பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

ராகுல் காந்தி எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்.சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டம் நடந்தது.
சீர்காழியில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடந்தது.
சீர்காழியில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடந்தது.
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பில், மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் பீட்டர் தலைமையில் சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராஜ்குமார் எம்.எல்.ஏ, மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன் கலந்து கொண்டு அஞ்சல் அட்டை போராட்டத்தை துவக்கி வைத்தனர்.

நிகழ்வில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார், மாவட்ட எஸ்சி.எஸ்டி பிரிவு தலைவர் கிள்ளிவளவன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முருகன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன், வட்டாரத் தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் சிவராமன், நகர நிர்வாகிகள் மொரார்ஜி, தேவநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com