என் மலர்tooltip icon

    மதுரை

    • 2 மூதாட்டிகளிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்தது.
    • மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    அவனியாபுரம், முத்துக்குமார் தெருவை சேர்ந்தவர் கனகவள்ளி (65). இவர் சித்திரை திருவிழா எதிர்சேவை பார்ப்பதற்காக ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு கும்பல் கனகவள்ளி அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பரவை பவர் ஹவுஸ் சாலை ஆர்.ஜே.டி. நகரை சேர்ந்தவர் சுந்தரி (60). இவர் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். விளாங்குடி கொண்டை மாரியம்மன் கோவில் அருகே ஒரு மோட்டார் சைக்கிள் பின் தொடர்ந்தது. அதில் 2 பேர் இருந்தனர். அந்த கும்பல் சுந்தரி அணிந்திருந்த 12 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • தி.மு.க. சாதனை விளக்க கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பதாக மாவட்ட செயலாளர் மணிமாறன் தெரிவித்தார்.
    • வார்டு மற்றும் கிளை செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி அருகில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

    மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமை தாங்குகிறார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகி கள், மாநில தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் மற்றும் வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அனைத்து அணிகளின் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள், வார்டு மற்றும் கிளை செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்

    இந்த தகவலை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தெரிவித்துள்ளார்.

    • நள்ளிரவு முதல் விடிய விடிய நடந்த தசாவதார நிகழ்ச்சியில் கள்ளழகர் மோகினி அவதாரத்தில் காட்சி அளித்தார்.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்தனர்.

    மதுரை

    மதுரை அழகர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கடந்த 3-ந்தேதி கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்பட்டார். அப்போது அவர் வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்த ருளினார்.

    மதுரை மூன்றுமாவடியில் 4-ந்தேதி எதிர்சேவை நடந்தது. இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு வந்தார். அங்கு அவருக்கு 5-ம் தேதி அதிகாலை ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது.

    அதன் பிறகு தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் உத்தரவு பெற்று, ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி அதிகாலை 5.52 மணிக்கு ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் இறங்கினார்.

    அப்போது லட்சக்க ணக்கான பக்தர்கள் வைகை ஆற்றுப்பகுதியில் திரண்டு வந்து அழகரை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு ராமராயர் மண்டபம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு அழகர் வேடமிட்ட பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீர்த்தவாரி அபிஷேகம் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர், வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்கினார். அதன் பிறகு நேற்று காலை சேஷ வாகனத்தில் வைகை ஆற்றின் நடுவில் உள்ள தேனூர் மண்ட பத்திற்கு புறப்பட்டார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பின்தொடர்ந்து வந்து தரிசனம் செய்தனர்.

    தேனூர் மண்டபத்தில் மதியம் 12.30 மணிக்கு எழுந்தருளிய கள்ளழகர், மாலை 3 மணிக்கு மேல் திருமஞ்சனம் முடிந்து கருட வாகனத்தில் எழுந்த ருளினார். இதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் தேனூர் மண்டபம் முன்பு, மண்டூக முனிவருக்கு சாப விமோ சனம் அளிக்கும் நிகழ்வு நடந்தது.

    அப்போது தவளை வடிவில் இருந்த சுதபஸ் முனிவரை, நாரை கொத்தி தின்று விடாமல் கள்ளழகர் காப்பாற்றி சாபவிமோசனம் அளித்தார். இதற்காக அங்கு உண்மையான நாரை பறக்க விடப்பட்டது. அப்போது தேனூர், வண்டியூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கள்ளழகரை தரிசனம் செய்தனர்.

    அதன் பிறகு கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் இருந்து வண்டியூர் ஆஞ்ச நேயர் கோயிலுக்கு சென்றார். அப்போது நல்ல மழை பெய்தது. இருந்த போதிலும் கள்ளழகர் அடுத்தடுத்த மண்டகப்படிகளுக்கு சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களும் மழையில் நனைந்துகொண்டே தரிசனம் செய்தனர்.

    ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து கள்ளழகர் இரவு 9 மணியளவில் ராமராயர் மண்டபம் சென்றடைந்தார். அங்கு நேற்று இரவு 10.30 மணி முதல் இன்று காலை வரை விடிய விடிய தசாவதாரம் நிகழ்ச்சி நடந்தது. கூர்ம, கிருஷ்ண, மச்ச, மோகினி, முத்தங்கி, ராமர், வாமண அவதா ரங்களில் கள்ளழகர் எழுந்த ருளினார்.

    இதனை ஆயிரக்க ணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் மோகினி அவதாரத்தில் கள்ளழகர் உலா வந்தார். கள்ளழகர் இன்று மதியம் 2 மணி அளவில் புறப்பாடாகி, ஆழ்வார்புரம் செல்கிறார். அங்கு உள்ள சடாரி மண்டபத்தில் எழுந்து அருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். அதன் பிறகு தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் தங்குகிறார்.

    நாளை அதிகாலை 2 மணியளவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி, கருப்பணசாமி கோயில் முன்பு வையாழியாக உருமாறி அழகர் மலைக்கு புறப்படும் நிகழ்வு நடக்கிறது. இதனைத் தொடர்ந்து 9-ந்தேதி அழகர் கோயிலை சென்றடைகிறார். அங்கு மறுநாள் (10-ந்தேதி) உற்சவ சாத்துப்படிகளுடன் சித்திரை திருவிழா முடிவடைகிறது.

    • சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவிலில் பட்டாபிஷேகம் நடந்தது.
    • தமிழாசிரியர் ராமகிருஷ்ணன் சொற்பொழிவாற்றினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் தீர்த்த வாரி திருவிழா நடந்தது. இதையொட்டி காலையில் அக்னி கரகம் கோவிலாளர் வீட்டுக்கு சென்றது. இதைத் தொடர்ந்து மஞ்சள் நீராடுதல் நடந்தது.

    மாலையில் திருவிழா கொடி இறக்கம் நடைபெற்றது. அம்மன் வைகை ஆற்றுக்குச் சென்று தீர்த்தமாடி கோவில் வளாகத்தில் பூ அலங்காரத்துடன் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது.

    அதிகாலை ரிஷப வாகனத்தில் அம்மன் பவனி வந்தது. நேற்று மாலை பட்டாபிஷேகம் நடந்தது.

    இதில் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ராம கிருஷ்ணன் பட்டாபிஷே சொற்பொழிவாற்றினார்.

    • மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் முதல் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
    • வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரேமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை பயணத்தை முன்னிட்டு வாடிப்பட்டியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    இதில் அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்று பல்வேறு துறைகளின் சார்பில் 960 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 57 லட்சத்து 54 ஆயிரத்து 693 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக தமிழக அரசு விளங்க வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணமாகும். இதனை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த 2 ஆண்டு ஆட்சிக்காலத்தில் முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களையும், அறிவிக்காத பல்வேறு சிறப்பு திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

    தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை சட்ட மன்றத்தில் நிறைவேற் றப்பட்டு வருகிற செப்டம்பர் மாதம் முதல் இந்த தொகையை தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ் சேகர், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விவேகா னந்தன், கூட்டுறவு சங்க ங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரேமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கேமராவில் கொள்ளை சம்பவம் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் கேமரா மீது விபூதியை அள்ளி வீசி கைவரிசை காட்டி உள்ளனர்.
    • மய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் கதவை உடைத்து பூஜை பொருட்களை திருடிய சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் துணைக்கோவிலாக காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த கோவிலுக்கு செல்ல பழைய படிக்கட்டுப் பாதை மற்றும் புதிய படி கட்டுப்பாதை என 2 வழிகள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியை யொட்டி வழக்கத்துக்கு அதிகமாக பக்தர்கள் வருகைதந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இதைத் தொடர்ந்து இரவு கோவிலை பூட்டி சென்றனர்.

    நேற்று காலை கோவிலை திறப்பதற்காக கோவில் குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் சென்றனர்.அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

    மேலும் கோவிலுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பூஜை பொருட்கள், பித்தளை வேல் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் குருக்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக கோவில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    மேலும் கேமராவில் கொள்ளை சம்பவம் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் கேமரா மீது விபூதியை அள்ளி வீசி கைவரிசை காட்டி உள்ளனர்.

    இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் கதவை உடைத்து பூஜை பொருட்களை திருடிய சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மலைக்குச் செல்லும் படிக்கட்டு பாதை பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் மர்ம நபர்களின் உருவங்கள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    காசி விசுவநாதர் கோவிலில் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இங்குள்ள சி.சி.டி.வி. கேமராவின் ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மலைக்கோவிலில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வைகை ஆற்றின் வடகரை ஆர்.ஆர்.மண்டபம் பகுதியில் வைத்து 10 பேர் கும்பல் சூர்யபிரகாசை சரமாரியாக தாக்கியது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை எம்.கே.புரத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மகன் சூர்யபிரகாஷ் (வயது23). இவர் பி.ஏ. படித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் வேலை தேடிக்கொண்டிருந்தார். இந்தநிலையில் மதுரையில் நடந்த சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக கடந்த 4-ந்தேதி இரவு சூர்ய பிரகாஷ் தனது நண்பர்களுடன் சென்றார்.

    அவர்கள் மதிச்சியம் அம்பலத்தார் தெருவில் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த 10 பேர் கும்பல், இளம்பெண்களை கிண்டல் செய்துள்ளது. இதனை கண்ட சூர்ய பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து வைகை ஆற்றின் வடகரை ஆர்.ஆர்.மண்டபம் பகுதியில் வைத்து 10 பேர் கும்பல் சூர்யபிரகாசை சரமாரியாக தாக்கியது. அவர்கள் கைக்குட்டையால் அவரது கழுத்தை நெரித்தனர். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சூர்யபிரகாஷ் மயங்கி விழுந்தார். இதனால் அச்சமடைந்த 10 பேர் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.

    இதையடுத்து சூர்ய பிரகாசை அவரது நண்பர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக மதிச்சியம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிளை கண்டுபிடிக்க சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சூர்ய பிரகாசை தாக்கியவர்களின் உருவங்கள் பதிவாகி இருந்தன. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 6 பேரை தேடி வருகின்றனர். கொலையுண்ட சூர்ய பிரகாஷ், ராஜரத்தினத்திற்கு ஒரே மகன் ஆவார்.

    • 10 நாட்களில் ரூ.30 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. இதில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார்.
    • மதுரை கிழக்கு யூனியன் தலைவர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாங்குளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் கிருஷ்ணாபுரம் பரம்பை கண்மாயின் உபரிநீர் செல்லும் ஓடையின் குறுக்கே நீர்வளத்துறை சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிறு பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் மூர்த்தி இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. பொதுமக்கள் நலன் சார்ந்த இந்த 2 ஆண்டு சாதனை பயணத்தில் மக்கள் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதி போன்ற திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் கடந்த 25-ந் தேதி மாங்குளம் கிராம பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைக்க வந்தபோது மாங்குளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமம் கிருஷ்ணாபுரம் மக்கள் தங்களது பகுதியில் மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி சாலையை கடக்க சிரமப்படுவதாக தெரிவித்தனர்.

    மேலும் கிருஷ்ணாபுரம் பரம்பை கண்மாயின் உபரிநீர் செல்லும் ஓடையின் குறுக்கே சிறு பாலம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதன்படி அந்த பகுதியில் உடனடியாக சிறு பாலம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தேன்.

    கிருஷ்ணாபுரம் பரம்பை கண்மாயின் உபரிநீர் செல்லும் ஓடையின் குறுக்கே சிறு பாலம் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட் டுள்ளன. சிறு பாலம் அமைக்கப்படும் என தெரிவித்த 10 நாட்களில் அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் இந்த பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதை விரைவாகவும், தரமாகவும் மேற்கொண்டு மழைக்காலம் தொடங்கும் முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை கிழக்கு யூனியன் தலைவர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வைகை ஆற்றில் மூழ்கி பலியான 3 பேர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடத்தி காட்டுவார்.

    மதுரை

    மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் 3-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பார்வையற்றோ ருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை எஸ்.எஸ்.காலனியில் நடைபெற்றது.

    அட்சய பாத்திர நிறுவனர் நெல்லை பாலு தலைமை தாங்கினார். நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இதில் மாநில அம்மா பேரவை துணைச் செயலா ளர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் ஆர்.பி.உதய குமார் பேசியதாவது:-

    வைகை நதிக்கரையில் கள்ளழகர் ஆற்றிலே இறங்கி மக்களுக்கு அருளாசி வழங்கிய நிகழ்வு மதுரை யிலே சீரும் சிறப்போடும் நடைபெற்றது. இந்த நிகழ்விலே பல்வேறு பாது காப்பு நடவடிக்கைக ளையும் தாண்டி துரதிஷ்ட வசமாக 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த ஒரு சம்பவம் நடந்தது வருந்தத்தக்கது. இதில் ஒருவர் மூச்சுதிணறி உயிரிழந்துள்ளார். எனவே இவர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    2 ஆண்டுகளில் தி.மு.க. சாதனை செய்ததாக முதல் -அமைச்சர் ஸ்டாலின் பறைசாற்றி கொள்கிறார்.ஆனால் இதிலே நாம் ஆராய்ந்து பார்த்தால் இந்த 2 ஆண்டுகளிலே தி.மு.க. அரசு சாதித்ததை காட்டிலும் சரிக்கியது தான் அதிகம்.இன்றைய தி.மு.க. அரசு வெற்றி பெற்றது 30 சதவீதம் என்றால், தோல்வி பெற்றது 70 சதவீதமாக உள்ளது.

    எம்.ஜி.ஆர். 5-வது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்திக் காட்டினார். அவருடைய வழியில் ஜெயலலிதா வெற்றி மாநாட்டை நடத்தினார். உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மதுரையில் நடைபெறும். உலக பிரசித்தி பெற்ற சித்தரை திருவிழா அதேபோன்று மதுரையிலே ஆகஸ்ட் 20-ந் தேதி நடை பெறும். அ.தி.மு.க. மாநாடு இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடத்தி காட்டுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 வாலிபர்கள் பலியானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    பொதும்பு வடக்கு தெருவை சேர்ந்த செல்வம் மகன் காளிதாஸ் (24). இவர் இவர் பைக்கில் கூடல்நகர் மெயின்ரோட்டில் சென்ற போது பின்னால் வந்த அரசு டவுன் பஸ் மோதி யது. இதில் படுகாயம் அடைந்த காளிதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்த புகாரின்பேரில் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பஸ் டிரைவரான அலங்காநல்லூர் முருகன் (48) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரை சேர்ந்த சின்னத்தம்பி மகன் அருண்குமார் (28).இவர் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் பைக்கை ஓட்டிச் சென்றார். கட்டுப்பாட்டை இழந்த பைக் அந்த பகுதியில் விளம்பர பலகை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண்குமார் படுகாயமடைந்தார்.

    அவரை உடனடியாக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • மதுரை நாடார் உறவின்முறை சார்பில் சித்திரைத்திருவிழா பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்ப்ட்டது.
    • சுப்புராஜ நாடார்- கிருஷ்ணம்மாள் மன்றத்தில் நடந்தது.

    மதுரை

    மதுரை நாடார் உறவின்முறையின் சார்பில் சித்திரைத்திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா சுப்புராஜ நாடார்- கிருஷ்ணம்மாள் மன்றத்தில் நடந்தது.

    மதுரை நாடார் உறவின்முறையின் துணைத்தலைவர் முத்தரசு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வி.பி.மணி முன்னிலை வகித்தார். மதுரை நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் எஸ்.கே.மோகன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    இதில் ஜெயராஜ் நாடார் உறவின்முறை மேல்நிலைப் பள்ளி துணைத்தலைவர் செந்தில்குமார், துணைச் செயலாளர் பாஸ்கரன், காமராஜர் அறநிலைய தலைவர்-துணைத் தலைவர் சோமசுந்தரம், பொதுச்செயலாளர்கள் காசிமணி, பாலசுப்பிரமணியன்.

    ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி செயலாளர்-தாளாளர் ஆனந்த், மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைவர் மதனகோபல் மற்றும் ஆட்சி அவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் உயிரிழப்பை தடுத்து இருக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
    • தமிழக கவர்னரின் கருத்தை நான் ஆதரிக்கவில்லை.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோ சனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    10லட்சம் பேர் பார்த்து மகிழும் சித்திரை திருவிழா வில் இந்த ஆண்டு மிக மோசமான சம்பவம் நடந்துள்ளது. 5 பேர் உயிரி ழந்துள்ளனர். இதனை மனவருத்தத்தோடு சொல்கி றேன்.

    வைகை ஆற்றில் நிகழ்ந்த உயிரிழப்புக்கு அதிகாரிகளின் கவன குறைபாடே காரணம்.சித்திரை திருவிழா வரலாற்றில் இதுவரை துயர சம்பவங்கள் நடந்ததில்லை. தி.மு.க. ஆட்சியில் மட்டுமே இவ்வாறு நடக்கிறது. வைகை ஆற்றில் 250மீட்ட ருக்கு உட்பட்ட பகுதியில் 3பேர் மூழ்கி உயிரிழந்துள் ளனர்.

    மேலும் சமூக விரோதி களை கண்காணிக்க போலீ சார் தவறியதால் பல இடங்களில் செயின் பறிப்பு நடந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தண்ணீர் அதிகமாக வந்தபோது கூட உயிரிழப்பு இல்லை. தற்போது தான் உயிரிழப்பு கள் ஏற்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சியும், நிர்வாகமும், குளறுபடியும், குழப்பமுமாக உள்ளது.

    வருங்காலங்களில் திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி களுக்கு வி.ஐ.பி. பாஸ் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பங்க ளுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    ஆற்றுக்குள் இறங்கு பவர்களை காவல்துறை கண்டித்து எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டும்.ஆற்றில் அழகர் மட்டும் தான் இறங்க வேண்டும். ஆனால் எல்லோரும் இறங்குகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் சாரம் கட்டி தனி வழியில் பக்தர்கள் சென்றனர். இப்போது அழகருக்கு முன்பாகவே பக்தர்களும் ஆற்றில் இறங்கிவிடுகிறார்கள்.

    தமிழக கவர்னரின் கருத்தை நான் ஆதரிக்க வில்லை. கவர்னரை திமுகவினர் விமர்சனம் செய்யும் போது அவர் எப்படி சும்மா இருப்பார்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×