என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
மயிலாடுதுறையில், கருப்பு கொடியுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மழை காலங்களில் நீரில் மூழ்கி விளைச்சல் பாதிக்கப்படும்.
- சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை முதல் திருவாரூர் வரை சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் தற்போது மேற்கொள்ளப்ப ட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் முதல் கழனிவாசல் இடையே புறவழிச் சாலை அமைக்கப்ப டுகிறது.
இதற்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலங்கள் கையகப் படுத்தப்படுகின்றன.
வடக்கு தெற்க்காக அமையும் இந்த புறவழிச்சாலை காரணமாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மழைக் காலங்களில் தண்ணீர் வடிவதற்கு சிரமம் ஏற்படும் என்றும் இதன் காரணமாக மேலமங்க நல்லூர் கழனிவாசல் வேலங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 2000 ஏக்கர் விளை நிலங்கள் பருவமழை காலங்களில் நீரில் மூழ்கி விளைச்சல் பாதிக்கப்படும் என்றும் பல கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் அப்புறப்படுத்தக்கூடிய நிலைமை உருவாகி உள்ளதாகவும் இதனை தவிர்க்க இப்பகுதியில் புறவழிச் சாலையை முழுவதுமாக பாலமாக கட்டி தர வேண்டும் என்றும், சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என கோரியும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதற்காக நூற்றுக்கு மேற்பட்ட மனுக்களின் நகல்களை தோரணமாக கட்டி கையில் கருப்புக்கொ டியுடன் கழனிவாசல் வயல்வெளியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தங்களது கோரிக்கை நிறைவேற்ற படாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் விவசாயி சம்பந்தம் கூறுகையில் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் பயிர்கள் அதிகப்படியாக விவசாயம் செய்து வருகிறார்கள்.
இதனை அழித்து சாலை அமைப்பதால் பெரும் வரலாற்று பிழை ஏற்படும்.
இங்கே உள்ள தத்தங்குடி கிராமத்தில் தான் நெல் ஆராய்ச்சி நிலையம் வைக்க முற்பட்டது விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் ஆடுதுறையில் மாற்றியமைக்கப்பட்டனர்.
எனவே மத்திய மாநில மாவட்ட அரசுகள் இப்பகுதியில் மாற்று அமைப்பை ஏற்படுத்தி தர வேண்டும் விவசாயம் அழிவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டாம் என அப்பகுதி விவசாயிகளின் சார்பில் கேட்டுக்கொண்டனர்.






