search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
    X

    அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

    • சோழவந்தான் அருகே அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டது.
    • இவர்கள் தங்கள் கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சியில் காடுபட்டி, புதுப்பட்டி, வடகாடுபட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில் காடுபட்டி கிராமத்தில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர கோரி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் அரசுக்கு கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. அதை அமைச்சர் மூர்த்தி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு காடுபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.

    மருத்துவர் அருண்கோபி முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் வரவேற்றார். கச்சகட்டி வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன், பிரபாகரன், ராமகிருஷ்ணன், சதீஷ், கிராம செவிலியர் உஷா செல்வமணி, மக்களை தேடி மருத்துவ பணியாளர் மலர்விழி மற்றும் பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பல ர் கலந்து கொண்டனர் ஊராட்சி செயலாளர் ஒய்யனன் நன்றி கூறினார்.

    Next Story
    ×