என் மலர்
மதுரை
- செக்கானூரணியில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மின் மயானம் அமைவதை தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவிடம் செக்கானூரணி பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதா வது:-
மதுரை அருகே உள்ள தேன்கல்பட்டி பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தேன்கல்பட்டி கிராம பொதுமக்களுக்கு பாத்தியமான மயானம் செக்கானுாரணி-திருமங்க லம் மெயின் ரோட்டில் உள்ளது.
இப்பகுதியில் இறந்தவர் களை மயானத்தில் அவர்கள் வழக்கப்படி சாஸ்திர சம்பிர தாயங்கள் முறைப்படி அடக்கம் செய்து வருகின்ற னர்.
இந்த நிலையில் இப்பகுதியில் இருக்கும் மயானத்தை மின் மயானமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மின் மயானமாக மாற்றினால் பாரம்பரிய முறைப்படி செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயங்கள் செய்ய இயலாத நிலை ஏற்படும்.
மேலும் மின் மயானம் அமைந்தால் நாளடைவில் எங்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் படிப்படியாக குறையும். பின்வரும் சந்ததிகளுக்கு இப்பகுதி மக்களின் பாரம் பரியம் தெரியாமல்போகும் நிலை உள்ளது. ஆகவே இப்பகுதி மக்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து மின் மயானம் அமைவதை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடம் இருந்து ரூ. 75 ஆயிரம், சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை
திண்டுக்கல் மெயின்ரோடு விசாலாட்சி மில் அருகே பணம் வைத்து சூதாடுவதாக கூடல்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் அந்தப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த 11 பேரை பிடித்து விசாரித்தனர். அதில்அவர்கள் மேலப்பொன்னகரம் 2-வது தெரு கோவிந்தசாமி, சுரேஷ் (32), அரசன் (53), சாகுல்ஹமீது (43), லட்சுமணன் உள்ளிட்டவர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ. 75 ஆயிரம், சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 11 பேரையும் கைது செய்தனர்.
- திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க கண்காட்சியை தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் பார்வையிட்டார்.
- சசிகுமார் முன்னிலை வகித்தார்.
திருப்பரங்குன்றம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க கண்காட்சி நடந்தது. மேற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ரத்தினசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிகுமார் முன்னிலை வகித்தார். தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் சுதாகர் ரெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த கண்காட்சியில் மத்திய அரசின் திட்டங்கள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கும் கடனுதவி திட்டங்கள், ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டம், பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் போன்ற மத்திய அரசு திட்டங்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்றிருந்தன.
நிகழ்ச்சியில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சதீஷ் ஆசாத், மாநில திட்ட பொறுப்பாளர் ராஜசேகர், மாநில பொருளாதார பிரிவு செயலாளர் டாக்டர் தேவ்ஜில், மகளிரணி பொதுச்செயலாளர் அபிநயா, விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர்கள் பெருமாள், ரமேஷ் கண்ணன், விவசாய அணி திருங்கலம் தெற்கு மண்டல தலைவர் பாலசந்தர், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் காளிதாஸ், அவனியாபுரம் பாலதண்டாயுதபாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
- நெருக்கமாக இருந்த படம், வீடியோவை காதலியின் கணவருக்கு அனுப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- மேலும் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.
மதுரை
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் மதுரை கூடல்புதூரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்தார். திருமண ஆசை காட்டி அந்த பெண்ணுடன் பலமுறை கார்த்திகேயன் உல்லாசமாக இருந்துள்ளார்.
அப்போது காதலிக்கு தெரியாமல் நெருக்கமாக இருக்கும்போது செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இந்தநிலையில் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. அதன் பின்பும் உல்லாசமாக இருக்க அந்த பெண்ணை கார்த்திகேயன் அழைத்துள்ளார்.
ஆனால் அதற்கு அவரது காதலி மறுத்துவிட்டார். இதனால் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை காட்டி மிரட்டி காதலியை உல்லாசமாக இருக்க வருமாறு அழைத்துள்ளார்.
இருப்பினும் அந்த பெண் சம்மதிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பெண்ணின் கணவருக்கும் அனுப்பியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கூடல்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.
- மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
- அடுத்தடுத்து வாகனங்கள் ஏறியதில் உடல் சின்னாபின்னமானது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது நரசிங்கம்பட்டி. இங்குள்ள நான்கு வழிச்சாலையில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் சின்னாபின்னமாகி சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து மேலூர் போலீஸ் நிலையத் திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனியப் பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்பு சாலையில் கிடந்த வாலிபரின் உடலை மீட்ட னர். அந்த வாலிபர் நேற்று நள்ளிரவு அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு வாகனம் மோதி இறந்திருக்கிறார். அந்த இடம் இருட்டாக இருந்ததால் அவ்வழியாக சென்ற மற்ற வாகனங்களும் வாலிபரின் உடல் மீது ஏறி சென்றுள்ளது.
இதில் அந்த வாலிபரின் உடல் அடையாளம் தெரி யாத அளவுக்கு சிதைந்து சின்னாபின்னமாகி இருக்கி றது. அந்த வாலிபர் யார்? அவர் மீது மோதிய வாகனம் எது? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் விபத்தில் தான் அந்த வாலிபர் இறந்தாரா? அல்லது யாரேனும் மர்ம நபர்கள் கொன்று சாலையில் வீசி சென்றார்களா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மர்ம நபர்களின் தாக்குதலில் பொன்னம்பலத்தின் வீடு போர்க்களம்போல் காட்சி அளித்தது.
- போலீசார் விசாரணை நடத்தி சிலரை தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை கருவனூரை சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் சமயநல்லூர் தொகுதியில் 2001-2006ம் ஆண்டில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். கருவனூரில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அங்குள்ள கருமாரியம்மன் கோவிலில் மரியாதை தருவது தொடர்பாக பொன்னம்பலத்துக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு குடும்பத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.
அது தொடர்பாக இருவரது குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது வீட்டுக்குள் சில மர்ம நபர்கள் கும்பலாக புகுந்தனர். அவர்கள் பொன்னம்பலம் வீட்டில் நிறுத்தப்பட்டி ருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்தனர்.
ஒரு காரை தீ வைத்து எரித்தனர். மேலும் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து நொறுக்கினர். அதனை வீட்டில் இருந்த பொன்னம் பலத்தின் குடும்பத்தினர் தடுத்தனர். அவர்களை தாக்கி விட்டு பொன்னம் பலத்தின் வீட்டை அந்த நபர்கள் சூறையாடிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
மர்ம நபர்களின் இந்த தாக்குதலில் பொன்னம்பலத்தின் வீடு போர்க்களம்போல் காட்சி அளித்தது. இந்த தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மர்ம நபர்கள் தாக்கியதில் பொன்னம்பலத்தின் குடும்பத்தினர் 5 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் பொன்னம் பலம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலில் மரியாதை கொடுக்கும் விவகாரத்தில் எதிர்தரப்பினர் தாக்குதலில் ஈடுபட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சிலரை தேடி வருகின்றனர்.
- ரூ.2 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- திருப்பரங்குன்றத்தில் மேம்பாலம் அருகே, நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டை, கரடிப்பட்டி, மேலக்குயில் குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.2 கோடி மதிப்பில் சாலை, நிழற்குடை உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் ராஜன் செல்லப்பா கூறியதாவது:-
சென்னையில் மழையால் பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் முதல்-அமைச்சர் பீகார் சென்றுள்ளார். இந்த அரசு அமைந்து 2 ஆண்டுகளில் தற்போது வரை எந்தவித மக்கள் நல திட்ட பணி களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
இவர்கள் ஒதுக்கீடு செய்தது அனைத்தும் கலைஞர் நூலகம், கலைஞர் நினைவு சின்னம், கலைஞர் கோட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்காகவே. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கி வைத்த பல்வேறு திட்ட பணிகளை தான் தற்போது முதல்-அமைச்சர் திறந்து வைத்துள்ளார்.
மதுரையில் வைகை கரை சாலை, சுற்றுச்சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் தி.மு.க. அரசு திட்ட ப்பணிகள் எதையும் செய்யாததால் சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
மதுக்க டைகளை மூடுவதாக மக்கள் மத்தியில் தெரிவித்து விட்டு அதிக வியாபாரம் இல்லாத மதுக் கடைகளை மட்டுமே மூடியுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் மேம்பாலம் அருகே, பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
வருகிற 2026-ல் எய்ம்ஸ் மருத்துவமனை, நாகமலை புதுக்கோட்டை, வடபழஞ்சியில் தொழில் நுட்ப பூங்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் வரவுள்ளது.
நடிகர் விஜய் தற்போது நலத்திட்ட உதவிகள் செய்ததை அடுத்து அவர் அரசியலுக்கு வரலாம் என பல தெரிவிக்கின்றனர். எந்த நடிகர் வேண்டு மானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல நிலைத்து மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கக்கூடிய நடிகர்கள் இதுவரை வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் சந்திரன், மேலக்குயில்குடி நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சோழவந்தான் அருகே அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டது.
- இவர்கள் தங்கள் கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சியில் காடுபட்டி, புதுப்பட்டி, வடகாடுபட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் காடுபட்டி கிராமத்தில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர கோரி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் அரசுக்கு கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. அதை அமைச்சர் மூர்த்தி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு காடுபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.
மருத்துவர் அருண்கோபி முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் வரவேற்றார். கச்சகட்டி வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன், பிரபாகரன், ராமகிருஷ்ணன், சதீஷ், கிராம செவிலியர் உஷா செல்வமணி, மக்களை தேடி மருத்துவ பணியாளர் மலர்விழி மற்றும் பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பல ர் கலந்து கொண்டனர் ஊராட்சி செயலாளர் ஒய்யனன் நன்றி கூறினார்.
- அரசு பள்ளியில் காவலர்-மாணவர் நல்லுறவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- மேலூர் டி.எஸ்.பி. தொடங்கி வைத்தார்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்-காவலர் நல்லுறவு திட்ட தொடக்க விழா மற்றும் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி மற்றும் மேலூர் கல்வி மாவட்ட அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். போலீஸ் துணை சூப்பிரண்டு பேசுகையில், காவலர்-மாணவர் நல்லுறவு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் 40 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலூர் வட்டாரத்தில் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேலூர் இருபாலர் மேல்நிலை பள்ளி, கொட்டாம்பட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளிகளில் 8, 9-ம் வகுப்பு படிக்கும் 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, வாரந்தோறும் சட்டம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் ேபாலீசாரால் வழங்கப்பட உள்ளது என்றார். நிகழ்ச்சியின் முடிவில் தலைமை ஆசிரியர் முனியாண்டி நன்றி கூறினார்.
- திருவாதவூரில் மாணிக்கவாசகர் குருபூஜை நடந்தது.
- மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். மாணிக்கவாசகர் பிறந்தார். அவர் பிறந்த மக நட்சத்திர நாளில் அங்கு குரு பூஜை விழா நடந்தது.
இதையொட்டி ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. திருவாதவூரில் உள்ள திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோவிலில் மதுரை நகரத்தார் மற்றும் சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மாணிக்கவாசகர் தன் பிறந்த வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சி மேளதாளங்களுடன் நடந்தது. அங்கு அவருக்கு அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடந்தது.
பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
- பள்ளிகள் இடையிலான கலைப்போட்டிகள் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
- மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மதுரை மாவட்ட பள்ளிகள் இடையே நடத்தப்படும் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் வருகிற 30-ந்தேதி உலக தமிழ்ச் சங்க கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில் அனைத்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை தாங்கள் படிக்கும் பள்ளி யின் தலைமை ஆசிரியர் ஒப்புதலுடன் மதுரை மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ அஞ்சல் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ வருகிற 27-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
போட்டிகள் நடைபெறும் அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.7ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பரிந்துரை செய்யப்படுவர்.
போட்டி களுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் சுசீலா செய்து வருகிறார்.
இந்த தகவல் மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வியாபாரி-வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை
- தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை சுப்பிரமணிய புரம் 1-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (வயது25). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். மேலும் வியா பாரத்தை அதிகப்படுத்து வதற்காக வேன் வாங்க விரும்பி யுள்ளார். இதற்காக அவர் தாயிடம் வேன் வாங்கி தரும்படி கூறி யுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்து விட்டார்.
இதனால் மனமுடைந்த ராஜ்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாய் விஜயா ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காய்கறி வியாபாரி ராஜ் குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
சிந்தாமணி கண்ணன் காலனியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் அழகுராஜ் (30). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. திருமணமாகவில்லை. இதனால் மன உைளச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கீரைத்துரை போலீசில் தாய் செல்லபாப்பு புகார் செய்தார். அதன்பேரில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாநகர் யாகப்பா நகர் பாலாஜி நகர் முதல் தெருவைசேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (47). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்தபோது மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி லிங்கேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லிங்கேஸ்வரன் மகன் ராமச்சந்திர பூபதி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லிங்கேஸ்வரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






