என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு- 16 காளைகளை அடக்கி இருவர் முதலிடம்
- சிறப்பாக களம்கண்ட காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
- இருவர் முதலிடத்தில் இருந்ததால் குலுக்கல் முறையில் முதலிடம் தேர்வு செய்யப்பட்டது.
உலகப்புகழக பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டியில் 10 சுற்றுகள் முடிந்த நிலையில், போட்டியின் முடிவில் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் பொந்துகம்பட்டி அஜித், பொதும்பு பிரபாகரன் இருவரும் தலா 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ளனர்.
இந்த போட்டியில் சிறப்பாக களம்கண்ட காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அஜித், பிரபாகரன் இருவரில் யாருக்கு கார் பரிசு என்பது கேள்விக் குறியாக இருந்தது.
குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் மாடுபிடி வீரருக்கு காரும் மற்றொரு நபருக்கு பைக்கும் பரிசாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் இதுவுரை 4 முறை கார் பரிசு வென்ற பிரபாகரன் மீண்டும் கார் பரிசை வெல்வாரா என எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், 16 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரருக்கான கார் பரிசை பொந்துகம்பட்டி அஜித் தட்டிச்சென்றார்.
அஜித், பிரபாகரன் தலா 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்ததால் குலுக்கல் முறையில் முதலிடம் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.






