புத்தக கண்காட்சி திறப்பு

மதுரை மாவட்ட நூலக ஆணைக்குழு, மதுரை மாவட்ட இல்லம் தேடி கல்வி ஆகியவை இணைந்து புத்தக கண்காட்சியை நடத்தியது. இந்த கண்காட்சி மேலூர் அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.
புத்தக கண்காட்சி திறப்பு
Published on

மேலூர்

மேலூர் அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப்பள்ளியில் மதுரை மாவட்ட நூலக ஆணைக் குழு, மதுரை மாவட்ட இல்லம் தேடி கல்வி ஆகியவை இணைந்து 38-வது தேசிய புத்தக கண்காட்சியை நடத்தியது. இதன் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தாளாளர் ஷாஜஹான் தலைமை தாங்கினார். புத்தக கண்காட்சியை மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை திறந்து வைத்து பேசினார். மேலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் மணிமேகலா தேவி, செல்வி ராம்கிளினிக் டாக்டர் கணேசன் முதல் புத்தக விற்பனையை பெற்றுக்கொண்டனர்.

பள்ளியின் தலைவர் எம்.ஓ.சாகுல் ஹமீது, பொருளாளர் காதர் மைதீன், துணைத் தலைவர் ஜாகீர் உசேன், நிர்வாக குழு உறுப்பினர்கள் காஜாமைதீன், ராஜாமுகமது, ராஜா முகமது, பிலால் முகமது, ஜபார், சாகுல்ஹமீது, மேலூர் வருவாய் ஆய்வாளர் முனியசாமி, அரசு கலை கல்லூரி தமிழ் துறை முனைவர் பெரியவர், 2-ம் நிலை நூலகர் சீதாலட்சுமி, மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாளர் மகேந்திரன், அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள், அல்அமீன் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் கலந்து கொண்டனர். உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சலீம் நன்றி கூறினார். புத்தக கண்காட்சி வருகிற 22-ந் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com