என் மலர்
மதுரை
- ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்யப்பட்டது,
- பெண்கள் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
கே.கே.நகர் 3-வது கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலவைரவன் (40). ஓட்டல் நடத்தி வருகிறார். இவரிடம் அறிமுகமான கார்த்திகை ராஜன், கீதா, சாந்தி, ராஜசேகரன் ஆகிய 4 பேரும், தாங்கள் பழைய இரும்பு வியாபாரம் செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறினர்.
இதை நம்பிய பாலவைரவன் ரூ.15 லட்சம் முதலீடு செய்தார். அதன்பிறகு லாபத்தில் பங்கு தரவில்லை, முதலீடு செய்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இது குறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பெண்கள் உள்பட 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அழகர்கோவிலில் 16-ந்தேதி மின்தடை ஏற்படும்.
- மின்வாரிய செயற்பொறியாளர் ராஜஸ்ரீ தெரிவி த்துள்ளார்.
மதுரை
அழகர்கோவில் துணை மின்நிலை யத்தில் வருகிற 16-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது.
எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை பொய்கை கரைப்பட்டி, கெமிக்கல்ஸ்., கள்ளந்திரி, நாயக்கன் பட்டி, அழகர் கோவில், அப்பன் தருப்பதி, பூண்டி, தூயநெறி, மாத்தூர், வெள்ளி யங்குன்றம் புதூர், கடவூர், தொண்ட மான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்தூர் பட்டி, தொப்ப லாம் பட்டி ஆகிய பகுதி களில் மின்த டை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொ றியாளர் ரா ஜஸ்ரீ தெரிவி த்துள்ளார்.
- வீடு புகுந்து ரூ.48 ஆயிரம் திருட்டப்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் காமராஜ புரம் வட பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது30), பத்திர எழுத்தர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடக்கோவில் கிராமத்தில் இவரது தாத்தா உடல் நலக்குறைவால் இறந்ததால் குடும்பத்துடன் அங்கு சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இவர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.48 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்.
இதுகுதித்து பெரியசாமி கொடுத்த புகாரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- பொதுமக்களிடம் இருந்து 621 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
- சர்வேயர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருமங்கலம்
திருமங்கலம் தாலுகாவில் கடந்த 9-ந் தேதி ஜமாபந்தி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது. மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கோட்டைக் குமார் தலைமை தாங்கினார்.
நேற்று நடந்த ஜமாபந்தியில் பன்னிகுண்டு, கொக்குளம், திருமங்கலம் டவுன் உள்ளிட்ட 3 பிர்காக்களை சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர்.
இந்த ஜமாபந்தியில் மொத்தம் 621 மனுக்கள் பெறப்பட்டன. இதில் முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைபட்டா, இலவச வீட்டு பட்டா, முழு புலம், சப் டிவிஷன் என 80 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை ஆய்வு குழு அலுவலர் கோட்டைக்குமார் வழங்கினார்.
இதில் திருமங்கலம் தாசில்தார் சிவராமன், சர்வேயர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- பாதுகாப்பு பணிகளில் அலங்காநல்லூர் போலீசார் ஈடுபட்டனர்.

முதலிடம் பிடித்த மாட்டின் உரிமையாளரான சத்திரப்பட்டி ஊராட்சி தலைவர் ஜெயபாலகிருஷ்ணனுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தில் பாலமரத்தம்மன் என்ற சுந்தரவல்லி அம்மன் கோவில் உற்சவ விழா நடந்து வருகிறது. இதையொட்டி இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பரந்தாமன், தன்ராஜ் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் சிறிய மாட்டில் 19 ஜோடிகளும், பெரிய மாட்டில் 12 ஜோடிகளும் பங்கேற்றன.
பெரிய மாட்டில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரத்தை சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால கிருஷ்ணணின் மாடு பெற்றது. சிறிய மாட்டில் 2 சுற்றாக போட்டி நடத்தப்பட்டு முதல் பரிசு ரூ.10 ஆயிரத்தை அரும்ப னூர், கள்ளந்திரி மாடு களின் உரிமையாளர்கள் இணைந்து பெற்றனர்.
மற்றொரு சுற்றில் முதல் பரிசை தேனி மாவட்டம் சிறைப்பாறை வெண்டி முத்தையா மாடும், 2-ம் பரிசை கல்லணை விஷ்வா ரவிச்சந்திரனின் மாடும் பெற்றன.
விழா ஏற்பாடுகளை அ.புதுப்பட்டி கிராம மரியாதைகாரர்கள், கிராம மக்கள், மாட்டு வண்டி பந்தயக்குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணிகளில் அலங்கா நல்லூர் போலீசார் ஈடுபட்டனர்.
- பிளஸ்-2 மாணவி மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை
மதுரை பெத்தானி யாபுரம் மேட்டுத்தெரு கோடாங்கி காம்பவுண்டை சேர்ந்தவர் விஜய்பாண்டி, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அன்னலட்சுமி(42). இவர்களது மகள் அர்ச்சனா(19), பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
அன்ன லட்சுமியும், மகனும் சேர்ந்து ஆரப்பாளையம் கண்மாய் கரை பகுதியில் சிக்கன் கடை வைத்துள்ளனர். கடந்த 6-ந் தேதி மதியம் அன்னலட்சுமி சாப்பிடு வதற்காக வீட்டுக்கு வந்தபோது அர்ச்சனா மாயமாகி விட்டது தெரியவந்தது.
பல இடங்களில் தேடிப்பா ர்த்தும் தகவல் கிடைக்க வில்லை.
இதுகுறித்து தாயார் கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதில், தங்கள் கடைக்கு வந்து செல்லும் கண்மாய் கரையை சேர்ந்த கவுதம் என்பவர் அர்ச்சனாவை அழைத்து சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மதுரை மாவட்ட நூலக ஆணைக்குழு, மதுரை மாவட்ட இல்லம் தேடி கல்வி ஆகியவை இணைந்து புத்தக கண்காட்சியை நடத்தியது.
- இந்த கண்காட்சி மேலூர் அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.
மேலூர்
மேலூர் அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப்பள்ளியில் மதுரை மாவட்ட நூலக ஆணைக் குழு, மதுரை மாவட்ட இல்லம் தேடி கல்வி ஆகியவை இணைந்து 38-வது தேசிய புத்தக கண்காட்சியை நடத்தியது. இதன் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தாளாளர் ஷாஜஹான் தலைமை தாங்கினார். புத்தக கண்காட்சியை மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை திறந்து வைத்து பேசினார். மேலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் மணிமேகலா தேவி, செல்வி ராம்கிளினிக் டாக்டர் கணேசன் முதல் புத்தக விற்பனையை பெற்றுக்கொண்டனர்.
பள்ளியின் தலைவர் எம்.ஓ.சாகுல் ஹமீது, பொருளாளர் காதர் மைதீன், துணைத் தலைவர் ஜாகீர் உசேன், நிர்வாக குழு உறுப்பினர்கள் காஜாமைதீன், ராஜாமுகமது, ராஜா முகமது, பிலால் முகமது, ஜபார், சாகுல்ஹமீது, மேலூர் வருவாய் ஆய்வாளர் முனியசாமி, அரசு கலை கல்லூரி தமிழ் துறை முனைவர் பெரியவர், 2-ம் நிலை நூலகர் சீதாலட்சுமி, மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாளர் மகேந்திரன், அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள், அல்அமீன் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் கலந்து கொண்டனர். உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சலீம் நன்றி கூறினார். புத்தக கண்காட்சி வருகிற 22-ந் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது.
- மேலூர் அருகே சூரக்குண்டு பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மேலூர்
மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு கிராமம், தெற்கு வளவாருக்கு பாத்தியப்பட்ட 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன், பாப்பான்குண்டு அய்யன் கோவிலின் கும்பாபிஷேக விழா 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். அதனைத்தொடர்ந்து யாகசாலை பூஜை நடைபெற்றது.
மேலூர் சிவன் கோவில் சிவாச்சாரியார் தட்சிணாமூர்த்தி குருக்கள் கணபதி ஹோமம் செய்து பூஜையை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து யாகசலை பூஜைகள் நடந்தன. நேற்று சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தத்தை கோபுரகலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதனை . கும்பாபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சமயநல்லூரில் ஒர்க் ஷாப் உரிமையாளர் வீட்டில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- 3½பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது.
வாடிப்பட்டி
மதுரை அருகே உள்ள சமயநல்லூர் வி.எம்.டி.நகர் வைகை ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்த பகுதியில் கார்களை பழுதுபார்க்கும் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.
கண்ணன் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 4-ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு மகளை அழைத்து கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் இரவில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3½பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது. திருட்டு போன நகைகள் மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.1லட்சத்து 41ஆயிரம் ஆகும்.
தனது வீட்டில் நடந்த திருட்டு குறித்து சமயநல்லூர் போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். திருட்டில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் சமயநல்லூர் பஸ் நிறுத்த பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
இதனால் சந்தேகமடைந்த அவர், அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது அவர் மேலூர் அருகே உள்ள உச்சப்பட்டியை சேர்ந்த சந்திர குமார்(வயது38) என்பதும், கண்ணன் வீட்டில் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை திருடியது அவர் தான் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்திரகுமாரிடம் இருந்து கண்ணன் வீட்டில் திருட்டு போன நகைகள் மீட்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
- மதுரையில் இன்று செவிலியர் தின பேரணி நடந்தது.
- கல்லூரி மாணவிகள் ஆகியோர் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மதுரை
இத்தாலியில் பிறந்த பிளாரன்ஸ் நைட்டிங்கில் என்பவர் 1900 ஆம் ஆண்டு கால கட்டத்தில் போர் முனையில் காயமடைந்த வீரர்களுக்கு பல்வேறு இன்னல்களுக்கு இடையே சேவையாற்றினார்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அவரது சேவையை நினைவு கூறும் வகையில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த மே 12-ந் தேதி உலக செவிலியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று செவிலியர் தினத்தை முன்னிட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் பேரணியை தொடங்கி வைத்தார்.மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கிய பேரணி கலெக்டர் அலுவலகம் வரை சென்று மீண்டும் ஆஸ்பத்திரியை வந்தடைந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். பேரணியில் சேவை குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாடு செவிலியர் சங்க மாநில செயலாளர் திலகவதி, மாவட்ட தலைவர் ஜெயசத்தியமூர்த்தி, மாவட்ட செயலாளர் செல்வராஜன், பொருளாளர் நாகலட்சுமி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணி முடிந்த பின் செவிலியர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள் ஆகியோர் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- மீட்டர் கட்டணத்தை நீதி மன்ற உத்தரவுப்படி மாற்றி அமைத்திட வேண்டும்.
மதுரை
மதுரை மாநகர் சி.ஐ. டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தியதை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் அநியாய அபதாரம் விதிப்பதை கைவிட வேண்டும். 2013 மீட்டர் கட்டணத்தை நீதி மன்ற உத்தரவுப்படி மாற்றி அமைத்திட வேண்டும். சட்ட விரோதமாக இயங்கும் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும்.
ஆட்டோ தொழி லாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலக பகுதி யில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் உள்ள பகுதியில்ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கத்தேர் இழுத்து ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. வழிபாடு செய்தார்.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பூச்செண்டு கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும் திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து கொண்டு சென்ற பிரசாதங்களை வழங்கினார். அவருடன் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், இளைஞரணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், விக்டர் ஆகியோரும் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு தொகுதி, மேலூர் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






