என் மலர்
உள்ளூர் செய்திகள்

கழுமலை ஆறுவாய்க்கால் பகுதியில் கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
சீர்காழியில், வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
- ரூ.2.40 லட்சம் செலவில் பயனாளி ஒருவருக்கு வீடு கட்டும் பணி ஆய்வு.
- ரூ.1.90 லட்சம் செலவில் நூலக கட்டிடம் பழுது பார்க்கும் பணி ஆய்வு.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகணி வாய்க்கால் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ. 5.25 லட்சம் செலவில் மிக விரைவில் தூர்வாரப்பட உள்ள பணியையும், தொடர்ந்து, வள்ளுவக்குடி ஊராட்சியில் பிரதம மந்திரி குடியி ருப்பு திட்டத்தின் கீழ் ரூ 2.40 லட்சம் செலவில் பயனாளி ஒருவர் வீடு கட்டும் பணியினையும், அதனைத் தொடர்ந்து, கொண்டல் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ 2.40 லட்சம் செலவில் பயனாளி ஒருவர் வீடு கட்டும் பணியினையும், கழுமலை ஆறுவாய்க்கால் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.14.5 இலட்சம் செலவில் மிக விரைவில் தூர்வாரப்பட உள்ள பணியையும், ஆதிதிராவிடர் கீழத்தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியினையும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அங்கு செயல்படும் ரேஷன் கடையில் பொது மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.90 லட்சம் செலவில் நூலக கட்டிடம் பழுது பார்க்கும் பணியி னையும், ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியின் போது பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை செயற்பொறி யாளர் சண்முகம், உதவி பொறியாளர்கள் கனக.சரவணன்,சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், இளங்கோவன், பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, உடன் இருந்தனர்






