன்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோயில் கண்காணிப்பாளர் அகோரம், முக்கிய பொருப்பாளர்கள் பக்தர்கள் திரளாக கலந்துக்கொன்டு வழிப்பட்டனர்.






