என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • கொள்ளிடத்தில் 107 மி. மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.
    • பூம்புகார் பகுதி மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    சீர்காழி:

    வடகிழக்கு பருவமழை மூன்றாவது சுற்று தொடங்கியுள்ள நிலையில், கடலோர டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி மயிலாடு துறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், திருவெ ண்காடு, வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் லேசான வெயிலும் விட்டு,விட்டு சாரல் மழையும் பெய்து வந்த நிலையில், இரவு பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

    சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்ததால் சீர்காழி மற்றும் கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் இருந்ததால் மின்தடை ஏற்பட்டது. மழை விட்டு பின்னர் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பிகளை சீரமைத்து ஒவ்வொரு பகுதியாக மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது நள்ளிரவு வரை பரவலாக இடி மின்னலுடன் மழை தொடர்ந்து பெய்தது. இன்று காலை வரை சீர்காழியில் 67 மில்லி மீட்டரும், கொள்ளிடத்தில் 107 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தமாக 312 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது

    காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கனமழை காரணமாக நேற்று இரவு முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குனர். ராஜேஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இதனால் பழையாறு திருமுலைவாசல் பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    • விபத்தில் சிக்கியவர்களை தனது காரில் ஏற்றி தானும் பயணம் செய்து மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
    • ஒரு நபருக்கு நினைவு திரும்பாத காரணத்தால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ரெயிலடி மேம்பாலத்தில் இருந்து குத்தாலம் செல்லும் இறக்கத்தில் மூன்று இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் அப்பகுதியைச் சேர்ந்த எல்.ஐ.சி முகவர் வெங்கட்ரமணன், கூறைநாட்டைச் சேர்ந்த சுகுமார் உள்பட 3 பேர் காயம் அடைந்து கீழே விழுந்தனர்.

    அப்போது அந்த வழியாக குத்தாலம் நோக்கி சென்று கொண்டிருந்த மாவட்ட கலெக்டர் மகாபாரதி உடனே விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆம்புலன்ஸ் வருவதற்கு நேரமாகும் என்பதால் தன்னுடன் வந்த செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரியின் காரில் விபத்து ஏற்பட்டவர்களை ஏற்றி கொண்டு அதே காரில் தானும் பயணம் செய்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    மூன்று பேருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு நபருக்கு நினைவு திரும்பாத காரணத்தால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

    கலெக்டரின் இந்த செயலை பலரும் பாராட்டினர்.

    • குடோனில் பதுங்கி இருந்த 4 அடி நீள கண்ணாடி வீரியன் பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டது.
    • ஆள்நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.

    சீர்காழி:

    சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் தனியார் டூ வீலர் ஷோரூம் உள்ளது.

    இந்த ஷோரூமின் ஒரு பகுதியில் உள்ள குடோனில் பாம்பு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள்.

    இது குறித்து சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான பாண்டி யனுக்கு தகவல் அளித்தனர்.

    அதன்பேரில் அங்கு சென்ற பாண்டியன் குடோனில் பதுங்கி இருந்த நான்கடி நீளம் உள்ள கடுமையான விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்துடப்பாவில் அடைத்து ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.

    • தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற பழமைவாய்ந்த வைத்தீஸ்வரன் கோவில்.
    • கற்பக விநாயகர், தையல் நாயகி சன்னதிகளில் அர்ச்சனை செய்து சவுந்தர்யா வழிபட்டார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ளது தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில். தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற பழமைவாய்ந்த வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    நவ கிரகங்களில் செவ்வாய் பரிகார தலமான இக்கோவிலுக்கு நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா தனது கணவர் மற்றும் மகனுடன் தரிசனம் செய்தார். கற்பக விநாயகர், தையல் நாயகி சன்னதிகளில் அர்ச்சனை செய்து சவுந்தர்யா வழிபட்டார்.

    • விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.
    • விவசாயிகளின் பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் நிரந்தர தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும்.

    தரங்கம்பாடி:

    பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதியின் கணவர் சீனிவாசனுக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததை தொடர்ந்து தம்பதியினர் தரங்கம்பாடி அடுத்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு நேற்று குடும்பத்துடன் வந்தனர்.

    அங்கு இருவருக்கும் சஷ்டியப்த பூர்த்தி நடந்தது.

    தம்பதிகள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

    பின்னர் அனைவரும் கோவிலில் உள்ள பிற சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தனார்.

    பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதற்கு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    ஆனாலும், காவிரி நீர் கிடைக்காமலும், பருவமழை பொய்த்து போவதாலும் விவசாயிகள் கடும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும். நானும் டெல்டாகாரன் தான் என கூறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும்.

    பயிர் காப்பீடு திட்டத்தில் பிரதமர் முன்னுரிமை கொடுத்தாலும் மாநில அரசு பயிர் காப்பீட்டில் தன் பங்கை கொடுக்காததால் விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு கிடைக்கவில்லை என்றார்.

    அப்போது பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் அகோரம், மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சீர்காழி தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் 14-அம்ச கோரிக்கையை தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வட்டத்தலைவர் இளம்வழுதி தலைமையில் நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் கருணை அடிப்படையில் வேலை வழங்கி வந்ததை ரத்து செய்ய ப்பட்டுள்ளது, எரிபொருள் படி மாதம் ரூ.2500 வழங்கியது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சி.பி.எஸ் பிடித்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது ஆகியவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 14அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    • மழை நீர் மூழ்கி சம்பா நேரடி விதைப்பு நெற்பயிரை வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
    • இளம் நாற்றுகள் பாதிக்கப்பட்டிருக்கும் இடங்களில் அதே ரக நாற்றுகளைக் கொண்டு நடவு செய்ய வேண்டும்.

    சீர்காழி:

    கொள்ளிடம் அருகே அளக்குடி, ஆச்சாள்புரம்,மகாராஜபுரம்,நல்லூர், பச்சபெருமாள் நல்லூர், நல்ல நாயகபுரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் மூழ்கி பின்னர் வடிந்த நிலையில் உள்ள சம்பா நேரடி விதைப்பு நெற்பயிரை கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜாநேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நல்ல விநாயகபுரம் கிராமத்தில் தண்ணீரில் மூழ்கி பின்னர் வடிந்த நிலையில் நெற்பயிரை பார்வையிட்ட எழில்ராஜா எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து விவசாயிகளிடம் விளக்கம் அளித்து பேசுகையில் ,

    சமீபத்தில் பெய்த மழையால் சம்பா தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.வயல்களில் தேங்கியுள்ள அதிகப்படியான மழைநீரை முதலில் வெளியேற்ற வேண்டும்.

    இளம் நாற்றுகள் பாதிக்கப்பட்டிருக்கும் இடங்களில் அதே ரக நாற்றுகளைக் கொண்டு நடவு செய்ய வேண்டும். வடிகால் வசதியின்றி முழுமையாக பாதிக்கப்பட்ட வயல்களில் குறுகிய கால நெல் இரகங்களை சாகுபடி செய்யலாம்.

    தேங்கியுள்ள நீரை வடித்தவுடன் வரிசை நடவு மேற்கொண்ட வயல்களில் கோனோவீடர் அல்லது ரோட்டரிவீடர் கருவி மூலம் மண்ணில் காற்றோட்டத்தை ஏற்படுத்தி வேர்கள் மண்ணில் உள்ள சத்துக்களை எடுத்துக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

    நீர் வடிந்த பிறகு பயிரின் வளர்ச்சி சரியாக இல்லாத இடங்களில் வளர்ச்சியை மேம்படுத்த ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா. 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு நாள் இரவு வைத்திருந்து இத்துடன் 17 கிலோ மியூரியேட்ஆப்பொட்டாஷ் கலந்து வயலில் சீராக தூவ வேண்டும்.

    இந்த உரங்களை இடும்பொழுது வயலில் சீராக தண்ணீர் வைத்துக்கொள்வதுடன் நீர் வெளியேறாதவாறு பராமரிக்க வேண்டும்.

    பயிரின் வளர்ச்சி மிகவும் குன்றி, துத்தநாக சத்து குறைபாடு தென்பட்டால் உடனடியாக ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியா, 1 கிலோ ஜிங்க் சல்பேட் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.மழைக்காலங்களில் நீர்தேங்கி நின்ற வயல்களில் இலை வழி உரத்தெளிப்பு சிறந்த பலனை தரும். நானோ யூரியா ஏக்கருக்கு 250 மில்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

    இப்ப பருவமழை காலத்தில் போதிய சூரிய வெளிச்சம் இல்லாததாலும் குளிர்ச்சியான சீதோஷ்ன நிலையாலும் மண்ணின் வெப்பநிலை குறைவாக காணப்படுவதாலும் நெற்பயிரில் போதிய சத்துக்களை வேர் வழியாக எடுத்துக் கொள்ள முடியாது.

    இத்தருணத்தில் ஏக்கருக்கு 2 கிலோ யூரியா, 2 கிலோ டி.ஏ.பி மற்றும் 2 கிலோ மியூரி பேட் ஆப் பொட்டாஷ் 200 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும் என்றார்.

    • மீனவ கிராமத்தில் குடிநீர் தேக்கத்தொட்டி பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது.
    • குடிநீர் பிரச்சனையால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் 3இடங்களில் குடிநீர் தேக்கத்தொட்டி அமைத்து பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது.

    திருமுல்லைவாசல் ரோட்டரி சங்கம் சார்பில், ரோட்டரி ஆளுனர் வருகை விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ரோட்டரி துணை ஆளுனர் ஜி.வி.என்.கணேஷ் தலைமை வகித்தார்.

    தலைவர் பி.பிரபாகர், செயலாளர் வி.தேவேந்திரன், பொருளாளர் என்.பைசல்அலி முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் நல்ல குடிநீர் வழங்கும் விதமாக போர்வெல் அமைத்து குடிநீர் எடுத்து குழாய் மூலம் மூன்று இடங்களில் குடிநீர் தேக்கத்தொட்டி வாயிலாக குடிநீர் வழங்கிட பயன்பாட்டிற்கு மாவட்ட ஆளுனர் ஜி.செங்குட்டுவன் அளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுனர் ராமன் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார் பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • சுமார் 10 வீடுகளில் மின்சாதன பொருள்கள் சேதம் அடைந்துள்ளது தெரியவருகிறது
    • உடனடியாக மின் இணைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி மடவா மேடு கிராமத்தை சேர்ந்தவர் சுமதி ராஜ்குமார்.

    இன்று காலை சீர்காழி பகுதியில் மழை பெய்தது. அப்போது இவரது வீட்டை மின்னல் தாக்கியது.

    அதில் வீட்டில் உள்ள அனைத்து மின்சார பொருட்களும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.

    மேலும் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் இருந்து குழந்தைகளை மீட்டுக்கொண்டு அவர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினார்.

    இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

    இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன் தாசில்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அடிப்படையில் தாசில்தார் இளங்கோவன் நேரடியாக களத்தில் ஆய்வு செய்தார்.

    மேலும் மின்னல் தாக்கிய வீட்டிலிருந்து அருகாமையில் உள்ள சுமார் 10 வீடுகளில் மின்சாதன பொருள்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது .

    ஆய்வின் போது கொள்ளிடம் ஒன்றிய சேர்மன் ஜெயப்பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, மண்டல துணை வட்டாட்சியர் பாபு, தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் பாரிவள்ளல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதுகுறித்து தாசில்தார் தெரிவிக்கையில் சேத விவரங்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, இழப்பீடு பெற்று தர மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.

    மேலும் வட்டாட்சியர் இளங்கோவனால் தமிழ்நாடு மின்சார வாரிய உதவிப் பொறியாளரிடம் உடனடியாக மின் இணைப்பு வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டது.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் தரிசனம் செய்தனர்.
    • செவ்வாய் பகவான் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

    சீர்காழி:

    ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அலக்ஷி என்பவர் தலைமையில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்கிரைன் நாடுகளைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் தமிழக கலாச்சாரம், பண்பாடு, ஆன்மீகத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக தமிழகத்தில் உள்ள சிவாலயங்கள் மற்றும் நவகிரக ஆலயங்களில் தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த கோபிநாத் என்பவர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் தரிசனம் செய்தனர்.

    பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு வந்த வெளிநாட்டு பக்தர்கள் விநாயகர், செல்வமுத்துக்குமார சுவாமி, வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்பாள் மற்றும் செவ்வாய் பகவான் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

    அப்போது அவர்கள் காயத்ரி மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்களை சப்தமாக சொல்லி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு எழுந்தருளிய தருமபுரம் ஆதீனம் 27- வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் வெளிநாட்டு பக்தர்கள் அருளாசி பெற்றனர்.

    தொடர்ந்து அவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் விபூதி பிரசாதம் வழங்கியதுடன், தெய்வ வழிபாட்டு முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    அப்போது கொள்ளிடம் குழந்தைகள் நல மருத்துவர் முருகேசன், சீர்காழியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மார்கோனி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பள்ளி ஆண்டு தேர்வில் மாணவர்களுக்கு உடற்கல்விக்கு தனிதேர்வு வைக்க வேண்டும்.
    • புதிதாக பணி நியமனம் தமிழக அரசால் செய்யப்பட வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி பெஸ்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாநில பொதுசெயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி யினுடைய உடற்கல்வி இயக்குனர் எஸ்.முரளிதரன் வரவேற்றார்.

    உடற்கல்வி இயக்குனர்கள் சம்பந்தம் ,செல்வ கணேசன், எஸ்.ரவிச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியர் டி.ஆர்.செந்தில் குமார் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக பெஸ்ட் கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் சிறப்புரையாற்றினார்.

    நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆண்டு தோறும் நடைபெறக்கூடிய ஆண்டு தேர்வில் மாணவர்களுக்கு உடற்கல்விக்கு என தேர்வு தனியாக வைக்கப்பட வேண்டும்.

    தமிழகம் முழுவதும் உள்ள தொகுப்புகுதிய அடிப்படையில் பணியாற்றக்கூடிய உடற்கல்வி ஆசிரியர்கள் நிரந்தர பணி அளிக்க வேண்டும்.

    ஆண்டுதோறும் 200 உடற்கல்வி துறை ஆசிரியர்களை புதிதாக பணி நியமனம் தமிழக அரசால் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றி தமிழக அரசின் கவனத்திற்கு அனுப்பிவைத்திட முடிவு செய்யப்பட்டது.

    ஏற்பா டுகளை திருவெண்காடு சு.சு.தி ஆண்கள் பள்ளியினுடைய உடற்கல்வி ஆசிரியர் எஸ்.செல்லதுரை செய்திருந்தார்.

    முடிவில் உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

    • சிறையில் உள்ள விவசாயிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனு அளித்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மேல்மா சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போட ப்பட்ட குண்டர் சட்டத்தை கண்டித்தும், சிறையில் உள்ள விவசா யிகளை விடுதலை செய்ய கோரியும், விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 திரும்ப பெறக்கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் சீர்காழி நகர தலைவர் கோவி.நடராஜன் தலைமை வகித்தார்.

    தமிழக காவிரி விவசாயிகள் சங்கங்களின் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் கணேசன், இயற்கை விவசாயி நலம்.சுதாகர், அபாஸ்அலி,அரவிந்தன்,செந்தில்முருகன் முன்னிலை வகித்தனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாவட்டத்தலைவர் ஆ.ராமலிங்கம் ,ஜெக.சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    அதனை தொடர்ந்து சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விவசா யிகள் பேரணியாக சென்று உ.அர்ச்சனாவிடம் விவசாயிகளின் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனுவினை அளித்தனர்.

    தமிழக அரசு உரிய நடவடி க்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்தனர்.

    ×