வீடு புகுந்து ரூ.48 ஆயிரம் திருட்டு

வீடு புகுந்து ரூ.48 ஆயிரம் திருட்டப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வீடு புகுந்து ரூ.48 ஆயிரம் திருட்டு
Published on

திருமங்கலம்

திருமங்கலம் காமராஜ புரம் வட பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது30), பத்திர எழுத்தர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடக்கோவில் கிராமத்தில் இவரது தாத்தா உடல் நலக்குறைவால் இறந்ததால் குடும்பத்துடன் அங்கு சென்று விட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இவர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.48 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்.

இதுகுதித்து பெரியசாமி கொடுத்த புகாரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com