என் மலர்tooltip icon

    மதுரை

    • நீ என்னப்பா பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதை போல் டிடிவி தினகரன் பேசி வருகிறார்.
    • டிடிவி தினகரனை நம்பி சென்றவர்கள் நிலை பற்றி அவர் யோசித்தது உண்டா?

    மதுரையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதற்கு உதயகுமார் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் மேலும் கூறியதாவது:-

    ஜெயலலிதா 10 ஆண்டுகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் டிடிவி தினகரனின் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது.

    நீ என்னப்பா பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதை போல் டிடிவி தினகரன் பேசி வருகிறார்.

    டிடிவி தினகரனை நம்பி சென்றவர்கள் நிலை பற்றி அவர் யோசித்தது உண்டா?

    டிடிவி தினகரனுடன் இருந்த தங்கத்தமிழ் செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் திமுக சென்றபோது ஏன் கவலைப்படவில்லை?

    பொதுவெளியில் டிடிவி தினகரன் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாமா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது.
    • பேச வேண்டியவர்கள் பேசினால்தான் அனைத்தும் நடக்கும்.

    மதுரையில் த.வெ.க. கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதில் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக பிரதான எதிர்க்கட்சி. சட்டப்பூர்வமான பிரதான எதிர்க்கட்சி.

    முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். 43 தொகுதிகளில் 1,92,000 வாக்குகள் தான் பின்னடைவு. இப்படி தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததே தவிர,

    ஐந்தரை கோடி வாக்காளர்களில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்காளர்கள் அதிமுக கூட்டணிக்கு கிடைத்திருந்தால், எந்த உள்குத்தும், வெளிகுத்தும், ஊமைகுத்தும் இல்லாமல் இருந்திருந்தால், நாங்கள் எல்லோரும் ஜெயிச்சிருப்போம்.

    உள்குத்து, ஊமைக்குத்து என்றால் என்ன என்று கேட்காதீர்கள். அது வாங்கியவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

    இது ஒரு பருவமழை காலம். மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது. பிப்ரவரி, மார்ச் மாதத்திற்கு பிறகு கூட்டம் குறித்து கேள்வி கேளுங்கள். அப்போது சொல்கிறோம்.

    நான் சொல்லியோ.. நீங்கள் சொல்லியோ ஒன்றும் நடக்காது. பேச வேண்டியவர்கள் பேசினால்தான் அனைத்தும் நடக்கும். நல்லதே நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருமணத்தின் புனிதம் என்பது அடக்குமுறை அல்லது துன்பத்தை அமைதியாக தாங்கிக்கொள்வதில் இல்லை.
    • துன்புறுத்தலின்போது அமைதியாக இருப்பது சகிப்புத்தன்மை அல்ல. அது அடக்குமுறையை நிலைநாட்டும் அடிமைத்தனம்.

    திருமண உறவின் உண்மையான சாராம்சம் பரஸ்பரம், மரியாதை, நட்பு மற்றும் கருணையில் உள்ளது- நீதிமன்றம்/ true essence of marital relationship lies in reciprocity, respect, friendship and kindness Court

    திருமண உறவின் உண்மையான சாராம்சம் பரஸ்பரம், மரியாதை, நட்பு மற்றும் கருணையில் உள்ளது- நீதிமன்றம்/ true essence of marital relationship lies in reciprocity, respect, friendship and kindness Court

    உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தன்னை தாக்கிய வழக்கில் கணவரை குற்றமற்றவர் எனக்கூறி விடுதலை செய்த உத்தரவை எதிர்த்து இந்திரா என்ற பெண் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றம் "இந்திராவின் கணவனர் தனசீலனுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 6 மாத சிறைத்தண்டனையைமாற்ற குறைக்க தேவையில்லை. குற்றவாளி முதியவர் என்பதற்காக மட்டும் தண்டனையில் சலுகை கோருவதை ஏற்க முடியாது" எனத் தெரிவித்தது.

    மேலும், "திருமண உறவின் உண்மையான சாராம்சம் பரஸ்பரம், மரியாதை, நட்பு மற்றும் கருணையில் உள்ளது. திருமணத்தின் புனிதம் என்பது அடக்குமுறை அல்லது துன்பத்தை அமைதியாக தாங்கிக்கொள்வதில் இல்லை.

    துன்புறுத்தலின்போது அமைதியாக இருப்பது சகிப்புத்தன்மை அல்ல. அது அடக்குமுறையை நிலைநாட்டும் அடிமைத்தனம். வீட்டிற்குள் நடக்கும் துன்புறுத்தல் பல நேரங்களில் நான்கு சுவருக்குள் மட்டுமே நிகழ்பவையாக இருக்கும். ஒவ்வொரு செயலுக்கும் நேரடி சாட்சி வேண்டும் எனக் கூறுவது அந்த சட்டப்பிரிவின் நோக்கத்தையே சிதைக்கும்" எனக் கருத்து தெரிவித்தது.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
    • நாயக்கன்பட்டி, அழகர் கோவில், கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி,

    மதுரை:

    மதுரை அழகர்கோவில் துைண மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை மறுநாள் (5-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    நாயக்கன்பட்டி, அழகர் கோவில், கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, தூயநெறி, மாத்தூர், வெள்ளியங்குன்றம்புதூர், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்தூர்பட்டி, தொப்பவாம்பட்டி, கொடிமங்கலம், கருவனூர், தேத்தாம்பட்டி, மந்திகுளம்.

    மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் பொற்செல்வன் தெரிவித்துள்ளார்.

    • 2022 ஆம் ஆண்டில் சென்னை பிச்சாவரம், பள்ளிக்கரணை ஆகிய காடுகள் ராம்சார் அங்கீகாரம் பெற்றன.
    • பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தலைநகரில் உள்ள ஒரே ஒரு ஈரப்பகுதியாகும்.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை பள்ளிக்கரணையில் தனியார் நிறுவனம் எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அங்கு ரூ.2000 கோடி அளவில் அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுமதி குறித்து மிகப்பெரிய சர்ச்சை எழுந்து வருகிறது.

    சுற்றுச்சூழல் முக்கியதுவம் வாய்ந்த சதுப்பு நிலத்தில் சட்ட விரோதமாக கட்டிடம் கட்ட சுற்றுச்சூழல், வனத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எப்படி அனுமதி வழங்கி உள்ளது என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எடப்பாடியார் கடுமையாக கேள்வி எழுப்பி வருகிறார்.

    இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுமதி பெற்ற பின்னர் ரூ.100 கோடியளவில் முறைகேடு, லஞ்சம் கரைபுரண்டு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. சர்வதேச அளவில் ஈரப்பகுதிகளை காக்கும் வண்ணம் 1922 ஆண்டு ஈரானில் ராம்சார் என்ற சர்வதேச உடன்படிக்கை ஏற்பட்டது. இதில் இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளை சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டனர்.

    2022 ஆம் ஆண்டில் சென்னை பிச்சாவரம், பள்ளிக்கரணை ஆகிய காடுகள் ராம்சார் அங்கீகாரம் பெற்றன. தற்பொழுது 1,247 ஹேக்டேர் பரப்பளவில் பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் பெற்ற நிலையில் ஈர பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் 4-வது பிரிவுபடி ராம்சார் அங்கீகாரம் பெற்ற நிலங்களில் எந்த கட்டுமான பணியும் மேற்கொள்ளக்கூடாது அனுமதி வழங்க முடியாது.

    இந்த சூழ்நிலையில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலப்பகுதிகளில் 1,250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.2000 கோடி ஆகும்.

    குடியிருப்பு கட்டுமான திட்டங்களுக்கு சட்ட விரோதமாக அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடி அளவில் லஞ்சம் கைமாறியதாக சொல்லப்படுகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தலைநகரில் உள்ள ஒரே ஒரு ஈரப்பகுதியாகும். வடகிழக்கு பருவமழையில் நீரை உள்வாங்கி நிலத்தின் நீர் தன்மையை உயர்த்தும்.

    தற்போது பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியில் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய முதல்வர் ஸ்டாலின் என்ன கூற போகிறார். அதிகார துஷ்பிரயோகம் மூலம் பலன் அடையப்போவது யார்? ஆகவே இன்றைக்கு முறைகேடு செய்து, ஊழல் செய்த இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட தயாராகி விட்டனர். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மாவின் ஆட்சி வரும். அப்போது இது போன்று சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்படும் என்றார்.

    • செங்கோட்டையனை விட வயதில் சிறியவரானாலும் எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து தகுதியும் உள்ளது.
    • ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட துரோகி தான் டி.டி.வி. தினகரன்.

    மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இ.பி.எஸ்.-ஐ விட செங்கோட்டையன் வயதில் மூத்தவர் அவ்வளவு தான்.

    * ராகுல் காந்தி கூட தான் வயதில் சிறியவர், ஆனால் தலைவர்கள் அவர் பின்னால் இருக்கிறார்கள்.

    * செங்கோட்டையனை விட வயதில் சிறியவரானாலும் எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து தகுதியும் உள்ளது.

    * கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி A1 குற்றவாளி என்றால் சிறையில் தள்ளி விடலாமே?

    * ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட துரோகி தான் டி.டி.வி. தினகரன்.

    * டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வத்திற்கு நடுவில் செங்கோட்டையன் மாட்டிக்கொண்டார்.

    * இங்கு ராஜாவாக இருந்த செங்கோட்டையன் அங்கு கூஜா தூக்குவது போல் ஆகிவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சோதனை முழுமையாக முடிந்த பின்னரே கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
    • வெடிகுண்டு மிரட்டல் குறித்து மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டில் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள 14 மாவட்டகளுக்கான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. எனவே வழக்கு தொடர்பாக வரும் பொதுமக்கள், பல்வேறு மாவட்ட வழக்கறிஞர்கள் மதுரை ஐகோர்ட்டிற்கு வந்து செல்கிறார்கள். இதனால் ஐகோர்ட்டு வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்த நிலையில் இ-மெயில் மூலமாக மதுரை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஐகோர்ட்டு வளாகத்தில் குவிக்கப்பட்டனர். முதல் கட்டமாக ஐகோர்ட்டின் நுழைவாயில் மூடப்பட்டது. உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்லாதவாறும், வெளியே இருந்து வருபவர்கள் உள்ளே நுழையாதவாறும் போலீசார் தடுப்பு காவலில் ஈடுபட்டனர்.

    பின்னர் ஐகோர்ட்டு வளாகத்தில் வெடிகுண்டு சோதனை தொடங்கியது. இந்த சோதனை முழுமையாக முடிந்த பின்னரே கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டு வளாகத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் ஐகோர்ட்டு வளாகம், நீதிபதி குடியிருப்பு, நீதிமன்ற அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனால் ஐகோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 26-ந்தேதி இதே போல ஐகோர்ட்டு பதிவாளர் இ-மெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததும், சோதனைக்கு பின்பு புரளி என்பதும் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • திமுக ஆட்சிக்கு வரும் என சொன்ன ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்படி ஒன்றாகி இணைய முடியும்.
    • எத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் துரோகிகள் இருந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது.

    மதுரை மாவட்டம் கப்பலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார.

    அப்போது, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டிடிவி தினகரன் கூட்டாக இணைந்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இபிஎஸ் பதில் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    துரோகிகளாகல் தான் கடந்த தேர்தலில் அதிமுகவால் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனது. கட்டுப்பாட்டை மீறினால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திமுக ஆட்சிக்கு வரும் என சொன்ன ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்படி ஒன்றாகி இணைய முடியும்.

    எத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் துரோகிகள் இருந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது.

    ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இருவரும் திமுகவின் பி டீம்.

    பயிர் வளர வேண்டும் என்றால் களை எடுக்க வேண்டும். கட்சியில் உள்ள களைகள் நீக்கப்பட்டுவிட்டது. இப்போது அதிமுக எனும் பயிர் செழித்து வளர்ந்து வந்து ஆட்சியை கைப்பற்றும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • த.வெ.க.வும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை.
    • 2026-ம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

    மதுரை மாவட்டம் கப்பலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழக வெற்றிக் கழகத்துடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

    * அ.தி.மு.க.வும் த.வெ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. த.வெ.க.வும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை.

    * 2026-ம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

    எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டத்தில் சிலர் த.வெ.க. கொடியுடன் பங்கேற்றது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, வீட்டிற்கு வரும் விருந்தாளியை வரவேற்பது போல் தங்கள் ஊருக்கு வந்த என்னை த.வெ.க. தொண்டர்கள் வரவேற்றுள்ளனர் என்று அவர் பதில் அளித்தார்.

    • விவசாயிகள் சாலையில் நெல்லை குவித்து வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?
    • தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் நெல் கொள்முதல் குறித்து முரணான தகவல்.

    மதுரை மாவட்டம் கப்பலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தாம் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக முதலமைச்சர் ஒரு கருத்தை கூறி இருக்கிறார். அப்படி என்ன அவதூறு கூறினேன் என முதலமைச்சர் விளக்கமளியக்க வேண்டும்.

    விவசாயிகள் சாலையில் நெல்லை குவித்து வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

    அமைச்சர் சக்கரபாணி கூறியது போல் 2000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. தினமும் 2000 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் எந்த கொள்முதல் நிலையத்திலும் நெல் மூட்டைகள் தேங்கி இருக்காது.

    பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு முதலமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை.

    திமுக ஆட்சியின் தான் ஆண்டுக்கு 42 லட்சம் டன் நெல் கொள்முதல் என கூறுவது பச்சை பொய்.

    தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் நெல் கொள்முதல் குறித்து முரணான தகவல் கூறப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கெடு விதித்தார்
    • செங்கோட்டையனை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி பழனிசாமி உத்தரவிட்டார்.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி ஒன்றிணைப்பு குறித்து குரலெழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்தார்

    இதைதொடர்ந்து, செங்கோட்டையனை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டார்.

    பின்னர், டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, டெல்லிக்குச் சென்ற செங்கோட்டையன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு, செங்கோட்டையன் அமைதி காத்து வந்தார்.

    இந்நிலையில், மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு, ஒரே காரில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் பயணம் செய்தனர்

    பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு இருவரும் ஒன்றாக வந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் பசும்பொன்னில் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் யாக வேள்வியுடன் தொடங்கியது.

    பொதுமக்கள் ஏராளமானோர் பால்குடம், ஜோதி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2-ம் நாளான நேற்று அரசியல் விழாவாக நடைபெற்றது. இதில் தேவரின் அரசியல் பயணம் குறித்து சொற்பொழிவாளர்கள் பேசினார்கள்.

    நிறைவு நாளான இன்று (30-ந்தேதி) குருபூஜை விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார். நேற்று தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் பின்னர் இரவு மதுரையில் அழகர்கோவில் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கினார்.

    இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

    ×