search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto workers"

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • அரசு போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் ஜோதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    நெல்லை:

    புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது, தொழிலாளர்களை பாதிக்கின்ற ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், நலவாரிய நிதியில் இருந்து ஆட்டோ தொழிலாளர்க ளுக்கு ரூ.4 லட்சத்தில் வீடு கட்டும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆட்டோ ஓட்டுநர்க ளுக்கு நலவாரிய ஓய்வூதிய தொகையை ரூ.3 ஆயிரமாக வழங்கிட வேண்டும், ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் ஆட்டோ சங்கத்தின் மாவட்ட துணை தலைவர்கள் காமராஜ், செல்வன் என்ற சற்குணம், அண்ணாதுரை, நகர செயலாளர் சாகுல், மாவட்ட துணைச் செயலாளர் ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் ராஜசேகரன், பீடி சங்க மாவட்ட தலைவர் சரவண பெருமாள், அரசு போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் ஜோதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதியில் சேர்ந்த ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    • ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • மீட்டர் கட்டணத்தை நீதி மன்ற உத்தரவுப்படி மாற்றி அமைத்திட வேண்டும்.

    மதுரை

    மதுரை மாநகர் சி.ஐ. டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தியதை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் அநியாய அபதாரம் விதிப்பதை கைவிட வேண்டும். 2013 மீட்டர் கட்டணத்தை நீதி மன்ற உத்தரவுப்படி மாற்றி அமைத்திட வேண்டும். சட்ட விரோதமாக இயங்கும் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும்.

    ஆட்டோ தொழி லாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலக பகுதி யில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் உள்ள பகுதியில்ஆர்ப்பாட்டம் செய்தனர். 

    ×